![]() |
தாய்லாந்து பேட்மிண்டன் தொடரில் பங்கேற்க சாய்னா நேவாலுக்கு அனுமதிPosted : செவ்வாய்க்கிழமை, ஜனவரி 12 , 2021 20:44:42 IST
தாய்லாந்து ஓபன் 2021 பேட்மிண்டன் தொடரில் பங்கேற்க சாய்னா நேவாலுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்து ஓபன் 2021 பேட்மிண்டன் தொடரில் பங்கேற்க சென்ற பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலுக்கு அங்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனையில் கொரோனா தொற்று இருப்பதாக முடிவு வந்தது.
ஆனால் அவருக்கு ‘ஆண்ட்டிபாடி இம்யுனோக்ளோபின் ஜி’ சோதனையில் பாஸிட்டிவ் என முடிவு வந்திருப்பதால் சாய்னா இந்த தொடரில் விளையாட அனுமதிக்கப்பட்டுள்ளது. முன்னெப்போதோ கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேற்கொள்ளப்படுவதுதான் ஆண்ட்டிபாடி சோதனை. இதில் பாஸிட்டிவ் என வந்தால் அந்த நபர் இப்போது தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக அர்த்தமல்ல. இதனால் அவருக்கும், பிற யாருக்கும் பாதிப்பில்லை என்பதால், தாய்லாந்து ஓபன் 2021 பேட்மிண்டன் தொடரில் சாய்னா நேவால் விளையாட அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் இன்று நடைபெறும் போட்டியில் அவர் விளையாடுகிறார்.
முன்ந்தாக, இந்த தொடரில் விளையாட இருந்த சாய்னா நேவாலுக்கு பிசிஆர் சோதனையில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து, பேங்காக்கில் உள்ள மருத்துவமனையில் பத்து நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ள உத்தரவிடப்பட்டது. அதேபோல அவருடன் பயணித்த அவரது கணவரும், பேட்மிண்டன் வீரருமான காஷ்யப்பும் தனிமைப்படுத்தப்பட்டார். ஏற்கெனவே தொற்று ஏற்பட்டு சாய்னா சிகிச்சை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
|
|