???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அரசியல் கட்சிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை 0 ரஃபேல் வழக்கு: மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல் 0 மெகா கூட்டணியால் தி.மு.க. கதிகலங்கி உள்ளது: தமிழிசை 0 பொன்.மாணிக்கவேல் நியமன வழக்கு ஒத்திவைப்பு 0 விஜயகாந்துடன் திருநாவுக்கரசர் திடீர் சந்திப்பு 0 அதிமுக கூட்டணியில் என்.ஆர். காங்கிரசுக்கு புதுவை தொகுதி 0 மோதி என்கிற வார்த்தையை பயன்படுத்த விரும்பவில்லை: கமல் 0 கட்சி பிரமுகர்கள் வீட்டில் வருமான வரி சோதனை 0 உயிரிழந்த வீரரின் குடும்பத்தினருக்கு ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி நேரில் ஆறுதல் 0 ஜெயலலிதாவின் பிறந்த நாளில் ரூ.2000 நிதியுதவி திட்டம் தொடக்கம் 0 ஐஜி முருகன் மீதான பாலியல் புகார்: விசாரணைக்கு இடைக்கால தடை! 0 கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ம.கவிலிருந்து விலகிய இளைஞரணிச் செயலாளர் 0 ராமதாஸ் வீட்டில் எடப்பாடி பழனிசாமிக்கு விருந்து! 0 அயோத்தி வழக்கு: பிப்ரவரி 26-ல் விசாரணை தொடக்கம் 0 விளையாட்டு வீரர்களுக்கு 3% இட ஒதுக்கீடு: அரசாணை வெளியீடு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க சர்கார் படக்குழு முடிவு

Posted : வியாழக்கிழமை,   நவம்பர்   08 , 2018  22:13:41 IST

விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சர்கார் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க படக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.
 
விஜய் நடிப்பில் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான சர்கார் படத்தில், அரசின் இலவச திட்டங்களை விமர்சித்து காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன. அரசு வழங்கிய இலவச மிக்ஸி, கிரைண்டரை தீயில் எரிப்பது போல காட்சிகள் இருந்தது. இதற்கு அமைச்சர்கள் கண்டனம்  தெரிவித்திருந்தனர்.
 
மதுரை அண்ணாநகரில் எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா தலைமையில், சர்கார் படம் வெளியாகியுள்ள தியேட்டருக்கு எதிரே இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. 100-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தியதன் காரணமாக 3 திரையரங்குகளில் சர்கார் படத்தின் பிற்பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.
 
கோவையிலும் படத்துக்கு எதிராக அதிமுகவினர் போராட்டம் நடத்தினர். தியேட்டரில் வைக்கப்பட்டிருந்த பட பேனர்கள் கிழிக்கப்பட்டது. இதனால், பேனர்களை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
 
சென்னை காசி தியேட்டரிலும் அதிமுகவினர் குவிந்து, படத்துக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அங்கிருந்த பேனர்களையும் கிழித்தனர். இதனால், பரபரப்பான சூழல் நிலவியது.
 
தமிழகத்தின் பல பகுதிகளிலும் இதுபோன்ற போராட்டங்கள் தொடர்ந்தன. இதனை அடுத்து, திரையரங்க உரிமையாளர் சங்கம் சார்பில், சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்குவது குறித்து படத்தயாரிப்புக் குழுவிடம் பேசியதாகவும், பேச்சுவார்த்தையில் காட்சிகளை நீக்க படக்குழு ஒப்புதல் அளித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...