???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 மத்திய வேளாண் சட்டத்திற்கு எதிராக ராஜஸ்தானிலும் மசோதா 0 கமலுடன் நடித்த காட்சிகளை நீக்கியதால் அழுதேன் : நவாசுதீன் சித்திக் 0 ’தீபாவளிக்கு 25,000 டன் வெங்காயம் இறக்குமதி’ – பியூஷ் கோயல் 0 ’தமிழ் இன உரிமைகளை காத்திட உறுதி கொள்வோம்’ – வைகோ 0 ’டாஸ் ஜெயித்திருந்தால் பவுலிங் எடுத்திருப்போம்’ – கே.எல்.ராகுல் 0 சகாயம் ஐ.ஏ.எஸ் விருப்ப ஓய்வு! 0 அதிமுக ஆட்சியின் வேதனைகளை மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள்: மு.க.ஸ்டாலின் கடிதம் 0 இன்றுடன் முடிகிறது நான்காம் கட்ட ஊரடங்கு 0 35 அரசு அலுவலகங்களில் கணக்கில் காட்டாத ரூ.4.12 கோடி பறிமுதல் 0 25 ஆயிரம் டன் வெங்காயம் தீபாவளிக்குள் வந்து சேரும்: மத்திய அமைச்சர் 0 எம்.ஜி.ஆருக்கு பின் கட்சி ஆரம்பித்த நடிகர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை: கடம்பூர் ராஜூ 0 தமிழகத்தில் நவம்பர் 18ம் தேதிக்கு முன் மருத்துவக் கலந்தாய்வு 0 சி.எஸ்.கே ரசிகர்களின் வேதனை! 0 ஆளுநர் தாமதத்தால் 7.5% உள்ஒதுக்கீட்டுக்கு அரசாணை: முதலமைச்சர் பழனிசாமி 0 மகர விளக்கு பூஜைக்காக வரும் நவம்பர் 15ல் சபரிமலை திறப்பு
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ரஷ்யா: ஏசுவின் ‘மறுபிறவி’ கைதானார்!

Posted : வியாழக்கிழமை,   செப்டம்பர்   24 , 2020  07:44:19 IST


Andhimazhai Image

இயேசுவின் மறுபிறவி என தன்னை அடையாளப்படுத்திக்கொண்டு பெரும் ஆதரவாளர் கூட்டத்தை வைத்திருந்த ஒருவரை சைபீரியாவில் ரஷ்ய பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.

செர்கெய் டொரொப் என்கிற அந்த 59 வயது நபர் வெள்ளைநிற அங்கியுடன் நீண்ட தலைமுடியுடன் இயேசுநாதரைப்போல் காட்சியளிக்கிறார். வைசாரியன் என அழைக்கப்படும் அந்த நபருக்கு சைபீரியாவில் ஏராளமான சீடர்கள் இருக்கிறார்கள். அவர்களை அனைவரும் செர்கெய் டொரொப்பை “சைபீரியாவின் இயேசு” என்றே அழைக்கிறார்கள்.  இவர்கள் அனைவரும் சைபீரியாவில் ஒதுக்குப்புறமான கிராமங்களில் இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் வசிக்கிறார்கள்.

ஆனால், பின்னர் தன்னை நம்பிய மக்களை ஏமாற்றி, மோசடியில் ஈடுபட்டதாக  செர்கெய் டொரொப் இப்போது கைது செய்யப்பட்டிருக்கிறார். சட்டத்துக்குப் புறம்பான மத அமைப்பு நடத்தியதும் அவர் மீதான குற்றச்சாட்டுகளில் ஒன்று.

ரஷ்யாவில் கம்யூனிஸ்ட் ஆட்சி வேகமாக சரிந்துவந்த காலமான 1989-இல் தனது போக்குவரத்து போலீஸ் அதிகாரி வேலையை உதறிவிட்டு இறைபணியில் ஈடுபட தொடங்கியதாக டொரொப் கூறுகிறார். பின்னர், 1991-இல் கடைசி ஏற்பாட்டு தேவாலயம் (சர்ச்) என்கிற திருச்சபையை நிறுவி ஏராளமான மக்களிடம் ஆதரவை பெற்றிருக்கிறார்.

தன்னை இயேசுநாதரின் மறுபிறவியாக ஏற்ற மக்களிடம் டொரொப் மிகுந்த செல்வாக்குடையவராக இருந்தார் என்பதை, அவரது சீடர்களும் ஆதரவாளர்களும் வெளியிட்ட புகைப்படங்கள், காணொலிகள் உறுதிபடுத்துகின்றன. அவரது குழுவில் சுமார் 7,000 மக்கள் இணைந்திருந்திருக்கிறார்கள். உள்ளூர் மற்றும் வெளிநாட்டவரும் அதில் அடக்கம். “ நான் கடவுள் அல்ல. ஏசுவும் கடவுள் அல்ல. கடவுளின் வார்த்தையே நான். கடவுள் என் மூலமாகப் பேசுகிறார்” என்பதே இவர் சொல்வது.

இவரது மதக்குழுவினர் பழங்கால கிறித்துவ சடங்குகளை மேற்கொண்டனர். இவர்களின் குழு வாழ்வில் பணம் தடை செய்யப்பட்டுள்ளது. சைவ உணவே பிரதானம். இவர் பிறந்த 1961-இல் இருந்தே ஆண்டுகளை இவர்கள் கணக்கிட்டனர். டிசம்பர் 25க்குப் பதிலாக இவரது பிறந்தநாளான ஜனவரி 14 கிறிஸ்துமஸ் ஆகக் கொண்டாடப்பட்டது.

சரி இவ்வளவு நாள் ஏன் விட்டுவைத்தார்கள்? இப்போது ஏன் கைது செய்ய இறங்கினார்கள் என்று தெரியவில்லை. உள்ளூரில் தொழில்நிறுவனங்களுடன் இந்த மத அமைப்புக்கு ஏற்பட்ட மோதல் இந்த கைதுக்குக் காரணமா என்றும் சந்தேகம் உள்ளது. ஆனால் இவரது 7000த்துக்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் நிலை என்ன ஆகும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...