???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொரோனா இன்று: தமிழகம் 853; சென்னை 558! 0 ஜெ. வீட்டை தமிழக முதல்வர் இல்லமாக பயன்படுத்தலாம்!- நீதிமன்றம் 0 தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 17 ஆயிரத்து 728 ஆனது! 0 அரசுக்கு தெரிவிக்காமல் ரயில்களை அனுப்பக்கூடாது: பினராயி விஜயன் 0 ஊரடங்கு தோல்வியடைந்துவிட்டது என்பதை ஒப்புக்கொள்ளுங்கள்: ராகுல் காந்தி 0 புலம்பெயர் தொழிலாளர்கள் நிலை குறித்து உச்சநீதிமன்றம் வேதனை 0 11 நாட்கள் மது விற்பனை வருமானம் ரூ. 1062 கோடி! 0 ஜூன் 1 முதல் கிழக்கு கடற்கரை பகுதி மீனவர்கள் மீன்பிடிக்க அனுமதி 0 தமிழகத்தில் தள்ளிப்போகும் பள்ளிகள் திறப்பு 0 ஆறுமுகம் தொண்டைமான் மரணம்! 0 முதலமைச்சர் பழனிசாமி மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் ஆலோசனை 0 விமானம், ரயில் நிலையங்களில் டாக்சி, ஆட்டோக்களுக்கு அனுமதி 0 5 வயது சிறுவன் தாயைக் காண தனி ஆளாக விமானப் பயணம்! 0 இந்தியா உள்பட கூடுதலாக 11 நாட்டு மக்களுக்கு ஜப்பானில் நுழைய தடை 0 நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டங்கள் நடத்த ஏற்பாடு: வெங்கையா நாயுடு, ஓம் பிர்லா ஆலோசனை
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மதத்தின் பெயரால் நடக்கும் கொலைகள் கடந்த 6 ஆண்டுகளில் அதிகரிப்பு: சசி தரூர்

Posted : ஞாயிற்றுக்கிழமை,   செப்டம்பர்   22 , 2019  08:53:46 IST

புனேவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட எம்.பியும் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களுள் ஒருவருமான சசி தரூர் கடந்த ஆறு ஆண்டுகளில் மதத்தின் பெயரால் அதிக கொலைகள் நடப்பதாகக் குற்றம்சாட்டினார்.

"கடந்த 6 ஆண்டுகளாக நாம் என்ன பார்த்து கொண்டிருக்கிறோம்? புனேவில் மொஹ்சின் ஷேக் கொல்லப்பட்டார். பிறகு, மாட்டுக்கறி கொண்டு சென்றதாக கூறி முகமது அக்லக் கொல்லப்பட்டார். ஆனால், அது மாட்டுக்கறி அல்ல என்று பின்னர் தெரிவிக்கப்பட்டது. ஒருவேளை அது மாட்டுக்கறியாகவே இருந்தாலும் ஒருவரை கொல்லும் உரிமையை அவர்களுக்கு யார் கொடுத்தது?

பால் பண்ணைக்காக பசுக்களை லாரியில் ஏற்றிச் செல்ல பெலு கானுக்கு லைசென்சு வழங்கப்பட்டிருந்தது. அவரும் அடித்துக் கொல்லப்பட்டார். ஒரு தேர்தல் வெற்றி எதனையும் செய்வதற்கும், யாரையும் கொல்வதற்கும் அதிகாரத்தை கொடுக்கிறதா? என கேள்வி எழுப்பிய சசிதரூர்,

"ஜெய் ஸ்ரீ ராம் என்ற பெயரில் கொலைகள் செய்வது இந்து தர்மத்திற்கு எதிரானது. நான் ஒரு இந்துதான். ஆனால் அந்த வகையான இந்து அல்ல. இதுதான் நம்முடைய பாரதமா? இதைத்தான் நம்முடைய இந்து தர்மம் சொல்கிறதா? அடித்துக்கொல்கின்ற போது ஜெய் ஸ்ரீ ராம் என்று கூற சொல்லி வற்புறுத்துகிறார்கள், இது இந்து தர்மத்திற்கு அவமானம். அதேபோல கடவுள் ராமர் பெயரை சொல்லி கொலைகள் செய்வது, அவருக்கே அவமானம்." இவ்வாறு அவர் பேசினார்.
 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...