???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 உச்சநீதிமன்றத்துக்கு இரவில் வழக்கறிஞர்கள் அனுப்பிய கடிதம்! 0 இந்தியா-சீனா எல்லைப் பிரச்சனையில் சமரசம் செய்ய தயார்: அமெரிக்க அதிபர் 0 தமிழகத்தில் புதிதாக 675 மருத்துவர்கள் 3 மாத ஒப்பந்த அடிப்படையில் நியமனம் 0 அயனாவரம் சிறுமி வன்கொடுமை: கைதி சிறையில் தற்கொலை 0 சென்னையில் கொரோனா தொற்று ஏற்பட்டோரின் எண்ணிக்கை 12 ஆயிரத்தை கடந்தது! 0 தமிழகத்தில் ரூ.15 ஆயிரம் கோடி முதலீடு: 17 நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் 0 2020-21-ம் ஆண்டுக்கான புதிய பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல் 0 சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தலைமை செவிலியர் உயிரிழப்பு 0 கொரோனா இன்று: தமிழகம் 853; சென்னை 558! 0 ஜெ. வீட்டை தமிழக முதல்வர் இல்லமாக பயன்படுத்தலாம்!- நீதிமன்றம் 0 தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 17 ஆயிரத்து 728 ஆனது! 0 அரசுக்கு தெரிவிக்காமல் ரயில்களை அனுப்பக்கூடாது: பினராயி விஜயன் 0 ஊரடங்கு தோல்வியடைந்துவிட்டது என்பதை ஒப்புக்கொள்ளுங்கள்: ராகுல் காந்தி 0 புலம்பெயர் தொழிலாளர்கள் நிலை குறித்து உச்சநீதிமன்றம் வேதனை 0 11 நாட்கள் மது விற்பனை வருமானம் ரூ. 1062 கோடி!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

“அவருக்கு எப்போதும் நான் 'குட் பை' சொல்லமாட்டேன்!’’ - எஸ். முத்தையா - நினைவுக்கூட்டத்தில் புகழாரம்

Posted : புதன்கிழமை,   ஜுன்   12 , 2019  02:41:04 IST


Andhimazhai Image
எழுத்தாளர், வரலாற்று ஆய்வாளர், பத்திரிகையாளர் என பன்முகத்தன்மைகொண்ட ஆளுமை எஸ்.முத்தையாவை நினைவுக்கூர சென்னையில் உள்ள ரோஜா முத்தையா ஆய்வு நூலகத்தில் நேற்று கூட்டம் ஒருங்கிணைக்கப்பட்டது. 
 
தனது இளமைக் காலத்தை இலங்கையில் கழித்த எஸ். முத்தையா, சமூக புலத்தில் இயங்க முதலில் தேர்ந்தெடுத்தது பத்திரிகையாளர் பணியைதான். அமெரிக்காவில் பொறியியல், அரசியல் அறிவியல் கல்வி படித்தபோதே அங்கு நியுயார்க் டைம்ஸ் பத்திரிகையிலும், பின்னர் சிலோன் டைம்ஸ் பத்திரிகைகளில் முத்தையா பணியாற்றினார். 1968-ஆம் ஆண்டில் தமிழகம் வந்தபிறகு வரலாற்று – பண்பாட்டு ஆய்வு தளங்களில் தனது சிந்தனையை அவர் விஸ்தரித்துக் கொண்டார். சென்னை நகரின் பாரம்பரியத்தை போற்றுவதிலும், அதன் சிறப்புகளை பாதுகாப்பதிலும் முத்தையா அவர்களின் பங்கு முதன்மையாக இருந்திருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் எஸ். முத்தையா மறைந்ததைத் தொடர்ந்து நேற்று இந்த நினைவு கூட்டம் நடைபெற்றது.
 
ஆய்வுப்புத்தகங்கள் அடுக்கப்பட்டிருந்த நூலகத்தில் அமைந்த அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த எஸ். முத்தையா நினைவுக்கூட்டத்தில் அவரோடு பயணித்தவர்களும், பாரம்பரிய நிகழ்வுகள், வரலாற்றுப் பண்பாட்டு ஆய்வுகளில் முத்தையா அவர்களோடு உடனிருந்தவர்களும் தமது நினைவுகளை பகிர்ந்துக்கொள்ள தயாராக இருந்தனர்.
 
இதன்போது உரையாற்றியவர்கள் அனைவரும் தங்களோடு முத்தையா கொண்டிருந்த பிணைப்பை எளிமையாக கூறினார்கள். 
 
நிழல் அமைப்பைச் சேர்ந்த ஷோபா மேனன் பேசுகையில், "முத்தையாவுடனான 25 ஆண்டுகால நட்பில் எனது பல்வேறு முன்னெடுப்புகளுக்கு அவர் உறுதுணையாக இருந்திருக்கிறார். அவருடனான அனுபவ பயணம் அற்புதமானதாக இருந்தது. அவரது வழிகாட்டுதலில் மெட்ராஸ் நகரம் பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டேன். அவற்றைக் குறித்து எழுதுமாறு எனக்கு தொடர்ந்து ஊக்கமளித்தவர் முத்தையா. எனது அனைத்து எழுத்துப்பணிகள், சமூக பணிகளில் முத்தையாவின் பங்களிப்பு இருந்ததில் பெருமிதம்கொள்கிறேன். எப்பொழுதும் அவர் எங்களின் நினைவுகளில் இருக்கிறார்" என்று கூறினார்.
 
முத்தையா உடனான தனது அனுபவத்தை சற்று கலகலப்பான தொனியில் கூறிய ஸ்ரீராம், "1996-ஆம் ஆண்டு முதன்முதலில் நான் முத்தையாவை சந்தித்தேன். அதன் பிறகு ஒவ்வொரு வாரமும் அவரை சந்தித்து பேசுவதை வழக்கமாக கொண்டிருந்தேன். தன்னை சந்திப்பவர்களை அனைத்து வகையிலும் உற்சாகப்படுத்துவது முத்தையாவின் சிறப்பம்சம். முகப்பேரில் ஒரு அற்புதமான ஆய்வு நூலகம் (ரோஜா முத்தையா நூலகம்) இருப்பதாக எனக்கு அறிமுகப்படுத்தியவர் முத்தையாதான். அப்போது தொடர்ச்சியாக அங்கு சென்று படித்ததின் அனுபவங்களை முத்தையா என்னோடு பகிர்ந்துக்கொள்வார். பின்பு ரோஜா முத்தையா நூலகம் தரமணிக்கு மாற்றப்பட்டபோது நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்தோம். பல்வேறு தளங்களில் அவரது அறிவுக்கூர்மை வியப்பளிக்கக்கூடியதாக இருக்கும். தரங்கம்பாடி பற்றிய ஆய்வுகளுக்கு எனக்கு 500 – 1000 பக்கங்களுக்கு குறிப்பு தேவைப்படும். ஆனால் முத்தையா, அனைத்தையும் தனது நினைவிலேயே வைத்திருப்பார். ரோஜா முத்தையா நூலகத்தை பயன்படுத்த ஏராளமான ஆய்வாளர்களுக்கு முத்தையா ஊக்கமளித்திருக்கிறார். நூலகத்தின் சிறப்பையும் அதன் வரலாற்று முக்கியத்துவத்தையும் முத்தையா அற்புதமாக விளக்குவார். தினம்தினம் எனது சிந்தனையில் உதிக்கும் மனிதராக இருக்கும் முத்தையா, இன்றும்கூட எனது கனவில் என்னுடன் பயணித்தார். அவருக்கு எப்போதும் நான் 'குட் பை' சொல்லமாட்டேன், ஏனெனில் அவர் நம்மோடுதான் இருக்கிறார்,'' என கூறினார்.
 
கோம்பை அன்வர் பேசுகையில், "இலங்கை, மெட்ராஸ் ஆகியவற்றின் முத்தையாவின் வரலாற்று ஆய்வு தனித்துவம் வாய்ந்தவை. அவரது புரிதல் பரந்துபட்ட எல்லையை கொண்டிருந்தது. குறிப்பாக அவரது பார்வை அனைத்திலிருந்தும் வேறுபட்ட கோணத்தில் இருக்கும். எனது 'யாதும்' ஆவணப்படத்தை முத்தையாவும், கவிக்கோ அப்துல் ரகுமானும் இணைந்து வெளியிட்டு சிறப்பித்தனர். 'யாதும்' உருவாக்கத்தில் எனக்கு பல்வேறு வகையில் முத்தையா உறுதுணையாக இருந்தார். அவர் சொன்ன திருத்தங்கள், ஆலோசனையிலிருந்துதான் 'யாதும்' முழுமையடைந்தது," என்றார்.
 
இவர்களோடு அரங்கில் குழுமியிருந்த பலரும் முத்தையா பற்றிய நினைவுகளை வெளிப்படுத்திக்கொண்டனர். அவற்றின் ஊடாக முத்தையா எனும் ஆளுமையை இன்னும் கூடுதலாக உள்வாங்கிகொள்ளும் வாய்ப்பினை இந்நிகழ்ச்சி அளித்தது.
 
- வசந்தன்

English Summary
s muthiah memorial meeting

click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...