???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் கைது! 0 முதல்வர் தவறு செய்யவில்லை எனில் எதற்கு பதற வேண்டும்? தினகரன் கேள்வி 0 ஆடிட்டர் குருமூர்த்தி சொல்வது கேலியாக உள்ளது: தம்பிதுரை 0 எதிர்க்கட்சிகளின் பொதுக்கூட்டம் பாஜகவுக்கான சாவுமணி: மம்தா பானர்ஜி 0 கர்நாடகாவில் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் 0 வசூலில் கடந்த ஆண்டை ஓரங்கட்டிய டாஸ்மாக்! 0 விழா இன்றி திறக்கப்பட்டது எம்ஜிஆர் நூற்றாண்டு நினைவு வளைவு 0 தண்டனையை ரத்து செய்யக்கோரி பாலகிருஷ்ணா ரெட்டி உச்ச நீதிமன்றத்தில் மனு 0 சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா உள்பட 4 பேர் நீக்கம் 0 தமிழும் சித்தர்களும்-23 மருத்துவர் சிவக்குமார் பெருமாள் எழுதும் தொடர்! 0 காணும் பொங்கல்: மெரினாவில் பலத்த பாதுகாப்பு! 0 சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற அருண் ஜெட்லி: நலம்பெற வாழ்த்து கூறிய ராகுல் காந்தி 0 ட்விட்டரில் “பேட்ட”, “விஸ்வாசம்” வசூல் சர்ச்சை! 0 அலங்காநல்லூரில் தொடங்கியது ஜல்லிக்கட்டு போட்டி! 0 கர்நாடகத்தில் ஆட்சியமைக்க பாஜக முயற்சி: துணை முதல்வர் காட்டம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சபரிமலை செல்பவர்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும்: பினராயி விஜயன் உறுதி

Posted : செவ்வாய்க்கிழமை,   அக்டோபர்   16 , 2018  22:21:16 IST

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. இதனை, எதிர்த்து தமிழகம் மற்றும் கேரளாவில் பல போராட்டங்கள் நடந்து வருகிறது.
 
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை முழுமையாக அமல்படுத்துவோம் என கேரள அரசு ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில், தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என கேரளாவில் பாஜக நேற்று பிரம்மாண்ட பேரணி நடத்தியது.
 
மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை திறக்கப்பட உள்ள நிலையில், எல்லா பெண்களும் உள்ளே நுழைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு போராட்டங்கள் நடக்கலாம் என கூறப்பட்டது.
 
இந்நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், “சபரிமலைக்குள் வரும் அனைவருக்கும் உரிய பாதுகாப்பு அளிக்கப்படும். சட்டம் - ஒழுங்கை வேறு யாரும் கையில் எடுக்க அனுமதிக்க மாட்டோம். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படாது. தீர்ப்பு அனைத்து வகையிலும் செயல்படுத்தப்படும்” என தெரிவித்தார்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...