???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நட்சத்திரங்களுடன் ஒரு வண்ணத்துப்பூச்சி- 11 -இயக்குநர் ராசி அழகப்பன் எழுதும் தொடர் 0 நித்தியானந்தா ஆசிரமத்தில் சிறுவர், சிறுமியர்களுக்கு கொடுமை: முன்னாள் சிஷ்யை புகார்! 0 போராட்ட களத்தையே வாழ்வாக்கி வெற்றி கண்டவர் கலைஞர்: மு.க.ஸ்டாலின் புகழாரம் 0 இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! 0 திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை சந்திக்கிறார் சோனியா காந்தி! 0 ஹவுடி-மோடி: ஒரே மேடையில் தோன்றிய மோடி-டிரம்ப்! 0 இடைத்தேர்தலில் அ.தி.மு.கவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: விசிக அறிக்கை 0 மதத்தின் பெயரால் நடக்கும் கொலைகள் கடந்த 6 ஆண்டுகளில் அதிகரிப்பு: சசி தரூர் 0 நேருவால்தான் காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தானுடன் உள்ளது: அமித்ஷா குற்றச்சாட்டு 0 கீழடியில் பொருள்களுக்கு அருங்காட்சியகம் அமைக்க ஆலோசனை: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் 0 நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அ.தி.மு.க. விருப்ப மனு விநியோகத்தை தொடங்கியது 0 மஹாராஷ்டிரா, ஹரியானா மாநில சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக தேர்தல்! 0 வங்கி இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலை நிறுத்தம்! 0 தாயிடமிருந்து குழந்தைக்கு எச்.ஐ.வி பரவாமல் தடுப்பதில் உலக அளவில் தமிழகம் இரண்டாம் இடம்! 0 அமமுகவை தொடர்ந்து போட்டியில் இருந்து விலகிய மக்கள் நீதி மய்யம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

காங்கிரஸ் கட்சியில் உள்கட்சி தேர்தல் அவசியம்: சசி தரூர்

Posted : செவ்வாய்க்கிழமை,   செப்டம்பர்   10 , 2019  23:33:36 IST

காங்கிரஸ் கட்சி மக்களவை தேர்தலில் படு தோல்வியை சந்தித்தது. இதையடுத்து, தோல்விக்குப் பொறுப்பேற்று ராகுல் காந்தி கட்சித் தலைவர் பொறுப்பில் இருந்து விலகினார். தற்போது, காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் செயற்குழு உள்பட முக்கிய பொறுப்புகளுக்கு தேர்தல் அவசியம் என்று சசி தரூர் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய சசிதரூர் கூறுகையில், “ தற்காலிகத் தலைவராக சோனியா காந்தி தேர்வு செய்யப்பட்டது சரியான ஒன்று. இதற்கு முன்பு கட்சித் தலைவராக இருந்ததுடன், பல்வேறு சவால் நிறைந்த சூழ்நிலைகளை திறம்பட கையாண்டவர் சோனியா காந்தி. கட்சியில் பல்வேறு தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

காங்கிரஸ் செயற்குழுத் தலைவர் பதவிக்கும் தேர்தல் நடத்த வேண்டியது அவசியமாகும். உள்கட்சித் தேர்தலால் கட்சிக்கு புதிய உத்வேகம் கிடைக்கும். 2014 மக்களவைத் தேர்தலைக் காட்டிலும், இந்த ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜகவின் வாக்குவங்கி கூடியுள்ளது. பிரதமர் மோடி நல்லது செய்கிறார் என்று மக்கள் நம்புகின்றனர்.  நாம் விமர்சிக்கும் போது உண்மைத்தன்மை இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்” என்றார்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...