???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பிரதமரின் இதயத்தில் ஏழைகளுக்கு இடமில்லை: ராகுல் குற்றச்சாட்டு 0 அசாமில் போலி என்கவுண்டர்: ராணுவ மேஜர் ஜெனரலுக்கு ஆயுள் தண்டனை! 0 #MeToo புகார் கூறிய பெண் பத்திரிகையாளர் மீது எம்.ஜே. அக்பர் மானநஷ்ட வழக்கு 0 #Metoo எதிரொலி : பெண் எஸ்.பி பாலியல் புகார் குறித்து விபரம் கேட்கும் பிரதமர் அலுவலகம் 0 கலைஞர் கருணாநிதி சிலையை திறக்க சோனியாவிற்கு அழைப்பு 0 வைரமுத்து மீது ஏன் நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள்: திலகவதி கேள்வி 0 பாலியல் துன்புறுத்தல் திரைத்துறையில் மட்டுமல்ல, எல்லா துறைகளிலும் இருக்கிறது: கமல் 0 நியாய விலை கடை ஊழியர்கள் இன்றுமுதல் வேலைநிறுத்தம் 0 பெட்ரோல் விலையேற்றம்: எண்ணெய் நிறுவன அதிபர்களுடன் பிரதமர் ஆலோசனை 0 என் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் பொய்யானவை: அமைச்சர் எம்.ஜே அக்பர். 0 லஞ்ச ஒழிப்புத்துறை அதிமுகவின் கீழ் இயங்குவது வெட்கக்கேடானது: மு.க. ஸ்டாலின் 0 என்னை விலைக்கு வாங்க முயன்றார்கள்: கமல் ஹாசன் 0 தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி பினு கைது 0 #MeToo புகாரை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழு: மேனகா காந்தி அறிவிப்பு 0 மக்களவைத் தேர்தல் குறித்து விவாதிக்க திமுக உயர்நிலை செயல்திட்ட கூட்டம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சபரிமலை கோயிலுக்குள் பெண்களை அனுமதிக்கத் தயார்: கேரளா அரசு மனு

Posted : திங்கட்கிழமை,   நவம்பர்   07 , 2016  08:22:51 IST

கேரளா மாநிலத்தில் உள்ள சபரிமலை கோயிலுக்குள் தற்போது 10 வயதிற்குட்பட்ட சிறுமிகளுக்கும், 50 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கும் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. எனவே சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வகையான பெண்களை அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
 
இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின் போது கேரள அரசும், கோயில் தேவஸ்தானமும் கூறியதில், காலம்காலமாக பின்பற்றப்பட்டு வரும் பாரம்பரியத்தை தகர்த்து அனைத்து வகையான பெண்களையும் அனுமதிக்க முடியாது என தெரிவித்திருந்தது. அப்போது கேள்வி எழுப்பிய நீதிபதிகள் குழந்தை திருமணம் கூட முந்தைய காலத்தில் பின்பற்றப்பட்டு வந்தது தான். ஆனால் தற்போது அது சமூகத்திற்கு ஒவ்வாமை என்பதால் அதற்கு தடை விதிக்கவில்லையா? என கேள்வி எழுப்பினர். மேலும், பாரம்பரியம் என்ற ஒரே காரணத்தை மட்டும் கூறி பெண்களை அனுமதிக்க மறுப்பது எந்தவிதத்தில் நியாயம் எனவும் வினா எழுப்பியிருந்தனர்.
 
கடந்த மே மாதம் கேரளாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. முதலமைச்சர் உம்மண் சாண்டி தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சி அகற்றப்பட்டு இடதுசாரிகள் தலைமையில் பினராயி விஜயனின் ஆட்சி அமைத்தது. இந்நிலையில் இன்றைய உச்சநீதிமன்ற வழக்கு விசாரணையின் போது பதில் மனு தாக்கல் செய்த கேரள அரசு, சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயதிற்குட்பட்ட பெண்களையும் அனுமதிக்கத் தயார் என தெரிவித்தது. இந்த வழக்கு தொடர்பான அடுத்த கட்ட விசாரணை வரும் 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20-ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...