???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 திமுகவில் இணைந்தது ஏன்? செந்தில் பாலாஜி விளக்கம்! 0 ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெஹ்லாட்: துணை முதல்வர் சச்சின் பைலட் 0 குட்கா வழக்கு: சிபிஐ முன் ஆஜராகிறார் அமைச்சர் விஜயபாஸ்கர் 0 125 ஆண்டுகால காவிரி பிரச்னையை பேசி தீர்க்க விருப்பம்: கர்நாடக முதலமைச்சர் 0 இந்திய ரூபாய் நோட்டுகளுக்கு நேபாளத்தில் தடை 0 'பெய்டி' புயல் காரணமாக இன்றும் நாளையும் கனமழை வாய்ப்பு! 0 திமுக அற்ப விஷயங்களுக்காக சந்தோஷம் கொள்கிறது: டிடிவி தினகரன் விமர்சனம் 0 ரஃபேல் ஒப்பந்தத்தை ரத்து செய்ய தேவையில்லை: உச்ச நீதிமன்றம் 0 மத்திய பிரதேச முதல்வராகிறார் கமல்நாத் கமல் நாத் 0 2019 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை: கால அவகாசம் கேட்கும் வணிகர்கள்! 0 சசிகலாவிடம் எட்டரை மணி நேரம் வருமான வரித்துறை விசாரணை 0 8 வழிச்சாலைத் திட்டம் நிச்சயம் செயல்படுத்தப்படும்: முதலமைச்சர் உறுதி 0 மதிமுக, திமுகவுக்கு சென்றுவிட்டு அதிமுகவுக்கு வந்தவர் செந்தில் பாலாஜி: அமைச்சர் விமர்சனம் 0 சுயநலனுக்காக விலகுவது இயல்புதான்: டிடிவி தினகரன் கடும் தாக்குதல்! 0 ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சபரிமலையில் பெண்களை அனுமதிக்க முடியாது: தேவசம் போர்டு வாதம்

Posted : வியாழக்கிழமை,   ஜுலை   19 , 2018  08:06:08 IST

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களை ஏன் அனுமதிக்க முடியாது என்பது குறித்து உச்ச நீதிமன்றத்தில் தேவசம் போர்டு இன்று விளக்கம் அளித்துள்ளது. கேரள மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். பெண்களில் 10 வயது முதல் 50 வயதுக்குட்டப்பட்டவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இந்நிலையில் பெண்களை அனுமதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆண்களைப் போல பெண்களுக்கும் வழிபாடு நடத்த உரிமை உள்ளது என்றும் பெண்களை அனுமதிக்க மறுப்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்றும் கருத்து தெரிவித்தனர். தேவசம்போர்டு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்  ‘சபரிமலையில் ஐயப்ப சாமி தரிசனம் செய்ய பெண்களுக்கு சில கட்டுப்பாடுகள் உள்ளன. 10 வயது முதல் 50 வயது வரையுள்ள பெண்களால் 48 நாட்கள் விரதமிருக்க முடியாது என்பதால் அவர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவல்லை’ என தெரிவித்தார்.  இதையடுத்து வழக்கு விசாரணை வரும் செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது. 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...