![]() |
சர்தார்: திரைவிமர்சனம்!Posted : வெள்ளிக்கிழமை, அக்டோபர் 21 , 2022 19:33:00 IST
![]()
தமிழக காவல்துறையில் இன்ஸ்பெக்டராக இருக்கும் விஜய்பிரகாஷ் (கார்த்தி) எந்த வழக்காக இருந்தாலும் திறம்பட முடித்துக்கொடுப்பதுடன், அதன் மூலம் தன்னை பிரபல்யப்படுத்திக் கொள்பவர். அப்படி எதிர்பாராத விதமாக ஒரு வழக்கைக் கையில் எடுக்கிறார். யாரோ ஒருவர் உளவுத்துறையின் முக்கிய கோப்பு ஒன்றை திருடிச் செல்கிறார். அந்த ஆவணம் யாரைப் பற்றியது? எதற்காக இந்தத் திருட்டு என்கிற கேள்விகளோடு கதை துவங்குகிறது.
|
|