???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மேகதாதுவில் புதிய அணை: தமிழக அரசின் மனு மீது இன்று விசாரணை! 0 சிபிஐ இடைக்கால இயக்குநர் நியமன வழக்கு: தலைமை நீதிபதி விலகல் 0 போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பள பிடித்தம்: அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை 0 அமைச்சர் விஜயபாஸ்கரிடம் ஆறுமுகசாமி ஆணையம் 7 மணிநேரம் விசாரணை! 0 தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கை விசாரிக்கும் சிபிஐ அதிகாரிகள் பணியிட மாற்றம் 0 10% இடஒதுக்கீடுக்கு எதிரான வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு 0 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளாராக நடிகை கரீனா கபூரை நிறுத்த கோரிக்கை 0 தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு கருப்புக் கொடி காட்டுவோம்:வைகோ 0 கின்னஸ் சாதனை படைத்த விராலிமலை ஜல்லிகட்டு! 0 கொல்கத்தா மாநாட்டில் ராகுலை முன்மொழியாதது ஏன்?: ஸ்டாலினுக்கு தமிழிசை கேள்வி 0 சபரிமலை போராட்டத்தில் எங்களால் வெற்றி பெறமுடியவில்லை: பாஜக ஒப்புதல் 0 எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணி தேசத்துக்கு எதிரானது: பிரதமர் மோடி 0 மீண்டும் முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் ரகசிய யாகம்: மு.க ஸ்டாலின் 0 கொலைகாரர்களுக்கு தி.மு.க. துணையாக உள்ளது: முதலமைச்சர் குற்றச்சாட்டு 0 சிறையில் சசிகலாவுக்கு சிறப்புச் சலுகை வழங்கப்பட்டது: உயர்மட்டக்குழு ஆய்வில் தகவல்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஓரினச்சேர்க்கை திருமணத்தை அங்கீகரிக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

Posted : வியாழக்கிழமை,   ஜுலை   12 , 2018  00:10:19 IST

ஓரினச்சேர்க்கை திருமணத்தை ஏற்க முடியாது என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அரசியல் சாசன அமர்வு கூறியுள்ளது.
 
இந்திய குற்றவியல் நடைமுறை சட்டப்பிரிவு 377-இன் படி, இயற்கைக்கு மாறாக ஆண், பெண் அல்லது விலங்கினங்களுடனான உறவு தண்டனைக்குரியதாகும். இந்த குற்றத்துக்கு ஆயுள் தண்டனையும், அபராதமும் விதிக்க தற்போதுள்ள சட்டம் வழிவகை செய்கிறது. இந்நிலையில் கடந்த 2009-ஆம் தேதி, இதுதொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி, இயற்கைக்கு மாறான உறவு சட்டவிரோதமல்ல என உத்தரவிட்டார்.
 
இதனைத்தொடர்ந்து, 2013-ஆம் தேதி இந்த உத்தரவுக்கு தடை விதித்த உச்சநீதிமன்ற இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு, "இயற்கைக்கு மாறான எந்த உறவும் சட்டவிரோதம்" என தீர்ப்பளித்தது. இதற்கு பல்வேறு அமைப்புகளும், ஓரினச் சேர்க்கையாளர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
 
இந்நிலையில், இந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்யுமாறு உச்சநீதிமன்றத்தில் நாஸ் பவுண்டேஷன் என்ற அமைப்பு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு தொடர்பாக பதிலளிக்குமாறு மத்திய அரசிற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
 
இந்நிலையில், இந்த வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு வந்தபோது, சட்டப்பிரிவு 377 தொடர்பாக உச்ச நீதிமன்றம் எந்த தீர்ப்பு வழங்கினாலும் அதனை ஏற்றுக் கொள்வதாக மத்திய அரசு தெரிவித்தது. இந்நிலையில் ஓரினச் சேர்க்கை திருமணம் குறித்து கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இருவர் விரும்பி ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவதை குற்றம் என்று கருத முடியாது. இருப்பினும் ஓரினச் சேர்க்கையாளர்களின் திருமணைத்தை அங்கீகரிக்க முடியாது என்றும் கூறியுள்ளனர்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...