???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 இந்தியாவுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை: இம்ரான் கான் 0 ப.சிதம்பரத்தை சிபிஐ கையாளும் விதம் மிகவும் வருத்தமளிக்கிறது: மம்தா பானர்ஜி 0 அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவு! 0 ஸ்டெர்லைட் ஆலையில் விஷவாயு தாக்கி 13 ஊழியர்கள் இறந்தது உண்மையா? ஆதாரம் அளிக்க நீதிமன்றம் உத்தரவு 0 ப.சிதம்பரத்திடம் இன்று இரவு முதல் சிபிஐ விசாரணை தொடங்குகிறது! 0 அன்னிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு 0 நிலவின் முதல் படத்தை அனுப்பியது சந்திரயான் - 2 0 காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்வது குறித்து டிரம்ப் மீண்டும் பேட்டி 0 காஷ்மீர் விவகாரத்தை திசை திருப்பவே ப. சிதம்பரம் கைது நடவடிக்கை: கார்த்தி சிதம்பரம் 0 ப.சிதம்பரத்தை வேட்டையாட துடிப்பது வெட்கக்கேடானது: பிரியங்கா காந்தி 0 நீதிக்கு தலைவணங்குவேன்; தலைமறைவாக மாட்டேன்: கைதாகும் முன் பேட்டியளித்த ப.சிதம்பரம் 0 ப.சிதம்பரத்துக்கு எதிராக அதிகார துஷ்பிரயோகம்: ராகுல் காந்தி, மு.க.ஸ்டாலின் கண்டனம் 0 காஷ்மீர் விவகாரம்: டெல்லியில் திமுக இன்று ஆர்ப்பாட்டம் 0 ப. சிதம்பரம் கைதை கண்டித்து தமிழகத்தில் இன்று ஆர்ப்பாட்டம் 0 10,000 ஊழியர்களை நீக்க பார்லே நிறுவனம் முடிவு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சபரிமலைக்கு வந்த பெண் பக்தரை தடுத்ததாக 200 பேர் மீது வழக்கு

Posted : புதன்கிழமை,   நவம்பர்   07 , 2018  06:03:48 IST

திருவாங்கூர் கடைசி மன்னர் சித்திர திருநாள் பலராம வர்மா-வின் பிறந்தாளை ஒட்டி சபரிமலை ஐயப்பன் கோவில் 2 நாட்களுக்கு திறக்கப்பட்டது. சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில், போராட்டங்களை தடுக்கும் வகையில், நிலக்கல், பம்பை, சன்னிதானம் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
 
நேற்று கோவிலுக்கு வந்த 52 வயதான லலிதா ரவி என்ற பெண்ணை, பக்தர்கள் சிலர் முற்றுகையிட்டு, சரண கோஷங்களை எழுப்பினர். இந்த போராட்டத்தின் போது செய்தியாளர்கள் மீதும் தாக்குதல் நடந்தது.  திருச்சூரைச் சேர்ந்த லலிதா, தனது பேரனுக்கு முதல் உணவு வழங்கும் நிகழ்ச்சிக்காக குடும்பத்துடன் சபரிமலைக்கு வந்திருந்தார்.
 
லலிதா அளித்த புகாரின் பேரில், அடையாளம் தெரியக்கூடிய 200 பேர் மீது சன்னிதானம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக திருவனந்தபுரத்தில் பேட்டி அளித்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், சபரிமலையில் கலவரம் ஏற்படுத்த சிலர் முயல்வதாக குற்றம்சாட்டினார்.
 
இதனிடையே சபரிமலை பதினெட்டாம் படியில் இருமுடி இன்றி ஆர்.எஸ்.எஸ்.தலைவர் வல்சன் திலாங்கேரி சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இருமுடி இன்றி யாரும் பதினெட்டாம் படி ஏறக் கூடாது என்பது சபரிமலை கோயிலின் வழக்கமாக உள்ளது. இந்நிலையில் அந்த வழக்கத்தை வல்சன் திலாங்கேரி மீறியது குறித்து விசாரணை நடத்தப்படும் என திருவாங்கூர் தேவசம் போர்டு உறுப்பினர் சங்கரதாஸ் தெரிவித்துள்ளார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...