???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அக்கா என்னும் அம்மாவுக்கு வீரவணக்கம்!- தொல்.திருமாவளவன் 0 தமிழகம்: புதிதாக 5,175 பேருக்கு தொற்று; 112 பேர் உயிரிழப்பு 0 குஜராத் மருத்துவமனையில் தீவிபத்து: 8 பேர் பலி 0 அதிமுக பெற்ற சம்பளத்தை எஸ்.வி.சேகர் திருப்பித்தர தயாரா?: அமைச்சர் ஜெயக்குமார் 0 எம்.எல்.ஏ-க்கள் கருணாஸ், பவுன் ராஜூக்கு கொரோனா 0 கொரோனா அறிகுறி இருந்தால் ஆரம்பத்திலேயே மருத்துவமனை செல்லவேண்டும்: அமைச்சர் விஜயபாஸ்கர் 0 அயோத்தி ராமர்கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் மோடி! 0 திருமாவளன் சகோதரி கொரோனாவால் மரணம் 0 கு.க.செல்வம் திமுகவில் இருந்து தற்காலிக நீக்கம்! 0 நாடக இயக்குநர் அல்காசி மரணம்! 0 5,8-ஆம் வகுப்புக்கு பொதுத்தேர்வு இல்லை: அமைச்சர் செங்கோட்டையன் 0 தமிழகத்தில் ஒரே நாளில் 109 பேர் கொரோனாவுக்கு உயிரிழப்பு 0 தமிழகத்தில் 16 மாவட்டங்களில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு 0 வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பீலா ராஜேஷ் மீது புகார் 0 ஆளுநர் மாளிகை சுதந்திர தின வரவேற்பு நிகழ்ச்சி ரத்து
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

அன்னிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

Posted : வியாழக்கிழமை,   ஆகஸ்ட்   22 , 2019  22:27:01 IST

அன்னிய செலாவணி மோசடி வழக்கில் அமலாக்கத்துறையின் பதில் மனுவிற்கு விளக்கம் அளிக்க சசிகலா தரப்பிற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜெ.ஜெ. டிவிக்கு வெளிநாட்டில் இருந்து உபகரணங்கள் வாங்கிய அன்னிய செலாவணி மோசடி வழக்கு விசாரணை, சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் 13 ஆண்டுகளாக நடந்து வருகிறது.

பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவிடம் கடந்த ஜனவரி மாதம் காணொலி மூலம் 2-வது முறையாக எழும்பூர் நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

அப்போது, ஜெ.ஜெ. டிவியின் இயக்குனர்களின் ஒருவரான தன்னிடம், கேட்கப்பட்ட தொடர்பில்லாத கேள்விகளை ரத்து செய்ய வேண்டுமென சசிகலா உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இதற்கு பதில் மனு தாக்கல் செய்த அமலாக்கத்துறை, கேள்விகளை முடிவு செய்ய மனுதாரருக்கு உரிமையில்லை எனவும் கேள்விகளை திருத்த மாஜிஸ்திரேட்டுக்கு முழு அதிகாரம் இருப்பதாகவும் தெரிவித்தது.

மேலும் அமலாக்கத்துறையின் பதில் மனுவுக்கு விளக்கம் அளிக்க சசிகலா தரப்பிற்கு உத்தரவிட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரணையை வரும் செப்டம்பர் 3-ம்  தேதிக்கு ஒத்திவைத்தார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...