???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஜெயலலிதா சகிச்சையின் போது உணவு செலவு மட்டும் ரூ.1.17 கோடி: அப்பல்லோ தகவல் 0 சபரிமலையில் 22- ந் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிப்பு 0 செய்தியாளர்களை சந்திக்க எப்போதும் அஞ்சியதில்லை: முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் 0 சாதாரண மக்கள் பயன்படுத்தும் பொருட்களுக்கு ஜிஎஸ்டி குறைக்கப்படும்: பிரதமர் 0 கீழடியில் 5-ம் கட்ட அகழாய்வுக்கு மத்திய தொல்லியல் துறை அனுமதி! 0 ஜெயலலிதாவின் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு 0 எய்ம்ஸ் மருத்துவமனை விரைந்து செயல்பாட்டுக்கு அரசு உதவும்: பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் 0 "ஆளுநர் மௌனம் காப்பது ஏன்?": அற்புதம் அம்மாள் கண்ணீர் 0 விவசாயக் கடன்கள் தள்ளுபடி: முதல்வராக பதவியேற்றவுடன் முதல் கையெழுத்திட்ட கமல்நாத் 0 500, 2000 ரூபாய் அச்சடித்ததில் செலவு எவ்வளவு? ரிசர்வ் வங்கிக்கு உத்தரவு! 0 சீக்கிய கலவர வழக்கு: காங்கிரசை சேர்ந்த சஜ்ஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை 0 ஆசிரியர் பற்றாக்குறை: வெள்ளை அறிக்கை அளிக்க அரசு தயாரா? ராமதாஸ் கேள்வி 0 ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடினால் நடவடிக்கை! தூத்துக்குடி ஆட்சியர் 0 குட்கா ஊழல்: சென்னையில் 3 இடங்களில் சிபிஐ சோதனை 0 முக்கொம்பில் புதிய அணை கட்ட ரூ.387.60 கோடி ஒதுக்கீடு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சபரிமலையில் பெண்களுக்கு தனியாக நாட்களை ஒதுக்க கேரள அரசு திட்டம்

Posted : வியாழக்கிழமை,   நவம்பர்   15 , 2018  09:26:11 IST

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற தீர்ப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக ஐயப்பன் கோவில் நாளை திறக்கப்பட உள்ள நிலையில், இந்தப் பிரச்னை தொடர்பாக கேரள அரசியல் கட்சிகள் பங்கேற்ற அனைத்துக் கட்சி கூட்டம் இன்று நடந்தது.
 
முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், தீர்ப்பை அமல்படுத்துவதற்கு கால அவகாசம் கேட்டு மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையிட வேண்டும் என்று காங்கிரஸ் மற்றும் பாஜக கோரிக்கை விடுத்தன. ஆனால், தீர்ப்பை அமல்படுத்துவதில் மாநில அரசு உறுதியாக இருப்பதாக பினராயி கூறியுள்ளார். இதனை அடுத்து, காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தன.
 
கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த பினராயி விஜயன், “பக்தர்களின் உணர்வுகளையும் மாநில அரசு மதிக்கிறது. ஆனால், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். பக்தர்களுக்கான பாதுகாப்பை வழங்க வேண்டியது அரசின் கடமை” என்று கூறினார். மண்டல - மகர விளக்கு பூஜையின் போது பெண்களுக்கு மட்டும் தனியாக நாட்களை ஒதுக்கி தரிசனம் செய்ய வகை செய்யும் யோசனை இருப்பதாகவும் கேரள அரசு தெரிவித்துள்ளது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...