???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகம்: 5,835 பேருக்கு புதிதாக கொரோனா; 119 பேர் பலி 0 கட்சி சார்பற்ற எம்எல்ஏ-வாக செயல்படப்போகிறேன்: கு.க. செல்வம் 0 உடுமலை சங்கர் கொலை வழக்கு: உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு 0 நீட் தேர்வை ஆன்லைனில் நடத்த முடியாது: தேசிய தேர்வு முகமை 0 ஓர்வழி நின்று நேர்வழி சென்றால் நாளை நமதே: ஓ.பி.எஸ் அறிவுரை 0 மக்களுக்கு புரியும் மாநில மொழிகளில் EIA 2020 வரைவை வெளியிடுங்கள்: பார்வதி 0 1947லிருந்து நாடு காணாத சரிவு காணலாம்: இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி 0 எடப்பாடி பழனிசாமிதான் முதலமைச்சர் வேட்பாளர்: ஆர்.பி.உதயகுமார் 0 ராஜேந்திர பாலாஜியின் கருத்து கட்சியின் கருத்தல்ல: ஜெயக்குமார் 0 தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை தொடரும்: தலைமை செயலாளர் 0 ஜெ. இல்லத்தை நினைவு இல்லமாக்குவது கொள்கை முடிவு: தமிழக அரசு 0 இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 23 லட்சத்தை தாண்டியது 0 EIA வரைவு அறிக்கை; நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு 0 தமிழகம்: 5,834 பேருக்கு கொரோனா பாதிப்பு: 118 பேர் உயிரிழப்பு 0 சமூக நீதியைக் காக்கும் தீர்ப்பு: பெண்கள் சொத்துரிமை தீர்ப்பு குறித்து முதலமைச்சர்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சரோஜ்கான் - நடன ராணி!

Posted : வெள்ளிக்கிழமை,   ஜுலை   03 , 2020  06:53:16 IST


Andhimazhai Image

இரண்டாயிரம் பாடல்களுக்கும் மேல் நடனம் அமைத்தவரான  பாலிவுட்டின் மிகப் பிரபலமான நடன அமைப்பாளர் சரோஜ்கான், மரணம் அடைந்துவிட்டார். அவரது கற்பித்த நடன அடவுகள் வெள்ளித்திரையில் வைஜயந்திமாலா, ஸ்ரீதேவி, மாதுரி தீட்சித், ஐஸ்வர்யா ராய் என அழகிய பிம்பங்களின் அசைவுகளாகச் செதுக்கப்பட்டிருக்கின்றன.

 

ஆணாதிக்கம் மிகுந்த பம்பாய் திரையுலகில் தன்னைத்தானே செதுக்கிக்கொண்டு ஒரு வெற்றிகரமான நடன இயக்குநராக உருவானவர் சரோஜ்.

 

1947 தேசப்பிரிவினையை யொட்டி பாகிஸ்தானில் இருந்து இவரது பெற்றோர் மும்பைக்கு வந்து சேர்ந்தனர். அங்கிருந்து வருகையில் வெறுங்கையுடன் தான் வந்தனர். அவர்கள் நகையும் பணமும் ஒரு  பையில் போட்டு எடுத்து வந்தபோது, யாரோ மாற்றி எடுத்துக்கொண்டு போய்விட, பாம்பேயில் அவர்களை வறுமைதான் வரவேற்றது. வந்த அடுத்த ஆண்டு இங்கே பிறந்தவர்தான் சரோஜ்.

 

அவருக்கு மூன்று வயது ஆனபோது, தாய் மீண்டும் கருவுற்றிருந்தார். சரோஜ், தன் கைவிரல்களால் ஏதோ அடிக்கடி சைகை காட்டிக்கொண்டிருப்பதைக் கொண்டு அவர் கவலைப் பட்டு, தான் அடிக்கடி சிகிச்சைக்காகப் போகும் மருத்துவரிடம் தன் மகளைப் பற்றி சொன்னார். மருத்துவர், உன் மகளுக்கு நடனம் ஆடப் பிடித்திருக்கிறது. அவளை சினிமாவுக்கு அனுப்பு என்றார். அவருக்கு இருந்த தொடர்புகள் மூலம் சரோஜை குழந்தை நட்சத்திரமாக சினிமாக்களில் நடிக்க வாய்ப்பும் வாங்கித் தந்தார்.

 

குடும்பத்துக்கும் பணத்தேவை இருந்தது. சரோஜ் ஒன்பது வயது வரை ஏராளமான படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். பிறகு அவருக்கு வாய்ப்புகள் குறைந்தன. எனவே குழு நடன ஆட்டக்காரியாக சினிமாவில் தொடர்ந்தார். இவர் தலைமை ஒட்ட வெட்டி இருந்ததால், வெஸ்டர்ன் டான்ஸ்கள், உடலை வளைத்து செய்யும் வித்தைகள் மட்டுமே செய்யவேண்டி இருந்தது.

 

அப்போது நடன இயக்குநராக இருந்த சோஹன்லால், இவருக்கு வாய்ப்புகள் தந்தார். ஒருமுறை நடிகை ஹெலனின் ஆட்ட அசைவுகளை இவர் செய்து காட்டியதைப் பார்த்த சோஹன்லால், இவரையே தன் உதவியாளராக நியமித்துக்கொண்டார். அப்போது சரோஜுக்கு வயது 12 தான். மாஸ்டர் சொல்வதை நடிகைகளுக்கு ஆடிக்காட்டுவது இவர் வேலை.

 

பதின்மூன்று வயதில் மாஸ்டரையே கல்யாணம் செய்துகொண்டார் சரோஜ். அவருக்கு அடுத்த ஆண்டே குழந்தையும் பிறந்தது.  மாஸ்டருக்கு உதவியாக இருந்தாலும் தனக்கு நடனம் அமைக்கத் தெரியாது என்று கருதிய சரோஜுக்கு அப்போது ஒரு வாய்ப்பு வந்தது.

 

திட்டமிட்டபடி மாஸ்டரால் ஒரு படத்துக்கு நடனம் அமைக்க வர  முடியவில்லை. வேறு படத்துக்காக அவர் ஐரோப்பா செல்லவேண்டிய சூழ்நிலை. என சரோஜைக் கூப்பிட்டு நீயே செய்துவிடு என்றார்கள். அய்யோ எனக்குத் தெரியாதே என்றார் சரோஜ். உன் மாஸ்டர் எப்படிச் செய்வாரோ அப்படியே நீயும் செய்துவிடு என்று அப்பட இயக்குநர் ஆர்.எல். சந்தோஷி ( இப்போதைய இயக்குநர் ராஜ்குமார் சந்தோஷியின் அப்பா) வழிகாட்ட,, தன்னாலும் நடனம் அமைக்க முடியும் என்று சரோஜ் உணர்ந்தார்.

 

மாஸ்டர் சோஹன்லாலுக்கு ஏற்கெனவே திருமணம் ஆகி குழந்தைகளும் இருந்தார்கள். பிறகு சில ஆண்டுகளில் சரோஜ் மாஸ்டரைப் பிரிந்தார். தன் பிள்ளைக்கு அப்பா பெயராக தன் பெயரை அளிக்க சோஹன்லால் மறுத்ததால் பிரிந்தோம் என்கிறார் சரோஜ்.

 

மீண்டும் குழு நடனம். இடையே சிறு சிறு நடன வாய்ப்புகள் என எழுபதுகளில் அவர் வாழ்க்கை ஓடியது. அச்சமயத்தில் பத்தான் இனத்தைச் சேர்ந்த சர்தார் ரோஷன் கான் என்பவரை சரோஜ் மணந்துகொண்டார். அதிலிருந்து வந்ததுதான் கான் என்ற பெயர்… சரோஜ்கான்.

 

அப்போது திரையுலகில் இருந்த பிரச்னை என்னவென்றால் ஆண்கள்தான் நடன இயக்குநர் ஆகமுடியும். பெண்களுக்கு அந்த அங்கிகாரம் இல்லை. அதை உடைக்கும் வாய்ப்பு சரோஜுக்கு போராட்டத்துக்குப் பிறகு கிடைத்தது. 1974-ல் கீதா மேரா நாம் என்ற படனத்துக்கு டான்ஸ் மாஸ்டர் ஆனார். ஆனால் இப்படியே செய்தாலும் அவருக்கு புகழும் பெயரும்கிடைக்க அவர் மேலும் பத்தாண்டுகளைத்தாண்டி காத்திருக்க வேண்டி இருந்தது.

 

மிஸ்டர் இந்தியா படத்தில் ஸ்ரீதேவி ஹவா ஹவாயி பாடலுக்கு ஆடிய நடனத்தை வடிவமைத்தபோது சற்று திரும்பிப் பார்க்கப்பட்டார். நாகினி, சாந்தினி போன்ற ஸ்ரீதேவி படங்கள் அமைந்தன. அப்போது வெளியான தேஸாப்(1988) படம் பெரிய ஹிட். அதில் ஏக் தோ தீன் என்ற ஒரு பாடலுக்கு மாதிரி தீட்சித் ஆடிய ஆட்டம்… பட்டி தொட்டியெல்லாம் சிலாகிக்கப்பட்டது.

 

சரோஜ்கான் என்ற டான்ஸ் மாஸ்டரின் அடுத்த கட்ட வாழ்க்கை இப்போதுதான் தொடங்கியது. “ அதற்கு முன்புவரை ஒரு பாடலுக்கு 15000-20000 ரூபாய் வரை தருவார்கள். இந்த பாட்டுக்குப் பின்னர்தான் ஒரு லட்சம்  வாங்க தொடங்கினேன்,” என்று தன் வெற்றிக்கதையைச் சொல்லும் உரை ஒன்றில் குறிப்பிடுகிறார்.

 

அதன் பின் மாதுரியுடன் இவர் அமைத்த நடன அசைவுகள் ஒவ்வொன்றும் பேசப்பட்டன. அதன் உச்சம் சோகி கே பீச்சே கியாஹை? பாடல். தக் தக் கர்னே லகா,  தம்மா தம்மா லகே போன்ற பாடல்கள் புகழ்பெற்றன.

 

பிறகு மாதுரிக்கு வாய்ப்புகள் குறைந்தபோது ஐஸ்வர்யா ராய் நடித்த தால், குரு, ஹம் துல்கே  சுகே சனம் போன்ற படங்கள், பிறகு மாதுரி தீட்சித், ஐஸ்வர்யா ராய் இருவரும் ஆடித்தீர்த்த தேவதாஸ், லகான், டான் போன்ற படங்களில் சரோஜ்கான் மேலும் உச்சங்களைத் தொட்டார். 2007-ல் வெளியான சாரதா ராமநாதன் இயக்கிய சிருங்காரம் படத்தில் பாரம்பரிய பரத நாட்டியத்தை அடிப்படையாகக் கொண்டு நடனம் அமைத்துக் கொடுத்தார்.

 

பிலிம்பேர் விருதுகள் நடன அமைப்புக்காக முதல்முதலில் அளிக்கப்பட்டபோது(1989) பெற்றவர் சரோஜ்கான். இதுமட்டும் அல்லாமல் மூன்று முறை தேசிய விருதும் பெற்றிருக்கிறார்.

 

“எவ்வளவு பிரச்னை வந்தாலும் போராடுங்கள்,” என்று குறிப்பிடும் சரோஜ்கான், தான் ஆட்டுவித்த நடன அசைவுகள் மூலமாக ரசிகர்கள் மனத்தில் வாழ்வார்.

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...