???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இன்று தி.மு.க. செயற்குழு கூட்டம்! 0 தோல்வியை வாழ்வின் ஒரு அங்கமாக எடுத்துக்கொள்ளுங்கள்: பிரதமர் அறிவுரை 0 தமிழக அரசின் பெரியார் அண்ணா விருதுகள்: செஞ்சி ந.ராமச்சந்திரன், கோ.சமரசம் பெற்றனர்! 0 இளவரசர் பட்டத்தை துறந்தது ஏன்? ஹாரி விளக்கம்! 0 3 தலைநகர் மசோதாவை தாக்கல் செய்த ஜெகன் 0 5, 10-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கூடாது: நல்லாசிரியர் விருதை ஒப்படைத்த ஆசிரியர் 0 தன்னலமற்று உழைத்ததால்தான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன்: முதலைச்சர் 0 5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு தனித் தேர்வு மையமா? அமைச்சர் மறுப்பு 0 நிர்பயா குற்றவாளிகள் நால்வருக்கும் தூக்கு உறுதி! 0 ஆயுதங்கள் வாங்க இலங்கைக்கு ரூ.360 கோடி உதவி: அஜித் தோவல் 0 மாணவர்களுடன் பிரதமர் மோடி இன்று கலந்துரையாடல்! 0 திருச்சி: அரசு பேருந்து மீது தனியார் பேருந்து மோதி 4 பேர் பலி 0 குரூப் 1 தேர்வு: ஜனவரி 20-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் 0 கேரளம்: இந்து முறைப்படி மசூதியில் திருமணம்! 0 கடலூர் அருகே ஹைட்ரோகார்பன் எடுக்க ஏல அறிவிப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சிறையில் சசிகலாவுக்கு சிறப்புச் சலுகை வழங்கப்பட்டது: உயர்மட்டக்குழு ஆய்வில் தகவல்

Posted : ஞாயிற்றுக்கிழமை,   ஜனவரி   20 , 2019  21:25:23 IST

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலா மற்றும் இளவரசி ஆகியோருக்கு சிறையில் விஐபி-களுக்கான சலுகை வழங்கப்பட்டது உயர்மட்டக்குழு ஆய்வில் தெரியவந்துள்ளது.
 
சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, அவரது உறவினர் இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு விதிமுறைகளை மீறி சலுகைகள் அளிக்கப்பட்டதாக டிஐஜி ரூபா புகார் கூறியிருந்தார். ஆனால் அதை சிறைத்துறை உயரதிகாரிகள் மறுத்திருந்தனர்.
 
அது தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட ஒய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் தலைமையிலான உயர்மட்டக்குழு, சிறையில் ஆய்வு மேற்கொண்டு அது தொடர்பான அறிக்கையை கடந்த நவம்பரில் அரசிடம் சமர்ப்பித்தது.
 
அதை ஏற்று லஞ்ச ஒழிப்புத்துறைக்கு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டபோதும், அறிக்கை குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் அந்த அறிக்கை விவரங்கள் தற்போது கசிந்துள்ளன.
 
அதில் சசிகலாவுக்கும். இளவரசிக்கும், சிறையில் விதிகளை மீறி ஐந்து அறைகள் ஒதுக்கப்பட்டிருந்ததாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அச்சிறை வளாகத்தில் உள்ள 28 அறைகளி்ல் 100 பெண்கள் இருந்தனர்.
 
அறைக்கு நான்கு பேர் வீதம் தங்கவைப்பதற்கு பதிலாக சசிகலாவுக்கு ஐந்து அறைகள் ஒதுக்கியதுபோக மீதமிருந்த 20 அறைகளில் 98 பெண்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
 
மேலும் பூனைகள் நுழையாவகையில் 5 அறைகளுக்கு திரைச்சீலைகள் போடப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. குக்கர் மற்றும் சமையலுக்குத் தேவையான பொருட்கள் இருந்ததாக டிஐஜி ரூபா புகைப்பட ஆதாரம் தந்திருந்த நிலையில், உயர்மட்டக்குழு அங்கு 2017 ஆகஸ்டில் சென்றபோது அவை மாயமாகியிருந்ததாகவும் சிறை அலமாரியை துழாவியபோது சமையல் மஞ்சள்தூள் காணப்பட்டது. அது அங்கு சமையல் நடந்ததை உறுதி செய்ததாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 
மேலும், சசிகலா சொந்த உடைகள் அணிய அனுமதிக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டிய அக்குழு, பல்வேறு கடுமையான விதிமீறல்கள் நடந்திருப்பதாக அறிக்கை அளித்துள்ளது.
 
இந்த அத்துமீறல்கள், சிறை விதிமுறை மீறல்களாக கருதப்படும் என்றும் லஞ்ச வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்கும் என்றும் கர்நாடக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...