???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 போக்குவரத்து விதிமீறல்: இரண்டு நாட்களில் ஒன்றரை லட்சம் வழக்குகள் பதிவு 0 இந்தி திணிப்பை எதிர்த்து 20-ம் தேதி தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம்! 0 டி.கே.சிவக்குமார் ஜாமீன் மனு மீது இன்று விசாரணை! 0 கர்நாடகத்தை பொறுத்தவரையில் கன்னடம்தான் முதன்மையான மொழி: எடியூரப்பா 0 பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து: தலைவர்கள் வாழ்த்து! 0 பெரியார் சிலைக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மரியாதை 0 பரூக் அப்துல்லா பொது பாதுகாப்பு சட்டத்தில் கைது! 0 அதிமுக அரசின் லஞ்சம் அமெரிக்கா வரை சந்தி சிரிக்கிறது: ஸ்டாலின் காட்டம் 0 ரூ. 2 ஆயிரம் வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படும்: முதலமைச்சர் 0 அரசு அளித்த சத்தியத்தை ஷாவோ, சுல்தானோ, சாம்ராட்டோ மாற்ற முயற்சிக்கக் கூடாது: கமல் 0 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் 0 உ.பி.யில் மாணவி பாலியல் புகார்: பாஜக தலைவர் சின்மயானந்தாவுக்கு எதிராக 43 வீடியோக்கள் ஒப்படைப்பு 0 இந்தி திணிப்பை எதிர்த்து மற்ற மாநிலங்களுடன் இணைந்து போராடுவோம்: மு.க.ஸ்டாலின் அறிவிப்பு 0 சட்டப்பிரிவு 370 -ரத்துக்கு எதிரான மனுக்கள் மீது இன்று விசாரணை! 0 ஆந்திராவில் கோதாவரி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்து: 11 பேர் உயிரிழப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

இலங்கை குடும்பத்துக்காக நடுவானில் திருப்பபட்ட விமானம் – ஆஸ்திரேலியாவில் பரபரப்பு

Posted : சனிக்கிழமை,   ஆகஸ்ட்   31 , 2019  02:35:23 IST

ஆஸ்திரேலியாவில் அகதிகளாக குடும்பத்துடன் வசித்துவந்த நடேசலிங்கம் என்பவரை அகதி இல்லை எனக் கூறி அந்நாட்டு நீதிமன்றம் வெளியேற்றியது. கடும் போராட்டத்துக்கு பிறகு நீதிமன்றம் தனது தீர்ப்பை ரத்து செய்ததால், வெளியேற்றப்பட்ட நடேசலிங்கம் குடும்பத்தினர் சென்ற விமானம் நடுவானில் திருப்பபட்டு அவர்கள் மீண்டும் ஆஸ்திரேலியா அழைத்துவரப்பட்டனர்.

 

இலங்கையை சேர்ந்த நடேசலிங்கம் என்பவர் தனது மனைவி பிரியா, இரண்டு மகள்களுடன் ஆஸ்திரேலியாவில் அகதிகளாக வாழ்ந்து வந்தார். ஆனால், நடேசலிங்கம் குடும்பத்தினரை அகதி அல்ல என கூறி, அவர்களை திருப்பி அனுப்ப ஆஸ்திரேலிய அரசு தீர்மானித்தது.

 

நீதிமன்றமும் அவர்களை அகதிகள் இல்லையெனக் கூறி திருப்பிஅனுப்ப உத்தரவிட்டதால் பலர் நடேசலிங்கம் குடும்பத்தினருக்காக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

விமானம் மூலம் நடேசலிங்கம் குடும்பத்தினரை இலங்கைக்கு திரும்ப அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்ட பிறகு போராட்டம் தீவிரமடைந்ததால், நீதிமன்றம் தனது முடிவை மாற்றிக் கொண்டது. நடேசலிங்கம் குடும்பத்தினர் ஆஸ்திரேலியாவிலேயே வசிக்க அனுமதிக்கப்பட்ட தகவல் அவர்களுக்கு செல்வதற்குள் அக்குடும்பத்தினர் சென்ற விமானம் புறப்பட்டுவிட்டது.

 

பின்னர் நடுவானில் விமானி மூலம் அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, 3000 கிமீ தாண்டி சென்றுக்கொண்டிருந்த டார்வின் பகுதியிலிருந்து மீண்டும் ஆஸ்திரேலியாவுக்கு திருப்பபட்டது. ஆஸ்திரேலியாவில் தரையிறங்கிய பிறகு நடேசலிங்கம் மற்றும் அவரது மனைவி பிரியா சம்பவம் குறித்து வருத்தத்துடன் பேசியிருக்கின்றனர். இது உலக தமிழர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


English Summary
Sad inccident for srilankan family

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...