???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஆளுநர் மாளிகை முன் போராட்டம் ஸ்டாலின் உட்பட 3,500 பேர் மீது வழக்குப்பதிவு 0 பூரணசுந்தரிக்கு பணி மறுத்திருப்பது இடஒதுக்கீடு விதிமுறைகளுக்கே முரணானது: ஸ்டாலின் கண்டனம் 0 லக்கேஜ் டிரான்ஸ்போட்டுக்கு ‘பேக்ஸ் ஆன் வீல்ஸ்’. ரயில் பயணிகளுக்கான புதிய திட்டம் 0 பெண்கள் திருமண வயதை உயர்த்துவதை எதிர்த்து, முஸ்லீம் பெண்கள் அமைப்பு பிரதமருக்கு கடிதம் 0 வாழ்வா? சாவா? போட்டியில் சென்னை படுதோல்வி! 0 பீகார் தேர்தல்: இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி 0 மின்சார ரயில் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும்: முதலமைச்சர் பழனிசாமி கடிதம் 0 ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் திடீர் சந்திப்பு 0 "இந்த ஆண்டு எங்களுக்கானது இல்லை…" தோல்வி குறித்து தோனி பேட்டி! 0 கொத்தடிமைகளாக அடைத்து வைக்கப்பட்டிருந்த 5 சிறுமிகள் மீட்பு 0 சூரரைப்போற்று ரிலீஸ் தள்ளிவைப்பு! 0 "இந்தியா அசுத்தமானது" விவாதத்தில் டொனால்டு டிரம்ப் 0 மருந்தை இலவசமாகக் கொடுக்கவேண்டியது அரசின் கடமை, சலுகையல்ல: மு.க ஸ்டாலின் 0 விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்கம்: இலங்கை அரசு மேல்முறையீடு 0 புதிய கல்வி கொள்கையில் மும்மொழி கொள்கை ஏற்புடையது அல்ல: தமிழக அரசு கடிதம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தன்னை பற்றிய விவரங்களை 3-ம் நபருக்கு தரக்கூடாது: சசிகலா சிறைத்துறைக்கு கடிதம்

Posted : வெள்ளிக்கிழமை,   செப்டம்பர்   25 , 2020  00:03:59 IST

ஆர்.டி.ஐ மூலம் மூன்றாவது நபருக்கு தகவல் அளித்த விவகாரத்தில் சசிகலா தனது அதிருப்தியை சிறைத்துறைக்கு தெரிவித்துள்ளார்.
 
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக பெங்களூருவைச் சேர்ந்த நரசிம்ம மூர்த்தி என்பவர் வி கே சசிகலா விடுதலை தொடர்பான கேள்விகளை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டதற்கு ஜனவரி 21ஆம் தேதி சசிகலா விடுதலை ஆவார் என பெங்களூர் சிறை துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் "தன்னுடைய சிறைவாசம் , விடுப்பு மற்றும் விடுதலை குறித்த விவரங்களை மூன்றாவது நபருக்கு தெரிவிக்கக் கூடாது" என சசிகலா கடிதம் எழுதி உள்ளார்.
 
மேலும் இந்த கடிதம் தன்னுடைய வழக்கறிஞர் மூலம் தயார்படுத்தப்பட்டது என்றும் இதில் உள்ள ஆங்கிலத்தில் எட்டக்கூடிய அனைத்து விவரங்களும் தனக்கு தமிழில் விளக்க பட்டுள்ளதாகவும் அது அனைத்தும் சரி எனவும் தான் அறிந்து கொண்டதாகவும் அந்த கடிதத்தில் வி.கே. சசிகலா குறிப்பிட்டுள்ளார்.
 
சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. இவரது தண்டனைக் காலம் விரைவில் முடியவுள்ளதால் தமிழக அரசியலில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...