???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 23 லட்சத்தை தாண்டியது 0 EIA வரைவு அறிக்கை; நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்க உத்தரவு 0 தமிழகம்: 5,834 பேருக்கு கொரோனா பாதிப்பு: 118 பேர் உயிரிழப்பு 0 சமூக நீதியைக் காக்கும் தீர்ப்பு: பெண்கள் சொத்துரிமை தீர்ப்பு குறித்து முதலமைச்சர் 0 “30 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு சொத்தில் சமஉரிமை சட்டம் உருவாக்கிய கலைஞர்” 0 சபரிமலை ஐயப்பன் கோவிலில் நவம்பர் 16 முதல் பக்தர்களுக்கு அனுமதி 0 பூர்வீக சொத்தில் பெண்களுக்கும் பங்கு உண்டு; உரிமையை மறுக்க முடியாது! 0 'டிசம்பர் வரை பள்ளி, கல்லூரிகள் திறக்க வாய்ப்பில்லை' 0 மேட்டூா் அணை நீா்மட்டம் 90 அடியை எட்டியது 0 தனி மனித உரிமையை தடுக்கும் இ-பாஸ் திட்டம் தேவையா? மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் 0 காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமாருக்கு கொரோனா 0 கொரோனா தொற்றால் லட்சுமி மூவி மேக்கர்ஸ் வி.சாமிநாதன் மரணம் 0 இது இந்தியாவா? ’இந்தி’-யாவா?: மு.க.ஸ்டாலின் காட்டம் 0 தமிழகம்: 5,914 பேருக்கு கொரோனா; 114 பேர் உயிரிழப்பு 0 மீண்டும் காங்கிரசில் சச்சின் பைலட்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

தங்க மங்கை ஹிமா தாஸுக்கு சச்சின் கொடுத்த இன்ப அதிர்ச்சி!

Posted : செவ்வாய்க்கிழமை,   ஜுலை   23 , 2019  06:54:07 IST


Andhimazhai Image

19 நாட்களில் 5 தங்கபதக்கத்தை வென்ற தங்க மங்கை ஹிமா தாஸ்-க்கு கிரிக்கெட் வீரர் சச்சின் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

 

போலந்து, செக் குடியரசு போன்ற ஐரோப்பிய நாடுகளில் கடந்த மூன்று வாரங்களில் பல தடகளப்போட்டிகளில் கலந்துகொண்டு ஐந்து தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார். அவருக்கு பெரும் அளவில் பாராட்டு குவிந்துவருகிறது.

 

இதுதொடர்பாக ஹிமா தாஸ் ஓர் ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது :

 

இந்த வெற்றி கிடைக்கும் என்பதை நான் திடமாக நம்பினேன். எதிர்பார்த்தேன். இன்னும் சில போட்டிகளில் நான் கலந்துகொள்ள வேண்டியுள்ளதால், எனது கவனம் சிதறாமல் இருக்க இணையத்தில் மக்கள் பகிர்ந்துகொள்ளும் கருத்துக்களை படிக்காமல் தவிர்த்து வருகிறேன். மேலும் எந்த தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை. இந்நேரத்தில்தான் கிரிக்கெட் வீரர் சச்சின் என்னை அழைத்து வாழ்த்து தெரிவித்தார்.

 

நாங்கள் விளையாட்டைப் பற்றி பேசினோம். போட்டியில் முழு உத்வேகத்தோடு இருக்க வேண்டும் என்றும் கவனத்தை சிதற விடாமல் வெற்றியை நோக்கி பயணிக்க வேண்டும் என்றும் கூறினார். எனது சொந்த ஊரில் மக்கள் வெள்ளத்தால் அவதிப்படுகிறார்கள் என்னால் பெரிதாக உதவமுடியவில்லை. வெள்ளம் வடிந்ததும் நோய்கள் உண்டாகும் அப்போது அதிக உதவிகள் தேவைப்படும். அதனால் அனைவரும் உதவ வேண்டும்’ என்றார்.

 

இவர் அசாம் வெள்ள நிவாரணத்திற்காக தனது மாத வருமானத்திலிருந்து பாதித்தொகையை வழங்கியுள்ளார். இந்த செயலுக்காக தன்னை பாராட்ட வேண்டாம் என்றும் கூறியுள்ளார். இவரை அனைவரும் சொந்த நகரத்தின் பெயரால்  ’திங் எக்ஸ்பிரஸ்’ என்று செல்லமாக அழைக்கின்றனர்.

 

 

இப்படி பல சாதனைகளை படைத்த ஹிமா தாஸின் ஆங்கிலத்தை இந்திய தடகள சம்மேளனம் 2018ம் ஆண்டு விமர்சித்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 2018ம் ஆண்டு நடைபெற்ற சர்வதேச போட்டியில் பதக்கம் வென்ற இவர் ஆங்கிலத்தில் பேசிய வீடியோவை, இந்திய தடகள சம்மேளனம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தது. வீடியோவிற்கு மேல் எழுதப்பட்டிருந்த வாசகத்தில் அவருக்கு  ஆங்கிலம் சரளமாக பேச வரவில்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்திய தடகள சம்மேளனத்தின் இந்த நடவடிக்கையை  அதிகமானோர் விமர்சித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...