???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இரவு முழுவதும் நாடாளுமன்ற வளாகத்திலேயே கழித்த இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பிக்கள் 0 வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து 24ம் தேதி காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம் 0 மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட 8 எம்.பிக்கள் சஸ்பெண்ட் 0 தட்டார்மடம் கொலை வழக்கு: காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் சஸ்பெண்ட் 0 தமிழகத்தில் புதிதாக 5,344 பேருக்கு கொரோனா; 60 பேர் உயிரிழப்பு 0 பொருளாதார மேம்பாட்டுக்காக உயர்மட்ட குழு அறிக்கை சமர்பித்தது! 0 தமிழகம் முழுவதும் 28-ந் தேதி திமுக தோழமை கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம் 0 வேளாண் சட்டத்திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு: நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாய அமைப்புகள் போராட்டம் 0 தன்னை விவசாயி எனக்கூறிக்கொள்ளும் முதலமைச்சரை வரலாறு மன்னிக்காது: மு.க.ஸ்டாலின் காட்டம் 0 மே -ஆகஸ்ட் வரையில் மாத ஊதியம் பெறும் 66 லட்சம் பேர் வேலையிழப்பு 0 மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே வேளாண் மசோதாக்கள் நிறைவேறின 0 விவசாய சட்டங்களால் தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாது: எடப்பாடி பழனிசாமி அறிக்கை 0 மருத்துவ பரிசோதனை முடித்து துணைமுதல்வர் வீடு திரும்பினார் 0 அச்சு ஊடகங்கள், வானொலிகளுக்கு வரிக்குறைப்பா? வைகோவின் கேள்விக்கு அமைச்சர் விளக்கம் 0 வேளாண் மசோதாக்களை நிறைவேற்ற மாநிலங்களவை இன்று கூடுகிறது!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மத்திய அரசிடம் அனுமதி பெறாமல் நடிகர் சஞ்சய் தத் முன்கூட்டியே விடுதலை!

Posted : வியாழக்கிழமை,   மே   16 , 2019  00:27:07 IST

1993ம் ஆண்டு நடைபெற்ற மும்பை தொடர் குண்டுவெடிப்பில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 2000க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். இந்த வழக்கில் உரிய ஆவணமின்றி ஆயுதம் வைத்திருந்ததாக நடிகர் சஞ்சய் தத் கைது செய்யப்பட்டார்.

நடிகர் சஞ்சய் தத் மீதான வழக்கை விசாரித்த தடா நீதிமன்றம் அவருக்கு 6 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்தில் அவருக்கு 5 ஆண்டுகளாக  தண்டனை குறைக்கப்பட்டது.

நடிகர் சஞ்சய் தத் கடந்த ஆண்டு பிப்ரவரி 25ம் தேதி மும்பை சிறையிலிருந்து தண்டனை முடிவதற்கு முன்பே விடுதலை செய்யப்பட்டார். இது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டுமென தமிழக அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 8 மாதங்களுக்கு மேலாகியும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த நிலையில் நடிகர் சஞ்சய் தத்தை முன்கூட்டியே விடுதலை செய்ய மத்திய அரசிடம் ஒப்புதல் பெறவில்லை என ஆர்டிஐ மூலம் பேரறிவாளன் தரப்பு தகவல் பெற்றதாக கூறப்படுகிறது. சஞ்சய் தத்தை விடுவிக்கும் முன்பு மகாராஷ்டிர அரசு மத்திய அரசிடம் கருத்தை கேட்கவில்லை என பேரறிவாளன் தரப்பு கூறியுள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...