அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 3 நிமிடத்தில் 900 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய சி.இ.ஓ! 0 பேரறிவாளன் விடுதலை: மத்திய அரசு இனியும் தாமதிக்க கூடாது - நீதிமன்றம் 0 காவல் துறை விசாரணையில் அதிகரிக்கும் இளைஞர்களின் மரணம்! 0 இங்கிலாந்தில் ஒமைக்ரான் வைரஸ் சமூக பரவலாக மாறிவிட்டது: அமைச்சர் தகவல் 0 தனக்கு தானே பிரசவம் பார்த்த பெண் மீது வழக்குப் பதிவு! 0 மத்திய அரசு என்ற ஒன்று இருக்கிறதா? - ஜோதிமணி எம்.பி! 0 இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை பிப்ரவரி மாதம் தாக்கும்! 0 நாகலாந்தில் பொதுமக்கள் சுட்டுக் கொலை: மத்திய அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் 0 'பஞ்சாப் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி': அமரிந்தர் சிங் அறிவிப்பு 0 திமுக அரசை கண்டித்து டிசம்பர் 9ல் அதிமுக மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் 0 ரஷ்யாவின் சிறந்த நட்பு நாடாக இந்தியா நிகழ்கிறது - விளாதிமீர் புதின் 0 இந்தியா - ரஷ்யா இடையே 21ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன! 0 கொரோனா விதிமுறையை மீறிய கமல்ஹாசன்: விளக்கும் கேட்கும் தமிழக அரசு! 0 அம்பேத்கர் வழியில் உறுதியேற்போம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! 0 அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு 252 வேட்புமனுக்கள் தாக்கல்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

பேனர்கள் வைப்பதை தடுக்க விதிகள் வகுக்க வேண்டும்; தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு!

Posted : செவ்வாய்க்கிழமை,   அக்டோபர்   05 , 2021  11:58:04 IST

தமிழகத்தில் பேனர்கள் வைப்பதை முழுமையாக தடுக்க விதிகள் வகுக்கப்பட வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
 

கடந்த ஆகஸ்ட் மாதம் அமைச்சர் பொன்முடியை வரவேற்க பேனர் வைக்கும்போது மின்சாரம் தாக்கி 13 வயது சிறுவன் பலியானார். அந்த சிறுவனின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க கோரியும், பேனர்கள் வைப்பதை தடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரியும் மோகன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.


இந்த வழக்கின் விசாரணையில் தமிழக அரசு இன்று அளித்த பதிலில், பேனர் வைக்க ஒப்பந்தம் பெற்றிருந்த ஒப்பந்ததாரர்தான் சிறுவனை பணியில் அமர்த்தியுள்ளார். அவரை கைது செய்துள்ளோம். மேலும், சிறுவனின் குடும்பத்திற்கு முதற்கட்டமாக ரூ. 1 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது என்றனர்.


இதையடுத்து நீதிபதிகளின் உத்தரவில், தமிழகத்தில் பேனர்கள் வைப்பதை முழுமையாக தடுக்க விதிகள் வகுக்கப்பட வேண்டும். பேனர்கள் தொடர்பாக தமிழக அரசு மற்றும் திமுகவினர் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.


 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...