???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 நான் பேசியதில் எந்த தவறும் இல்லை: கருணாஸ் கருத்து! 0 கீழடியில் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய எலும்புகள் கண்டுபிடிப்பு 0 கன்னியாஸ்திரி பாலியல் புகார் வழக்கில் பேராயர் ஃபிராங்கோ கைது 0 தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த குழு ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு! 0 பங்குசந்தை வர்த்தகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு வீழ்ச்சி 0 அனில் அம்பானி நிறுவனத்தை மட்டுமே இந்தியா சிபாரிசு செய்தது: ஃபிரான்ஸ் முன்னாள் அதிபர் 0 ஜல்லிக்கட்டு கலவரம் விசாரணை: 3 மாதங்களில் முடிக்க நீதிமன்றம் உத்தரவு 0 முத்தலாக் சட்டம் இஸ்லாமிய பெண்களின் சிக்கலை தீர்க்காது: ராமதாஸ் 0 பாளையங்கோட்டையில் 14 நாட்களுக்கு மின்தடை அறிவிப்பு 0 ஜெயலலிதா-சசிகலா வாழ்க்கையை மையப்படுத்தி உருவாகிறது `தி அயர்ன் லேடி’! 0 'காற்றாலை மின்சார ஊழல்: அமைச்சர் தங்கமணி பதவி விலகுவாரா?' மு.க.ஸ்டாலின் கேள்வி 0 பெண்களை இழிவுபடுத்தி பேசியதாக ஹெச்.ராஜா மீது பல்வேறு இடங்களில் வழக்குப்பதிவு 0 7 பேர் விடுதலையில் ஆளுநர் நடவடிக்கை எடுக்காதது வேதனை அளிக்கிறது: ராமதாஸ் 0 லஞ்ச வழக்கில் கைதான ஆர்.டி.ஓ. வங்கி லாக்கரில் 8.7 கிலோ தங்கம்! 0 திமுக-காங்கிரஸை கண்டித்து தமிழகமெங்கும் கண்டன பொதுக்கூட்டம்: அதிமுக அறிவிப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

சபரிமலை தேவசம்போர்டு தலைவருக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு

Posted : செவ்வாய்க்கிழமை,   நவம்பர்   24 , 2015  21:20:49 IST


Andhimazhai Image

சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த தேவசம்போர்டு தலைவர் பரயாறு கோபால கிருஷ்ணனுக்கு, சமூக வலைதளங்களில் பெண்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

கேரளாவின் கொல்லம் நகரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய கோபால கிருஷ்ணனிடம் சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்படுவார்களா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்துப் பேசிய அவர், மனிதர்களிடம் ஆயுதம் இருக்கிறதா? என்பதைக் கண்டறிய தற்போது கருவிகள் உள்ளதாகவும், பெண்கள் மாதவிடாய் காலத்தில் இருக்கிறார்களா? என்பதை கண்டறிய கருவிகள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று குறிப்பிட்டார்.

இதற்கு கேரளா மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள பெண்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பேஸ்புக் வலைதளத்தில், #HappyToBleed என்ற பக்கத்தை கடந்த 20ம் தேதி உருவாகியுள்ள எதிர்ப்பாளர்கள், தேவசம்போர்டு தலைவர் கருத்துக்கு, தங்களின் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...