???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 வைரமுத்து மீது ஏன் நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள்: திலகவதி கேள்வி 0 பாலியல் துன்புறுத்தல் திரைத்துறையில் மட்டுமல்ல, எல்லா துறைகளிலும் இருக்கிறது: கமல் 0 நியாய விலை கடை ஊழியர்கள் இன்றுமுதல் வேலைநிறுத்தம் 0 பெட்ரோல் விலையேற்றம்: எண்ணெய் நிறுவன அதிபர்களுடன் பிரதமர் ஆலோசனை 0 என் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் பொய்யானவை: அமைச்சர் எம்.ஜே அக்பர். 0 லஞ்ச ஒழிப்புத்துறை அதிமுகவின் கீழ் இயங்குவது வெட்கக்கேடானது: மு.க. ஸ்டாலின் 0 என்னை விலைக்கு வாங்க முயன்றார்கள்: கமல் ஹாசன் 0 தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி பினு கைது 0 #MeToo புகாரை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழு: மேனகா காந்தி அறிவிப்பு 0 மக்களவைத் தேர்தல் குறித்து விவாதிக்க திமுக உயர்நிலை செயல்திட்ட கூட்டம்! 0 முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி காலமானார் 0 முதலமைச்சர் மீதான புகார் சிபிஐக்கு மாற்றம்: உயர்நீதிமன்றம் உத்தரவு 0 புதுச்சேரி ஆளுநர் மீது முதல்வர் ஊழல் குற்றச்சாட்டு 0 ரஃபேல் ஊழலை மூடி மறைக்கவே நிர்மலா சீதாராமன் பிரான்ஸ் பயணம்: ராகுல் காந்தி. 0 முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் சொத்துகள் முடக்கம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சாரிடான் உள்ளிட்ட 328 வகை வலி நிவாரண மாத்திரைகளுக்கு தடை

Posted : வியாழக்கிழமை,   செப்டம்பர்   13 , 2018  22:55:31 IST

மக்களுக்கு நன்கு அறிமுகமான சாரிடான் உள்ளிட்ட 328 வகை வலி நிவாரண மருந்து, மாத்திரைகளின் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதனால், பல்வேறு நிறுவனங்களுக்கு 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்து, மாத்திரைகளின் விற்பனை மற்றும் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

 
சாரிடான் போன்ற மருந்து, மாத்திரைகள், எப்.டி.சி. எனப்படும் பிக்சட் டோஸ் காம்பினேஷன் முறையில் தயாரிக்கப்படுகின்றன. அவற்றில், இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட வேதிப் பொருட்கள், குறிப்பிட்ட அளவில் இடம்பெற்றிருக்கும். இத்தகைய எப்.டி.சி. மருந்துகள், வலிகளில் இருந்து உண்மையாக நிவாரணம் அளிப்பதில்லை என்றும், போலி மருத்துவர்கள் அவற்றை பரிந்துரைப்பதால் அவை பாதுகாப்பானவை அல்ல என்றும் 2016, மார்ச் மாதத்தில், 344 வகை எப்டிசி மருந்துகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது.
 
அதை எதிர்த்து, அந்த மருந்துப் பொருள்களின் தயாரிப்பு நிறுவனங்கள், பல்வேறு உயர் நீதிமன்றங்களிலும், உச்ச நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடர்ந்தன. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக அறி்க்கை அளிக்க, மத்திய மருந்துப்பொருள் தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவுக்கு, கடந்த டிசம்பர் 2017-ல் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து ஆய்வறிக்கையின் அடிப்படையில், 16 மருந்துப் பொருட்களைத் தவிர்த்து மற்ற 328 மருந்துப் பொருட்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. அவை 1988-க்கு முன்பிருந்தே விற்பனை செய்யப்பட்டு வருவதால், விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
 
இதனால், டி-கோல்ட் டோட்டல், கோரக்ஸ், பென்சிடில், டெக்சிலிக்ஸ் உள்ளிட்ட 740 கோடி ரூபாய் வர்த்தக மதிப்புள்ள, 16 மருந்து, மாத்திரைகள் மற்றும் சிரப்புகள் தடையில் இருந்து தப்பியுள்ளன. எனினும் அவற்றின் மீது ஆய்வை புதிதாக மத்திய அரசு தொடங்கலாம் என, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
 
தடை செய்யப்பட்ட மருந்துகளைப் பொருத்தவரை, சாரிடான், பான்டெர்ம் பிளஸ் கிரீம், டேக்சிம் ஏஇசட்., நீரிழிவு நோய்க்கான குளுக்கோநார்ம் பிஜி உள்ளிட்ட 328 வகைகளைச் சேர்ந்த 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வலி நிவாரணிகள், சிரப்கள், தோல் சிகிச்சை மருந்துகளை இனி உற்பத்தி செய்யவோ, விற்கவோ முடியாது.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...