???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் 0 வரும் 21ம் தேதி திமுக தோழமை கட்சிகள் கூட்டம் 0 வங்கி திவால் சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது 0 பள்ளிகள் திறப்புக்கு பின் சுழற்சி முறையிலான வகுப்புகள் கிடையாது: அமைச்சர் செங்கோட்டையன் 0 மொபைல்போன் வாங்க சாக்கடை அகற்றிய மாணவன்: லேப்டாப் வழங்கியது திமுக 0 பிரதமர் மோடியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பலூன்கள் தீப்பிடித்து விபத்து 0 கூகுள் ப்ளேஸ்டோரில் மீண்டும் Paytm ஆப் 0 2021ஆம் ஆண்டு துவக்கத்தில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும்: ஹர்ஷவர்தன் 0 விவசாயிகளை பாதிக்கும் மசோதாவை எதிர்த்து மத்திய அமைச்சர் ராஜினாமா 0 நிலம் கையகப்படுத்த உரிமையாளர்களிடம் இனி ஆலோசிக்கவேண்டாம்: புதிய சட்ட திருத்தம் 0 சமூகநீதிக்காக போராடியவர் பெரியார்; வாழ்த்து கூறுவதில் தயக்கம் இல்லை - பாஜக 0 அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்கும் மசோதா நிறைவேறியது 0 தமிழக அரசு ஒருபோதும் பின்வாங்காது ‘இருமொழி கொள்கையே நீடிக்கும்’: முதலமைச்சர் 0 பாபர் மசூதி இடிப்பு வழக்கு: செப்.30 தீர்ப்பு! 0 மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கொரோனா உறுதி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மீண்டும் காங்கிரசில் சச்சின் பைலட்

Posted : திங்கட்கிழமை,   ஆகஸ்ட்   10 , 2020  21:33:05 IST

காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கு எதிராக துணை முதலமைச்சராக இருந்த சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கினார். தனது ஆதரவு எம்எல்ஏ-க்கள் 18 பேருடன் பாஜக ஆளும் ஹரியானா மாநிலத்தில் உள்ள விடுதியில் தங்கினார்.

இதன் காரணமாக, துணை முதலமைச்சர் மற்றும் மாநில காங்கிரஸ் தலைவர் பதவிகளிலிருந்து சச்சின் பைலட் நீக்கப்பட்டார். அசோக் கெலாட் அரசு கவிழும் சூழல் இருந்த நிலையில், டெல்லியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை சச்சின் பைலட் நேற்று சந்தித்துப் பேசினார்.

ராகுல் காந்தியின் இல்லத்தில் 2 மணிநேரம் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, பிரியங்கா காந்தி உள்ளி்ட்டோரும் உடனிருந்தனர். அப்போது, எதிர்கால முதல்வர் என்று தன்னை அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 3 கோரிக்கைகளை சச்சின் பைலட் வைத்ததாக கூறப்படுகிறது.

இந்த சந்திப்புக்குப் பின்னர் அறிக்கை வெளியிட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், ராஜஸ்தான் அரசு மற்றும் காங்கிரஸ் கட்சியின் நலனுக்காக பணியாற்றுவதாக சச்சின் பைலட் உறுதியளித்ததாக தெரிவித்துள்ளார்.

சச்சின் எழுப்பிய பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண மூன்று பேர் கொண்ட குழுவை அமைக்க கட்சித் தலைவர் சோனியாகாந்தி முடிவுசெய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து, பிரியங்கா காந்தி, வேணுகோபால், அகமது படேல் ஆகியோரைக் கொண்ட குழுவை அமைத்துள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்தது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சச்சின் பைலட், காங்கிரஸ் தலைமையிடம் தங்களது குறைகளை தெரிவித்ததாகவும், உரிய நேரத்தில் தீர்வுகாணப்படும் என்று தலைமை உறுதியளித்ததாகவும் கூறினார். எசச்சின் ஆதரவு எம்எல்ஏ-க்கள் அனைவரும் ராஜஸ்தான் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...