???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை: ஐந்து பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை 0 தலைமறைவாக இருந்த நிரவ் மோடி லண்டனில் கைது! 0 மக்களவைத் தேர்தலில் திருமாவளவன் வெற்றி பெற பா.ரஞ்சித் வாழ்த்து! 0 அதிமுக வேட்பாளர்கள் ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல்! 0 பொள்ளாச்சி பாலியல் வழக்கு: சிபிஐ-க்கு மாற்றுவதில் இழுபறி! 0 ₹2,000 சிறப்பு நிதி திட்டம் நிறுத்திவைப்பு: தமிழக அரசு தகவல் 0 அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ் மாரடைப்பால் மரணம் 0 சுயேட்சையாக போட்டியிடும் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.! 0 அ.ம.மு.க-விலிருந்து நீக்கப்பட்ட வி.பி.கலைராஜன் தி.மு.க-வில் இணைந்தார்! 0 திருவாரூரிலிருந்து தேர்தல் பரப்புரையை தொடங்கினார் ஸ்டாலின்! 0 பணக்காரர்கள் தான் காவலாளி வைத்துக்கொள்வார்கள்: பாஜகவை விமர்சித்த பிரியங்கா! 0 தமிழகத்திற்கு சிறப்பு தேர்தல் செலவின பார்வையாளர்கள் நியமனம்! 0 சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் மனைவியை கத்தியால் குத்திய கணவன்! 0 தமிழகம்-புதுவையில் முதல் நாளில் 23 பேர் மனுத்தாக்கல்! 0 ஒட்டப்பிடாரம் தொகுதி தேர்தல் வழக்கை வாபஸ் பெற கிருஷ்ணசாமிக்கு அனுமதி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் ஏராளமான பக்தர்கள் சபரிமலையில் வழிபாடு

Posted : திங்கட்கிழமை,   நவம்பர்   05 , 2018  23:21:22 IST

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்ற தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து, கடந்த மாதம் 17-ம் தேதி கோவில் நடை திறக்கப்பட்டது. அப்போது சில பெண் பக்தர்கள் கோவிலுக்குள் நுழைய முயன்றனர். இதனால் இந்து அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. இதையடுத்து ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.
 
இந்நிலையில் திங்கள்கிழமை மாலை 5 மணிக்கு ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நிலக்கல், பம்பா, சபரிமலை உள்ளிட்ட பகுதிகளில் 144 தடையாணை பிறப்பிக்கப்பட்டது. பெண் நிருபர்கள் செய்தி சேகரிக்க வருவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
 
முதல்முறையாக ஐயப்பன் கோவில் பகுதியில் 50 வயதை கடந்த 15 பெண் போலீசார் பாதுகாப்புப் பணிக்காக நிறுத்தப்பட்டனர். இதைத் தவிர ஏராளமான கமாண்டோ வீரர்கள் உள்ளிட்ட 2000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும், தந்திரி அலுவலகத்தை சுற்றி செல்போன் ஜாமர் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
 
கோவில் வளாகம் முழுவதும் போலீசாரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டிருந்தது. காத்திருந்த ஏராளமான பக்தர்கள் பதினெட்டு படி ஏறி சாமி தரிசனம் செய்தனர். ஆனால் பெண் பக்தர்கள் யாரும் கோவிலுக்கு வரவில்லை.
 
கோவிலுக்கு செல்ல விரும்பும் பெண்கள் தங்களை அணுகினால் பாதுகாப்பாக கோவிலுக்குள் அழைத்துச் செல்ல தயாராக இருப்பதாக கேரள காவல்துறை அறிவித்தது. நடை திறக்கும் வரை சன்னிதானம் பகுதிக்கு யாரும் வரக்கூடாது என்றும், செய்தி சேகரிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சபரிமலைக்கு செய்தி சேகரிக்க செல்லும் ஊடகங்களை தடுக்கக் கூடாது என்றும், சபரிமலையின் அன்றாட பணிகளில் அரசு தலையிடக் கூடாது என்றும் கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...