அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் 25ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு! 0 இந்துத்துவா பற்றி சர்ச்சை பதிவு; கன்னட நடிகர் சேத்தன் குமார் கைது 0 விவசாயிகளுக்கு தலா ரூ.5 லட்சம் பரிசு! 0 ரேஷன் கடைகளில் இனி கம்பு, கேழ்வரகு: வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு 0 பட்ஜெட் உதயசூரியனைப் போன்று ஒளியூட்டக்கூடியதே தவிர மின்மினிப்பூச்சி அல்ல: முதல்வர் ஸ்டாலின் 0 குடும்பத்தலைவிக்கு ரூ.1000 அல்ல; ரூ.29,000 வழங்கவேண்டும்: அண்ணாமலை 0 தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளா? எடப்பாடி பழனிசாமி விமர்சனம் 0 தமிழ்நாட்டு வரும் வருமானம் செலவு: முழு விவரம் 0 மகளிர் உரிமைத் தொகை, காலை உணவு விரிவாக்கத் திட்டம்: பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் என்னென்ன? 0 பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிவருகிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் 0 லண்டன் இந்திய தூதரகத்தில் காலிஸ்தான் கொடி ஏற்றம்! 0 தலைமறைவாக இருந்த கன்னியாகுமரி பாதிரியார் பெனடிக் ஆன்டோ கைது 0 ரஜினிகாந்த் மகள் வீட்டில் பல லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளை 0 அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை வெளியிடக்கூடாது: உயர்நீதிமன்றம் 0 ராகுல்காந்தி வீட்டில் குவிந்த டெல்லி போலீஸ்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

சஞ்சீவன்: திரைவிமர்சனம்!

Posted : வெள்ளிக்கிழமை,   அக்டோபர்   14 , 2022  18:48:57 IST


Andhimazhai Image

‘விளையாட்டு வினையாகும்’ என்ற பழமொழி தான் சஞ்சீவன் படத்தின் ஒன் லைன்.

சென்னையை சேர்ந்த ஐந்து இளைஞர்கள். அதிலொருவர் தொழிலதிபரின் மகன். அவருடைய அப்பாவின் அலுவலகத்தில் மற்ற நான்கு நண்பர்களும் வேலை பார்க்கின்றனர். அதில் ஒருவர் நாயகன் வினோத் லோகிதாஸ். ஸ்நூக்கர் சாம்பியனான இவர், ஒரு போட்டியில் வெற்றி பெற்றுவிட நண்பர்கள் அனைவரும் சேர்ந்து சுற்றுலா செல்லலாம் என முடிவெடுப்பார்கள். இதற்கிடையே நாயகன் காதல் வயப்படுவார்.

 சுற்றுலா செல்லும் நண்பர்கள் வழக்கம் போல் குடி, கொண்டாட்டம், சேசிங் என அதகளமாக செல்வார்கள். அப்போது எதிர்பாராத விதமாக விபத்தொன்று நடக்கின்றது. அவர்கள் விபத்திலிருந்து மீண்டார்களா? இல்லையா? என்பது தான் படத்தின் மீதிக் கதை.

மிக எளிமையான கதையை நல்ல திரைக்கதையாக மாற்றி அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் அறிமுக இயக்குநர் மணி சேகர். முதல் படம் என்று தெரியாத அளவிற்கு படத்தை எளிமையாகவும் ரசிக்கும்படியும் செதுக்கியிருக்கிறார். இவர் இயக்குநர் பாலுமகேந்திராவின் பட்டறையிலிருந்து வந்தவர் என்பது கூடுதல் தகவல். அதேபோல், ஸ்நூக்கர் விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட முதல் தென்னிந்தியத் திரைப்படம்.

 வினோத் லோகிதாஸ், யாசின், சத்யா, ஷிவ் நிஷாந்த், விமல் ராஜா ஆகிய ஐந்து பேரும் ஒவ்வொரு விதம். அவரவரின் கதாபாத்திரத்திற்கு ஏற்றார் போல், தங்களது உடல் மொழியை வெளிப்படுத்தி உள்ளனர். காதலுக்காக உருகும் ஷிவ் நிஷாந்த் செய்யும் காமெடிகள் அட்டகாசம்.  நாயகியாக வரும் திவ்யா துரைசாமியின் நடிப்பில் அப்படியொரு துள்ளல். இருப்பினும் அவருக்கான கதாபாத்திரம் வலுவாக இல்லை.

 ஷிவ் நிஷாந்தின் காதலி பற்றிய காட்சிகள், யாசினும், ஷிவ் நிஷாந்த்தும் போதை மருந்து கடத்தும் காட்சிகளில் அரங்கில் அப்படியொரு ஒரு சிரிப்பலை.

கார்த்திக் சுவர்ண குமாரின் ஒளிப்பதிவில் ஒவ்வொரு காட்சியும் ரசிக்க வைக்கிறது. ஸ்நூக்கர் விளையாட்டை மிரட்டலாக ஒளிப்பதிவு செய்துள்ளார். தனுஜ் மேனனின் இசையும் அதற்குக் கச்சிதமாக பொருந்தியிருக்கிறது.

முதல் பாதியில் இன்றைய இளைஞர்களின் வாழ்க்கையை நேரில் பார்ப்பது போல் இயக்கியிருந்தாலும், இரண்டாம் பாதியில் காதல், இரட்டை அர்த்த வசனம் போன்றவற்றை தவிர்த்திருக்கலாம். படத்தின் இறுதிக் காட்சியும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. படம் முழுவதும் நிரம்பியிருக்கும் காமெடியே சஞ்சீவனை தாங்கிப்பிடிக்கிறது. சஞ்சீவன் இளைஞர்களுக்கு நல்ல விருந்தாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.



 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...