???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சி.பி.சி.ஐ.டி. தலைவர் திடீர் மாற்றம் ஏன்? பாலியல் வலை வழக்கை புதைக்க சதியா?: ராமதாஸ் குற்றச்சாட்டு 0 எனக்கு கூறிய அறிவுரைகளை மோடி பின்பற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது: மன்மோகன் சிங் 0 நிர்மலா தேவி விவகாரம்: இன்று விசாரணை தொடங்குகிறது! 0 எச்.ராஜாவைக் கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்! 0 தலித் இளைஞரை கோவிலுக்குள் தூக்கிச்சென்ற அர்ச்சகர் 0 ஆளுநர் கூறும் விளக்கத்தை நான் நம்பவில்லை: பெண் பத்திரிகையாளர் 0 தென் இந்தியாவில் தாமரை மலர கர்நாடகா ‘கேட்வே’: அமித்ஷா 0 பிரதமர் மோடிக்கு எதிராக கண்டன முழக்கம் எழுப்பிய தமிழர்கள்! 0 பெண் பத்திரிகையாளரிடம் மன்னிப்புக் கேட்டார் ஆளுநர்! 0 நிர்மலா தேவிக்கு 12 நாள் நீதிமன்ற காவல் 0 பெண் பத்திரிகையாளர் எதிர்ப்பும் ஆளுநர் கேட்ட மன்னிப்பும் 0 பணத்தட்டுப்பாட்டு: ரூ. 500 நோட்டுகளை கூடுதலாக அச்சடிக்க முடிவு 0 லஞ்ச ஒழிப்பு வேட்டையில் சிக்கிய சென்னை காவல் உதவி ஆணையர்! 0 மகாபாரத காலத்திலேயே இணையதளம், செயற்கைகோள்கள் இருந்தது: திரிபுரா முதல்வர் 0 வன்கொடுமை சட்ட விவகாரத்தில் விரைவில் சீராய்வு மனுதாக்கல்: தமிழக அரசு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சங்கர் ஆணவ கொலை வழக்கில் மூவர் விடுதலையை எதிர்த்து மேல் முறையீடு:அரசு வழக்கறிஞர்

Posted : செவ்வாய்க்கிழமை,   டிசம்பர்   12 , 2017  04:47:12 IST

உடுமலை சங்கர் கொலை வழக்கில் கௌசல்யாவின் தாய் உள்பட மூவர் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக மேல்முறையீடு செய்யப்படும் என அரசு வழக்கறிஞர் கூறியுள்ளார்.
 
உடுமலை சங்கர் கொலை வழக்கில் அவரது மனைவி கௌசல்யாவின் தந்தை சின்னசாமி, சின்னசாமியின் நண்பர் ஜெகதீசன், மணிகண்டன், செல்வகுமார், கலை தமிழ்வாணன், மதன் ஆகிய ஆறு பேருக்கு மரண தண்டனை விதித்து திருப்பூர் வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், குற்றம் சாட்டப்பட்ட ஸ்டீவன் தன்ராஜ்க்கு இரட்டை ஆயுள் தண்டனையும், குற்றவாளிகளுக்கு அடைக்கலம் தந்த மணிகண்டனுக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் கௌசல்யாவின் தாய் அன்னலட்சுமி, மாமா பாண்டிதுரை, பிரசன்ன குமார் ஆகியோர் கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அரசு வழக்கறிஞர் கூறியதாவது, “ இந்தியாவிலேயே ஆணவ கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது இதுவே முதன் முறையாகும். தீர்ப்பின் முழு விபரங்கள் கிடைத்த பின்னர் கௌசல்யாவின் தாய் உள்பட மூவர் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிராக விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்படும்” என்று கூறினார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...