அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 3 நிமிடத்தில் 900 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய சி.இ.ஓ! 0 பேரறிவாளன் விடுதலை: மத்திய அரசு இனியும் தாமதிக்க கூடாது - நீதிமன்றம் 0 காவல் துறை விசாரணையில் அதிகரிக்கும் இளைஞர்களின் மரணம்! 0 இங்கிலாந்தில் ஒமைக்ரான் வைரஸ் சமூக பரவலாக மாறிவிட்டது: அமைச்சர் தகவல் 0 தனக்கு தானே பிரசவம் பார்த்த பெண் மீது வழக்குப் பதிவு! 0 மத்திய அரசு என்ற ஒன்று இருக்கிறதா? - ஜோதிமணி எம்.பி! 0 இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை பிப்ரவரி மாதம் தாக்கும்! 0 நாகலாந்தில் பொதுமக்கள் சுட்டுக் கொலை: மத்திய அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் 0 'பஞ்சாப் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி': அமரிந்தர் சிங் அறிவிப்பு 0 திமுக அரசை கண்டித்து டிசம்பர் 9ல் அதிமுக மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் 0 ரஷ்யாவின் சிறந்த நட்பு நாடாக இந்தியா நிகழ்கிறது - விளாதிமீர் புதின் 0 இந்தியா - ரஷ்யா இடையே 21ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன! 0 கொரோனா விதிமுறையை மீறிய கமல்ஹாசன்: விளக்கும் கேட்கும் தமிழக அரசு! 0 அம்பேத்கர் வழியில் உறுதியேற்போம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! 0 அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு 252 வேட்புமனுக்கள் தாக்கல்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா கண்ணீர் அஞ்சலி!

Posted : சனிக்கிழமை,   அக்டோபர்   16 , 2021  12:40:36 IST

சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை முடிந்து வெளியில் வந்த சசிகலா, தீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக தெரிவித்திருந்தார். ஆனால், அவர் ஜெயலலிதாவின் ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காக அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாகக் கூறி பின்வாங்கினார். சட்டமன்றத் தேர்தல் முடிவுக்கு பிறகு அ.தி.மு.க. தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் தொலைபேசியில் பேசிய சசிகலா தான் விரைவில் கட்சியை கவனித்துக் கொள்ள வந்துவிடுவேன் என்று கூறி வந்தார். மேலும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்திருந்தார்.
 
இந்நிலையில் அ.தி.மு.க. பொன்விழா கொண்டாட்டங்கள் நாளை நடைபெறுகின்றன. இதையொட்டி இன்று மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மற்றும் அண்ணா சமாதிகளுக்கு சென்று சசிகலா மரியாதை செலுத்த முடிவு செய்தார். இதற்காக பாதுகாப்பு கேட்டு சசிகலா தரப்பில் சென்னை காவல் ஆணையரகம் மற்றும் தியாகராய நகர் காவல் ஆய்வாளரிடம் தனித்தனி மனுக்கள் அளிக்கப்பட்டன.
 
இதனையடுத்து இன்று காலை தியாகராயநகர் இல்லத்தில் இருந்து ஜெயலலிதா நினைவிடத்துக்கு மரியாதை செலுத்த புறப்பட்டார். சசிகலா மெரினாவுக்கு வருவதை அறிந்த ஏராளமான அதிமுக தொண்டர்கள் மெரினா கடற்கரையில் காத்திருந்தனர். சசிகலாவின் தி.நகர் இல்லத்திலும் இன்று காலை முதலே தொண்டர்கள் பார்க்க முடிந்தது. அதிமுக கொடி பொறுத்தப்பட்ட காரில் சசிகலா புறப்பட்டார்.மெரினாவுக்கு அவர் காரில் புறப்பட்டதும் வாசலில் காத்திருந்த தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
 
சென்னை தி.நகர் வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள ஸ்ரீனிவாச பெருமாள் - பத்மாவதி தாயார் திருக்கோயிலில் சசிகலா வழிபாடு செய்தார். மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்துக்கு வந்த சசிகலா மலர்கள் வைத்து மரியாதை செலுத்தினார். ஜெயலலிதா நினைவிடத்தில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். சுமார் நான்கரை ஆண்டுகளுக்கு பிறகு ஜெயலலிதா நினைவிடத்துக்கு வருகை புரிந்த சசிகலா கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.
 
தொடர்ந்து எம்.ஜி.ஆர் , அண்ணா சமாதிகளுக்கு சென்று மாலை அணிவிக்கும் சசிகலா அதன் பிறகு தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...