???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ’இனி எச்சரிக்கையாக பேசுங்க ராகுல்’: உச்சநீதிமன்றம் அறிவுரை 0 ரஃபேல் மறுசீராய்வு வழக்கு தள்ளுபடி! 0 ரோமுக்குப் போனாலும் ரோகம் தீராது...படித்ததும் கிழித்ததும் பாகம் - 2- பாமரன் எழுதும் தொடர்- 11 0 அண்ணன் - தங்கையாக ஜோதிகா, சசிகுமார்! 0 விருதுநகரில் அதிமுக நிர்வாகி வெட்டி கொலை! 0 தமிழக முதல்வரின் பதில் வேதனை அளிக்கிறது: திருமாவளவன் 0 செல்போன் கண்டுபிடித்தவரை மிதிக்க வேண்டும்: அமைச்சர் பாஸ்கரன் 0 ரூ.300 கோடி வசூல் செய்த பிகில்! 0 சிலைகளை மீட்க பிரதமர் மோடியே காரணம்: தமிழக அரசு 0 எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தொழில்துறை உற்பத்தி குறைந்தது! 0 பெண்ணியம், நாத்திகம் போன்றவை தீவிரவாத எண்ணங்கள்: சவுதி அரேபியா 0 மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி ! 0 பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரேசில் செல்கிறார் பிரதமர் மோடி 0 இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் இந்தியா வருகை 0 ரஜினி அரசியல் கட்சி நடத்துகிறாரா? முதல்வர் பழனிசாமி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

Posted : வியாழக்கிழமை,   அக்டோபர்   17 , 2019  22:28:45 IST

தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 5 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, அடிப்படை ஊதியத்தில் இதுவரை 12 சதவீதமாக இருந்த அகவிலைப்படி இனி 17 சதவீதமாக வழங்கப்படும்.

இதுதொடர்பாக நிதித் துறை முதன்மைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன் பிறப்பித்துள்ள அரசாணையில்,

'தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியத்தின் அடிப்படையில் அகவிலைப்படி 9 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக கடந்த ஜனவரியில் உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் அறிவிப்பு ஒன்றை மத்திய அரசு கடந்த 14-ந் தேதி வெளியிட்டது. அதில், மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை 1-ந் தேதி முதல் முன்தேதியிட்டு அகவிலைப்படியை 12 சதவீதத்தில் இருந்து 17 சதவீதமாக உயர்த்தப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

அந்த அறிவிப்பின் அடிப்படையில் தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கும் அகவிலைப்படியை அதே அளவான 5 சதவீதம் அதிகரித்து உத்தரவிடப்படுகிறது.

தமிழகத்தில் 14 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உள்ளனர். ஓய்வூதியர்களுக்கும் அகவிலைப்படி உயர்வு பொருந்தும். அதன்படி, 18 லட்சம் பேர் பயனடைவார்கள். அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.750 முதல் அதிகபட்சம் ரூ.11ஆயிரத்து 250 வரை ஊதியம் உயரும். ஓய்வூதியர்களுக்கு ரூ.450 முதல் ரூ.5,575 வரை ஓய்வூதியம் அதிகரிக்கும்.' என தெரிவிக்கப்பட்டுள்ளது.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...