???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 2021ஆம் ஆண்டு துவக்கத்தில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும்: ஹர்ஷவர்தன் 0 விவசாயிகளை பாதிக்கும் மசோதாவை எதிர்த்து மத்திய அமைச்சர் ராஜினாமா 0 நிலம் கையகப்படுத்த உரிமையாளர்களிடம் இனி ஆலோசிக்கவேண்டாம்: புதிய சட்ட திருத்தம் 0 சமூகநீதிக்காக போராடியவர் பெரியார்; வாழ்த்து கூறுவதில் தயக்கம் இல்லை - பாஜக 0 அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்கும் மசோதா நிறைவேறியது 0 தமிழக அரசு ஒருபோதும் பின்வாங்காது ‘இருமொழி கொள்கையே நீடிக்கும்’: முதலமைச்சர் 0 பாபர் மசூதி இடிப்பு வழக்கு: செப்.30 தீர்ப்பு! 0 மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கொரோனா உறுதி 0 கிசான் முறைகேட்டில் ஈடுபட்ட யாரும் தப்பிக்கமுடியாது: வேளாண்துறை அமைச்சர் 0 திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தை இரண்டாகப் பிரிக்கும் தமிழக அரசு அறிவிப்பு 0 ஒகேனக்கல்லில் காவிரி நீர் வரத்து அதிகரிப்பு 0 அண்ணா பல்கலைகழக தேர்வு அட்டவணை வெளியீடு 0 தன்பாலின திருமணங்களுக்கு அரசு அங்கீகாரம் இல்லை: மத்திய அரசு 0 செப்டம்பர் 24ம் தேதி நெட் தேர்வு! 0 'மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு தமிழக அரசு அனுமதிக்காது'
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

முடிவுக்கு வந்ததா ராஜஸ்தான் பிரச்சனை? - ராகுல் காந்தியை சந்தித்த சச்சின் பைலட்

Posted : செவ்வாய்க்கிழமை,   ஆகஸ்ட்   11 , 2020  02:36:03 IST


Andhimazhai Image

ராஜஸ்தான் மாநில அரசியலில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய அம்மாநில முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் நேற்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்,.

காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் அதிருப்தி நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார். அவரது தரப்பில் 19 சட்டமன்ற உறுப்பினர்கள் இருப்பதால் முதல்வர் அஷோக் கெலாட்டுக்கு பெரும்பான்மை இல்லை எனவும் சச்சின் பைலட் பரபரப்பை கூட்டினார்.

ராஜஸ்தானில் வருகின்ற 14-ஆம் தேதி கூடவிருக்கும் சட்டப்பேரவையில் அசோக் கெலாட் தனது பெரும்பான்மையை நிரூபிக்கும் நிர்பந்தம் ஏற்பட்டிருந்த சூழலில் நேற்று எதிர்பாராத விதமாக ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் உயர்மட்ட தலைவர்களை சந்தித்து சச்சின் பைலட் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதன்போது தனது குறைகள் அனைத்தையும் கட்சி தலைமையிடம் சச்சின் பைலட் விரிவாக கூறியதாக தெரிகிறது. அதன்மீது உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்கிற பதிலையடுத்து சச்சின் பைலட் சமாதானம் அடைந்திருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டவர்களுடனான இந்த சந்திப்பு குறித்து பேசியிருக்கும் சச்சின் பைலட், “நான் பதவிக்காக பிரச்சனையை எழுப்பவில்லை, கொள்கைக்காக மட்டுமே போராடுகிறேன். காங்கிரஸ் எனக்குரிய பதவியை அளித்திருக்கிறது. ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை உருவாக்க உழைத்தவர்கள் மதிக்கப்பட வேண்டுமென்பதே எனது எண்ணம். பேச்சுவார்த்தையில் நான் எடுத்துரைத்த குறைகள் தீர்க்கப்படுமென உறுதியளித்திருக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த விவகாரம் குறித்து பேசியிருக்கும் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், உட்கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏக்களுக்கு ஏற்பட்டிருக்கும் முரண்பாடுகள் தொடர்பில் செவிமடுக்கப்படும் என கூறியிருக்கிறார். இதனால் ராஜஸ்தான் அரசியலில் எழுந்த சிக்கல்கள் முடிவுக்கு வந்ததாக கருதப்படுகிறது.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...