???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை: இம்ரான் கான் 0 ப.சிதம்பரத்தை சிபிஐ கையாளும் விதம் மிகவும் வருத்தமளிக்கிறது: மம்தா பானர்ஜி 0 அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவு! 0 ஸ்டெர்லைட் ஆலையில் விஷவாயு தாக்கி 13 ஊழியர்கள் இறந்தது உண்மையா? ஆதாரம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு 0 ப.சிதம்பரத்திடம் இன்று இரவு முதல் சிபிஐ விசாரணை தொடங்குகிறது! 0 அன்னிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு 0 நிலவின் முதல் படத்தை அனுப்பியது சந்திரயான் - 2 0 காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்வது குறித்து டிரம்ப் மீண்டும் பேட்டி 0 காஷ்மீர் விவகாரத்தை திசை திருப்பவே ப. சிதம்பரம் கைது நடவடிக்கை: கார்த்தி சிதம்பரம் 0 ப.சிதம்பரத்தை வேட்டையாட துடிப்பது வெட்கக்கேடானது: பிரியங்கா காந்தி 0 நீதிக்கு தலைவணங்குவேன்; தலைமறைவாக மாட்டேன்: கைதாகும் முன் பேட்டியளித்த ப.சிதம்பரம் 0 ப.சிதம்பரத்துக்கு எதிராக அதிகார துஷ்பிரயோகம்: ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் கண்டனம் 0 காஷ்மீர் விவகாரம்: டெல்லியில் திமுக இன்று ஆர்ப்பாட்டம் 0 ப. சிதம்பரம் கைதை கண்டித்து தமிழகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் 0 10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சீக்கிய கலவர வழக்கு: காங்கிரசை சேர்ந்த சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை

Posted : திங்கட்கிழமை,   டிசம்பர்   17 , 2018  22:15:09 IST

சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சஜ்ஜன் குமாரை விசாரணை நீதிமன்றம் விடுதலை செய்ததற்கு எதிரான வழக்கில், அவர் குற்றவாளி என்று டெல்லி உயர் நீதிமன்றம்  தீர்ப்பு வழங்கியது.
 
1984-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி தனது சீக்கிய பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதைத் தொடர்ந்து டெல்லி உள்பட நாடு முழுவதும் நடந்த கலவரங்களில் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் கொல்லப்பட்டனர்.
 
கலவரத்தின் ஒரு பகுதியாக டெல்லியில் ராஜ்நகர் பகுதியில் வசித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கொல்லப்பட்ட வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவராக இருந்த சஜ்ஜன் குமார், முன்னாள் காங்கிரஸ் கவுன்சிலர் பல்வான் கோகர், முன்னாள் கடற்படை அதிகாரி கேப்டன் பக்மால் உள்பட 6 பேர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
 
இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்தது. பல்வான் கோகர், பக்மால், கிர்தாரி லால் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை வழங்கியும், 2 பேருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியும் விசாரணை நீதிமன்றம் கடந்த 2013-ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. ஆனால், காங்கிரஸ் மூத்த தலைவர் சஜ்ஜன் குமார் மட்டும் விடுதலை செய்யப்பட்டார்.
 
விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சிபிஐ, டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கில் இப்போது தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், சஜ்ஜன் குமாரை விசாரணை நீதிமன்றம் விடுதலை செய்ததை ரத்து செய்தனர். அவர் குற்றவாளி என்று அறிவித்ததோடு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தனர். டிசம்பர் இறுதிக்குள் அவர் சரணடைய வேண்டும் என்றும் நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்தனர்.
 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...