அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல்: அமைச்சர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை 0 மத்திய அரசு கொடூரமாக நடந்துகொள்கிறது: ராகுல் காந்தி 0 தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் செப்.15-க்குள் உள்ளாட்சி தேர்தல்: உச்சநீதிமன்றம் உத்தரவு 0 நிதிநிலை பற்றாக்குறை விவகாரம்: புதிய சட்டமுன்வடிவை தாக்கல் செய்தார் நிதியமைச்சர் 0 நீட் தேர்வு நீதிமன்றத்தின் தீர்ப்பு; இதை மாற்ற முடியாது: எச்.ராஜா 0 மீத்தேன், ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட திட்டங்களை ஒருபோதும் தமிழக அரசு அனுமதிக்காது: அமைச்சர் தங்கம் தென்னரசு 0 91 நாட்களுக்கு பிறகு தினசரி கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்தது! 0 ஜூன் 24ந்தேதி வரை சட்டசபை கூட்டத்தொடர்! 0 யோகா நேபாளத்தில்தான் உருவானது: சர்மா ஒலி பேச்சு 0 திமுக அரசுக்கு கால அவகாசம் கொடுங்கள், நிச்சயம் நல்லாட்சி தருவார்கள்: கே.எஸ்.அழகிரி 0 கொரோனா தொற்றுக்கு நடிகை ரேஷ்மா மரணம் 0 தேர்தல் நேரத்தில் ஒரு பேச்சு, ஆட்சிக்கு வந்தபின் ஒரு பேச்சு - எடப்பாடி பழனிசாமி 0 முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவில் நோபல் பரிசு பெற்று பொருளாதார நிபுணர்! 0 தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு பாதுகாக்கப்படும் - ஆளுநர் 0 தி.மு.க. ஆட்சி அமைத்த பிறகு முதல் சட்டமன்ற கூட்டம் இன்று!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

’சாஹாவிடம் அதிரடியை எதிர்பார்க்கவில்லை’ டேவிட் வார்னர் பேட்டி!

Posted : புதன்கிழமை,   அக்டோபர்   28 , 2020  11:18:43 IST


Andhimazhai Image

டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 88 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றி பெற்றது. ஹைதராபாத் அணியில் சாஹா அதிரடியாக விளையாடி 87 ரன்களை எடுத்தார்.

டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 2 விக்கெட்டுகளை இழந்து 219 ரன்களை எடுத்தது.

வார்னர் 66 ரன்களும் (34 பந்துகள், 8 பவுண்டரி, 2 சிக்ஸர்), சாஹா 87 ரன்கள் (45 பந்துகள், 12 பவுண்டரி, 2 சிக்ஸர்) எடுத்து அணியின் ஸ்கோரை வெகுவாக உயர்த்தினர். அதேபோல் மனிஷ் பாண்டே மற்றும் வில்லியம்சன் தங்கள் பங்கிற்கு 55 ரன்களை சேர்த்ததன் மூலம் ஹைதராபாத் அணி சுலபமாக 200 ரன்களை தாண்டியது.

அதன்பின் களமிறங்கிய டெல்லி அணியில் ரஹானே (26), ஹெட்மேயர் (16), ரிஷப் பண்ட் (36), துஷார் தேஷ்பாண்டே (20) தவிர மற்ற வீரர்களை ஒற்றை இலக்க ரன்களில் ஹைதராபாத் பவுலர்கள் வெளியேற்றினர்.

சிறப்பாக பந்து வீசிய ரஷித் கான் 4 ஓவர்களில் 7 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 19 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த டெல்லி அணி 131 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

டெல்லிக்கு எதிரான மாபெரும் வெற்றி குறித்து பேசிய வார்னர், “தொடக்க ஆட்டக்காரனாக நான் கொஞ்சம் பொறுப்பை எடுத்துக்கொண்டேன். இது போன்ற சூழலில் நிதானமாக ஆட முடியாது. எனவே, 360 டிகிரியில் பேட்டை சுழற்றி ஆடினேன். ஜானியை அணியிலிருந்து விலக்கி சாஹாவை ஆட வைப்பதும் வில்லியம்சனை 4-வது இடத்தில் இறக்குவதும் கடினமான முடிவுதான். ஆனால், சாஹாவின் அதிரடி ஆட்டத்தை எதிர்பார்க்கவில்லை. குறிப்பாக பவர்ப்ளே ஓவர்களில் அவரின் ஸ்ட்ரைக் ரேட் நம்பமுடியாத வகையில் இருந்தது. ரஷீத்தை பொறுத்தவரையில் அணிக்காக பல விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்த போட்டியில் ரன்கள் கொடுக்காமல் அபாரமாக விக்கெட்டுகளை சாய்த்தார். பனி மற்றும் ஈரப்பதமுள்ள பிட்ச்சில் சிறப்பாக பந்துவீசியுள்ளார்.”என்று கூறினார்.

ப்ளே ஆஃப் வாய்ப்பை பெறுவதற்கு 5 அணிகள் மோதிக் கொண்டிருக்கின்றன. இந்த தருணத்தில் வருகின்ற அனைத்து போட்டியிலும் வெற்றி பெறுவதுடன் அதிக ரன்ரேட் வித்தியாசமும் முக்கிய தேவையாகவுள்ளது. நேற்றைய ஆட்டத்தில் 88 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ள சன் ரைசர் ஹைதராபாத் அணியின் ரன்ரேட் உயர்ந்துள்ளது. ஹைதராபாத் அணி புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...