???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை: இம்ரான் கான் 0 ப.சிதம்பரத்தை சிபிஐ கையாளும் விதம் மிகவும் வருத்தமளிக்கிறது: மம்தா பானர்ஜி 0 அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவு! 0 ஸ்டெர்லைட் ஆலையில் விஷவாயு தாக்கி 13 ஊழியர்கள் இறந்தது உண்மையா? ஆதாரம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு 0 ப.சிதம்பரத்திடம் இன்று இரவு முதல் சிபிஐ விசாரணை தொடங்குகிறது! 0 அன்னிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு 0 நிலவின் முதல் படத்தை அனுப்பியது சந்திரயான் - 2 0 காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்வது குறித்து டிரம்ப் மீண்டும் பேட்டி 0 காஷ்மீர் விவகாரத்தை திசை திருப்பவே ப. சிதம்பரம் கைது நடவடிக்கை: கார்த்தி சிதம்பரம் 0 ப.சிதம்பரத்தை வேட்டையாட துடிப்பது வெட்கக்கேடானது: பிரியங்கா காந்தி 0 நீதிக்கு தலைவணங்குவேன்; தலைமறைவாக மாட்டேன்: கைதாகும் முன் பேட்டியளித்த ப.சிதம்பரம் 0 ப.சிதம்பரத்துக்கு எதிராக அதிகார துஷ்பிரயோகம்: ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் கண்டனம் 0 காஷ்மீர் விவகாரம்: டெல்லியில் திமுக இன்று ஆர்ப்பாட்டம் 0 ப. சிதம்பரம் கைதை கண்டித்து தமிழகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் 0 10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

வெற்றிமீது ஆசை வைத்தவரின் துயர முடிவு!

Posted : வியாழக்கிழமை,   ஜுலை   18 , 2019  03:17:05 IST


Andhimazhai Image
தமிழகத்தின் புகழ்பெற்ற உணவகமான சரவண பவனின் உரிமையாளர் ராஜகோபால் இன்று காலமானார். சரவண பவன் மூலம் அடையாளத்தையும், புகழையும் அடைந்த இவர், மூன்றாவது திருமணம் செய்துகொள்ளும் முயற்சியால் கொலை வழக்கையும், ஆயுள் தண்டனையையும் சந்தித்து இப்போது மறைந்திருக்கிறார்.
 
1981-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, 38 வருட பாரம்பரியத்துடன் இன்று தமிழகம் மட்டுமின்றி பல வெளிமாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் சரவண பவன் உணவகம் செயல்பட்டு வருகிறது. இதனை உருவாக்கி வளர்த்தெடுத்த ராஜகோபால், ஒரு காலத்தில் சாதனை மனிதராகவே அனைவராலும் பார்க்கப்பட்டிருக்கிறார்.
 
ஜோதிடத்தில் தீவிரமான நம்பிக்கை கொண்டதன் விளைவாக தனது நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்தவரின் இளம் மகளை மூன்றாவது திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தார் ராஜகோபால். இதற்கு ஒப்புக்கொள்ளாத அப்பெண் தனது காதலரையே திருமணம் செய்துகொண்டார். இதனைத்தொடர்ந்து அப்பெண்ணின் காதல் கணவர் பிரின்ஸ் சாந்தகுமார் கொல்லப்பட, அதற்கு காரணமான ராஜகோபால் மற்றும் அவரது கூட்டாளிகள் 11 பேர் வழக்கில் சிக்கினர்.
 
முதலில் இந்த வழக்கை விசாரித்த பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் 2004-ஆம் ஆண்டு ராஜகோபாலுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூபாய் 55 லட்சம் அபராதமும் மட்டுமே விதித்தது. ஆனால் இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தபோதுதான் கடந்த 2009-ஆம் ஆண்டு அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஒருவேளை அவர் மேல்முறையீடு செய்யாமல், தண்டனையை அதிகரிக்க போலீஸ் தரப்பில் வாதிடாமல் இருந்திருந்தால் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்காது.
 
பின்னர், இதனை எதிர்த்தும் ராஜகோபால் தரப்பில் மேல்முறையீடு செய்தனர். ஆனால், அவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை கடந்த மார்ச் மாதம் உச்ச நீதிமன்றம் உறுதி செய்து அனைவரையும் சரணடைய உத்தரவிட்டது.
 
உறுதி செய்யப்பட்ட சிறை தண்டனையிலிருந்து விலக்கு அளிக்க கோரிய ராஜகோபாலின் மனுவும் தள்ளுபடி செய்ததால் அவர் கட்டாயம் சரணடைய வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த அவர், ஆம்புலன்ஸில் வந்து நீதிமன்றத்தில் சரணடைந்தார். மேலும் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருக்கும் அவருக்கு சிகிச்சை கோரப்பட்டதால், சிறைக்கு செல்லாமலேயே அவர் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சையளிக்க அனுமதிக்க வேண்டுமென்ற அவரது மகனின்  கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம், அதற்கு அனுமதி அளித்தது. இந்நிலையில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த ராஜகோபால் இன்று காலமானார்.
 
ஜோதிடத்தின் மீது கொண்ட அதீத நம்பிக்கையால் கொலை செய்யும் அளவுக்கு சென்ற ராஜகோபால், இறுதிவரை சிறைக்கு செல்லாமலேயே மறைந்திருக்கிறார். உழைப்பால் உயர்ந்த ஒருவரின் வாழ்க்கை தவறான செயலால் சீர்குலைந்து முடிவு பெற்றிருக்கிறது.
 

English Summary
Saravana bhavan rajagopal case

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...