செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்பப்பட்டது
செய்தி உங்கள் நண்பருக்கு அனுப்ப முடியவில்லை. சிரிது நேரம் கழித்து முயற்சிக்கவும்..
நண்பருக்கு மின்னஞ்சல் செய்

காற்புள்ளிகளால் பிரித்து, செல்லுபடியாகும் மின்னஞ்சல் முகவரிகளை உள்ளிடவும்
அதிகபட்ச வரம்பான 200 எழுத்துக்குறியை மீறியது

செய்தியை உள்ளிடவும்
சசிகலாவை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற மறுப்பு
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சசிகலா பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கொரோனா காரணமாக குறைந்தது ஏழு…
மன்னிக்கவும், உங்கள் மின்னஞ்சலை எங்களால் அனுப்ப முடியவில்லை. சிறிது நேரம் காத்திருந்து, மீண்டும் முயற்சிக்கவும்.
சசிகலாவை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற மறுப்பு
Posted : வெள்ளிக்கிழமை, ஜனவரி 22 , 2021 19:09:16 IST
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சசிகலா பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கொரோனா காரணமாக குறைந்தது ஏழு நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும் என்பதால் விடுதலையாவதற்கு முன் சசிகலா சிறைக்கு திரும்ப வாய்ப்பு குறைவாக உள்ளது.
இதனிடையே, ஜனவரி 27ம் தேதி சசிகலா விடுதலையாவதில் எந்த சிக்கலும் இல்லை என, அவரது வழக்கறிஞர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுதலை தேதிக்குப் பிறகு சசிகலாவை சிறையில் வைத்திருக்க, சிறைத்துறைக்கு அதிகாரம் இல்லை எனவும் கூறப்படுகிறது.இதனிடையே, விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலாவை, மணிபால் மருத்துவமனைக்கு மாற்றுவதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. சசிகலாவை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற தடையில்லா சான்றிதழ் வழங்க விக்டோரியா மருத்துவமனை மறுப்பு தெரிவித்துள்ளது. விக்டோரியா மருத்துவமனையிலேயே அனைத்து வசதிகளும் இருப்பதால் வேறு மருத்துவமனைக்கு பரிந்துரைக்க முடியாது என குறிப்பிட்டுள்ளது.
மேலும் சிறையில் சசிகலாவுடன் இருந்த இளவரசிக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை பரப்பன அஹ்ரகார சிறை அதிகாரி உறுதிப்படுத்தியுள்ளார்.
|