???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 காந்தி பிறந்த நாள்: பாலிவுட் நட்சத்திரங்களுடன் கலந்துரையாடிய பிரதமர்! 0 வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு: நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு! 0 பணப்புழக்கம் குறைந்ததே தீபாவளி விற்பனை குறையக் காரணம்: வணிகர் சங்கம் 0 பொறுப்பு அதிகமாகியுள்ளது: டாக்டர் பட்டத்துக்குப் பின் முதலமைச்சர் பேச்சு! 0 ராமதாஸின் கேள்விகளுக்கு விடையளிக்க மு.க.ஸ்டாலின் மறுப்பது ஏன்? ஜி.கே.மணி கேள்வி 0 சென்னை: அதிகாலையில் கனமழை! 0 இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது! 0 மகாராஷ்டிரம், ஹரியானா சட்டப்பேரவை தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது! 0 தமிழக அமைச்சர்களை அவதூறு செய்ததாக சீமான் மீது வழக்கு! 0 பாகிஸ்தான் இராணுவம் தாக்கியதில் 2 இந்திய வீரர்கள் மரணம்! 0 இடைத்தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது: நாளை வாக்குப்பதிவு! 0 இன்னும் ஒரு மாதத்தில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி கவிழும்: மு.க.ஸ்டாலின் 0 அ.தி.மு.க. வேட்பாளர்களை வெற்றி பெற செய்தால் அரசு நிர்வாகம் மேலும் வலுவூட்டும்: அதிமுக அறிக்கை 0 தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் 0 பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக கூறி ரூ.23 கோடி மோசடி
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ஐடி ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றுவது காலம்காலமாக நடந்து வருகிறது: எஸ்.பி.வேலுமணி

Posted : திங்கட்கிழமை,   ஜுன்   17 , 2019  22:39:25 IST

தமிழகம் முழுவதும் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவி வரும் நிலையில், குடிநீர் திட்ட செயல்பாடு மற்றும் விநியோகம் தொடர்பாக சென்னையில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மை செயலாளர் ஹர்மந்தர் சிங், குடிநீர் வாரிய இயக்குநர் மகேஸ்வரன், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் கடல் நீரை குடிநீராக்கும் புதிய திட்டப் பணிகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டன.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, போதிய மழைப் பொழிவு இல்லாததால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துவிட்டதாகவும், அதனைச் சரிசெய்ய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார். சென்னையில் வரும் நவம்பர் மாதம் வரை தட்டுப்பாடின்றி தண்ணீர் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

இதுபோன்ற சூழலில் மற்ற மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் அரசுக்கு ஒத்துழைப்பு அளிப்பதாகவும், ஆனால் தமிழகத்தில் குடிநீர் பிரச்னையை திசைதிருப்ப முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

தண்ணீர் தட்டுப்பாட்டால் உணவகங்கள், ஐடி நிறுவனங்கள் மூடப்படுவதாக சிலர் தவறான பிரசாரம் செய்து வருவதாக குற்றம்சாட்டிய எஸ்.பி.வேலுமணி, ஐடி நிறுவன ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்றுவதே காலம்காலமாக இருந்து வருவதாகவும், இவை தண்ணீர் தட்டுப்பாட்டிற்காக இல்லை என்று விளக்கம் அளித்தார்.

நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்காக கூடுதலாக அமைக்கப்பட்ட ஆலை இன்னும் 10 நாட்களில் பயன்பாட்டிற்கு வரும் எனவும் அவர் தெரிவித்தார். பருவமழைக்கு முன்பே தமிழகத்தில் குடிமராமத்து பணிகளை முடிக்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

இதனிடையே, குடிநீர் பிரச்னை தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறவிருந்த ஆலோசனை கூட்டம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.
 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...