அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 டெல்லி பயணம் மகிழ்ச்சியாக இருந்தது – ஓபிஎஸ் 0 இலங்கைக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றிய இந்திய மகளிர் அணி! 0 எகிறியடிக்கும் ஏக்நாத் ஷிண்டே.. ஆபத்தில் மகாராஷ்டிர ஆட்சி! 0 குஜராத் கலவர வழக்கு: பிரதமர் மோடிக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்! 0 மெட்ரிக் பள்ளிகளில் கட்டாயம் இடஒதுக்கீடு! 0 தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் மனு தாக்கல்! 0 பா.ஜ.கவையும் யாராவது உடைக்கலாம்: மம்தா பானர்ஜி எச்சரிக்கை 0 அக்னிபத் திட்டத்தின் கீழ், விமானப்படை, கடற்படையில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! 0 ஜனாதிபதி தேர்தல்: இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் திரவுபதி முர்மு 0 அ.தி.மு.க. உள்விவகாரங்களில் பா.ஜ.க. என்றுமே தலையிட முடியாது: ஜெயக்குமார் 0 திமுகவை அழிக்க நினைத்தவர்கள் அழிந்துபோயிருக்கிறார்கள்: மு.க. ஸ்டாலின் 0 ஜூலை 11-ல் அதிமுக பொதுக்குழு கூட்டம்: அவைத் தலைவர் அறிவிப்பு 0 சட்டத்துக்கு புறம்பான பொதுக்குழுவை நிராகரிப்பதாக கூறி மேடையில் கோஷமிட்ட ஓபிஎஸ் தரப்பு 0 அதிமுக பொதுக்குழு: சி.வி.சண்முகம் ஆவேசம் 0 அக்னிபத் திட்டத்தை எதிர்ப்பவர்கள் பொறுக்கிகள்: இயக்குநர் பேரரசு காட்டம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

சார்பட்டா பரம்பரை: திரை விமர்சனம்

Posted : வியாழக்கிழமை,   ஜுலை   22 , 2021  16:04:28 IST


Andhimazhai Image

அது போட்டிக்களம். யாருமே நீங்கள் ஜெயிப்பீர்கள் என்று நினைக்கவில்லை. உங்களைப் பொருட்படுத்தவும் ஆளில்லை. தனி ஆள். பயிற்சியோ பயிற்சியாளரோ கிடையாது. உங்களிடம் இருப்பதெல்லாம் அச்சமின்மை ஒன்றுதான். நன்கு பயிற்சிபெற்ற எதிராள் ஒற்றைக் கையில் உங்களை வீழ்த்திவிடுவேன் எனக் கொக்கரிக்கிறான்.  உங்களை மலிவாக நினைத்து ஒற்றைக்கையுடன் சண்டையிடும் அவனை நீங்கள் வீழ்த்திவிட்டால்…? நினைத்துப் பார்க்கவே புல்லரிக்கும் நிகழ்வை, Underdog  ஆகவே கருதப்பட்ட ஒருவனின் எழுச்சியைப் படமாக்கி இருக்கிறார் பா.ரஞ்சித்.

 

வடசென்னையின் பாரம்பரிய குத்துச்சண்டைப் போட்டிகளின் பின் புலத்தில் வந்திருக்கிறது சார்பட்டா பரம்பரை. ஆர்யாவும் பயிற்சியாளராக வரும் பசுபதியும் அப்படியே வாழ்ந்திருக்கிறார்கள். அதுவும் டான்சிங் ரோஸாக வரும் வீரரை ஆர்யா வீழ்த்தியபிறகு ரிங்குக்குள் வந்து நிற்கிறார் பாருங்கள் பசுபதி… முகமெல்லாம் அப்படி ஒரு பூரிப்பும் பெருமையும்…

 

ஆர்யாவுக்கு ஏகப்பட்ட எமோஷன்களைக் கொண்டுவரும் வாய்ப்பு. தன் திறமையை வளர்த்துக்கொண்டிருக்கிறார். கட்டுகட்டான உடலுடன்  ஆண்மையின் அடையாளமாக களமிறங்கி அடித்து ஆடி இருக்கிறார்.

 

ஒரு பக்கம் சார்பட்டா பரம்பரையில் ஏராளமான நடிகர்கள், எதிர்தரப்பில் பெரிய குழு.. எல்லோருக்கும் நல்ல வாய்ப்புகள் கொடுத்து திரைக்கதை எழுதி இருக்கிறார்கள் ரஞ்சித்தும் தமிழ்ப்பிரபாவும்.

 

அதுவும் ஆங்கிலத்தில் பேசித்தள்ளும் டாடி கெவின் பாத்திரத்தில் வரும் ஜான் விஜய், புறக்கணிப்பால் புழுங்கும் கலையரசன், ஆட்டங்களை செட் பண்ணி காசுபார்க்கும் காளிவெங்கட் என மறக்கமுடியாத பாத்திரங்கள்.

 

கதையின் காலத்தை எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்ட 1975ஐ ஒட்டிய திமுக ஆட்சிக்காலத்தில் வைத்து பழசை நினைவு படுத்துகிறார் இயக்குநர். இதில் எந்த அரசியல் பஞ்சாயத்தும் வராது என நம்புவோம். அந்த காலகட்ட வடசென்னையை கண்முன் கொண்டுவர கலை இயக்குநர் ராமலிங்கம் கடுமையாக உழைத்திருக்கிறார்.

 

கபிலனின் அம்மா பாக்கியம் பாத்திரம்,  மனைவி மாரியம்மா பாத்திரம் இரண்டும் படத்தில் கதையின் சுவாரசியத்துக்காகவும் விறுவிறுப்பைக் கூட்டுவதற்காகவுமே படைக்கப்பட்டுள்ளன. அவர்கள் தரும் உணர்ச்சிப் பங்களிப்பு சிறப்பானது. சரியாக சண்டைகளுக்கு முதல்நாள் நடக்கும் மாரியம்மாவின் ரொமான்ஸ் அடம்பிடிப்புகள் நமக்குத்தான் டென்ஷனை ஏற்றுகின்றன.

 

நாயகன் – வில்லன் என்ற நேர்க்கோட்டு எல்லையில் இல்லாமல் ஏராளமான கிளைகள், உணர்ச்சிகள் இருக்கின்ற படம் இது. முழுமையாக ஒரு விளையாட்டுக் கலாச்சாரத்தை திரையில் காண்பித்திருக்கிறார்கள். வேம்புலியாகவும் டான்ஸிங் ரோஸாகவும் வரும் நடிகர்களையும் குறிப்பிட்டு சொல்லலாம்.

 

நீயே ஒளி பாடலில் மட்டுமல்லாமல் பின்னணி இசையிலும் வழக்கம்போல் ஸ்கோர் செய்துள்ளார் சந்தோஷ் நாராயணன். முரளியின் காமிராவும் அசலான குத்துச்சண்டையின் கோணங்களை சர்வதேச தரத்தில் ஒளி அமைப்புடன் காட்டுகிறது. இருளும் ஒளியும் நிறைந்த கதை அமைப்புக்கு தகுந்த காட்சி கோணங்கள்.

 

நன்கு தசையைச் செதுக்கிய உடல்கள் குத்துச்சண்டை ரிங்கில் நின்று மோதிக்கொள்ளும்போது ஆண் ஹார்மோன்களின் ஆதிக்கம் பீறிட்டு எழும். இது ஒவ்வொரு சட்டகத்திலும் தெரிகிறது. சார்பட்டா பரம்பரையின் மூலமாக இதுவரை சரியாக சொல்லப்படாத ஒரு பிராந்தியத்தின் கலாச்சார முகத்தை முன்வைத்துள்ளார் ரஞ்சித்.

 

-எம்யெம். 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...