???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீது இன்று தீர்ப்பு 0 ஜம்மு காஷ்மீரில் விரைவில் தேர்தல்; துணை நிலை ஆளுநர் தகவல் 0 மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கும் பாடகி சுசித்ரா! 0 நள்ளிரவில் தண்டவாளத்தில் அமர்ந்து குடி: ரயில் மோதி 4 மாணவர்கள் உயிரிழப்பு 0 சென்னை ஐஐடியில் கடந்த 8 ஆண்டுகளில் 12 மாணவர்கள் தற்கொலை! 0 சபரிமலையில் மகரவிளக்கு பூஜைக்காக நாளை நடை திறப்பு 0 அரசியல் வெற்றிடம்: ரஜினி கருத்துக்கு கமல் ஆதரவு 0 தமிழ்நாட்டின் மீதான நம்பிக்கை தகர்க்கப்பட்டுள்ளது: மு.க.ஸ்டாலின் வேதனை 0 கர்நாடகா: பா.ஜ.க சார்பில் போட்டியிடும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 13 எம்.எல்.ஏக்கள் 0 ’இனி எச்சரிக்கையாக பேசுங்க ராகுல்’: உச்சநீதிமன்றம் அறிவுரை 0 ரஃபேல் மறுசீராய்வு வழக்கு தள்ளுபடி! 0 ரோமுக்குப் போனாலும் ரோகம் தீராது...படித்ததும் கிழித்ததும் பாகம் - 2- பாமரன் எழுதும் தொடர்- 11 0 அண்ணன் - தங்கையாக ஜோதிகா, சசிகுமார்! 0 விருதுநகரில் அதிமுக நிர்வாகி வெட்டி கொலை! 0 தமிழக முதல்வரின் பதில் வேதனை அளிக்கிறது: திருமாவளவன்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக கூறி ரூ.23 கோடி மோசடி

Posted : ஞாயிற்றுக்கிழமை,   அக்டோபர்   20 , 2019  00:00:17 IST

சேலம் சீலநாயக்கன்பட்டியைச் சேர்ந்த மணிகண்டன், இந்துமதி தம்பதி, சேலம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அலுவலகம் ஒன்றை நடத்திவந்தனர். இந்த தம்பதி தங்களது நண்பர்கள், உறவினர்களை இடைத்தரகர்களாக நியமித்து, ஏற்றுமதி வர்த்தக உரிமம் பெற்றுத்தருவதாகவும் பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக விளம்பரம் செய்துள்ளனர்.

இவர்களது விளம்பரத்தை நம்பி அலுவலகத்திற்கு வரும் முதலீட்டாளர்களிடம் ஆசையை தூண்டும் வகையில் கண்ணில் படும் வகையில் கட்டுக்கட்டாக பணத்தை அடுக்கி வைத்திருக்கின்றனர். இவர்கள் பணத்தை இரட்டிப்பு செய்து தருவார்கள் என நம்பி ஓராண்டில் 350-க்கும் மேற்பட்டோர் சுமார் 23 கோடி வரை பணம் கொடுத்து ஏமாந்துள்ளனர்.

பணத்தை பறிகொடுத்த சிலர் கொடுத்த புகாரின்பேரில் சேலம் மாநகர போலீசார், மணிகண்டன், இந்துமதி தம்பதியை கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 2 சொகுசு கார்கள், 10 சவரன் நகைகள், 50ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

அவர்களிடம் ஏமாந்த பலரும் , மாநகர மத்திய குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் கொடுத்து வருகின்றனர். பொதுமக்களிடம் மோசடி செய்த கோடிக்கணக்கான பணத்தில், அந்த தம்பதி துபாய், சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளுக்கு சுற்றுலா சென்று வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அதிக முதலீட்டாளர்களை அழைத்து வந்த இடைத்தரகர்களையும், அவர்கள் வெளிநாடு சுற்றுலா அழைத்துச் சென்றுள்ளனர்.

சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கோடிக்கணக்கான ரூபாய் மோசடியில், மணிகண்டன், இந்துமதி தம்பதிக்கு உதவியாக இருந்தவர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...