???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நான் பேசியதில் எந்த தவறும் இல்லை: கருணாஸ் கருத்து! 0 கீழடியில் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய எலும்புகள் கண்டுபிடிப்பு 0 கன்னியாஸ்திரி பாலியல் புகார் வழக்கில் பேராயர் ஃபிராங்கோ கைது 0 தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த குழு ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு! 0 பங்குசந்தை வர்த்தகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு வீழ்ச்சி 0 அனில் அம்பானி நிறுவனத்தை மட்டுமே இந்தியா சிபாரிசு செய்தது: ஃபிரான்ஸ் முன்னாள் அதிபர் 0 ஜல்லிக்கட்டு கலவரம் விசாரணை: 3 மாதங்களில் முடிக்க நீதிமன்றம் உத்தரவு 0 முத்தலாக் சட்டம் இஸ்லாமிய பெண்களின் சிக்கலை தீர்க்காது: ராமதாஸ் 0 பாளையங்கோட்டையில் 14 நாட்களுக்கு மின்தடை அறிவிப்பு 0 ஜெயலலிதா-சசிகலா வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகிறது `தி அயர்ன் லேடி’! 0 'காற்றாலை மின்சார ஊழல்: அமைச்சர் தங்கமணி பதவி விலகுவாரா?' மு.க.ஸ்டாலின் கேள்வி 0 பெண்களை இழிவுபடுத்தி பேசியதாக ஹெச்.ராஜா மீது பல்வேறு இடங்களில் வழக்குப்பதிவு 0 7 பேர் விடுதலையில் ஆளுநர் நடவடிக்கை எடுக்காதது வேதனை அளிக்கிறது: ராமதாஸ் 0 லஞ்ச வழக்கில் கைதான ஆர்.டி.ஓ. வங்கி லாக்கரில் 8.7 கிலோ தங்கம்! 0 திமுக-காங்கிரஸை கண்டித்து தமிழகமெங்கும் கண்டன பொதுக்கூட்டம்: அதிமுக அறிவிப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பெண்ணை மிரட்டிய வழக்கு: சனா கான் நண்பருடன் கைது!

Posted : வியாழக்கிழமை,   அக்டோபர்   30 , 2014  01:34:46 IST

தமிழில் நடிகர் சிலம்பரசனுடன் "சிலம்பாட்டம்' என்ற படத்தில் சனா கான் நடித்துள்ளார். இதுதொடர்பாக மும்பை அந்தேரி காவல் நிலைய போலீஸார் கூறியதாவது:  நடிகர் சல்மான் கானின் ஜெய் ஹோ படத்தில் நடித்துள்ள நடிகை சனா கான், 2012இல் பிக் பாஸ் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். மும்பையில் 15 வயது இளம்பெண் ஒருவரைக் கடந்த ஆண்டு மே மாதம் கடத்த முயற்சித்ததாக சனா கான் மீது போலீஸார் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கில் சனாவின் உறவினர் நவேத் கானையும் அவரது மூன்று நண்பர்களையும் போலீஸார் கைது செய்தனர். எனினும், இவ்வழக்கில் சனா கான் முன்ஜாமீன் பெற்றார். அவருக்கு வழங்கப்பட்ட முன்ஜாமீனை விமர்சித்து சமீபத்தில் செய்தித்தாள் ஒன்றில் கட்டுரை வெளியானது. இந்தக் கட்டுரையை வெளியிடச் செய்தது பூனம் கன்னா என்ற ஊடக ஆலோசகர்தான் என்று சனா கானுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இந்நிலையில், பூனம் கன்னா தனது உடல் பரிசோதனைக்காக அந்தேரியில் உள்ள மருத்துமனைக்கு கடந்த 21ஆம் தேதி சென்றார். அந்த மருத்துவமனைக்கு வெளியே அவரை சனா கான், அவரது நண்பர் இஸ்மாயில் கான், அவர்களின் வேலைக்காரர் ராமு கனோஜியா ஆகியோர் மிரட்டியுள்ளனர். அவரிடம் தகாத முறையிலும் நடந்து கொண்டுள்ளனர். இது தொடர்பாக பூனம் கன்னா, அந்தேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் சனா கான், இஸ்மாயில் கான், ராமு கனோஜியா ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர் என்று போலீஸார் தெரிவித்தனர். 
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. 
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...