???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தொழிற்நுட்ப கோளாறு: சந்திரயான்-2 தற்காலிக நிறுத்தம் 0 காங்கிரஸ் தலைவர்களால் அச்சுறுத்தல்: கர்நாடக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் காவல்துறைக்கு கடிதம் 0 புதிய தேசிய கல்விக் கொள்கை குறித்து ஆராய திமுக சார்பில் ஆய்வுக்குழு அமைப்பு 0 ஆசிரியர்களுக்கு பயோ மெட்ரிக் வருகைப் பதிவு முறை: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை 0 புதிய கல்விக் கொள்கை குறித்து விமர்சித்த நடிகர் சூர்யாவுக்கு ஹெச். ராஜா கண்டனம் 0 அத்திவரதரை வழிபடுவதற்கான நேரத்தை அதிகரிக்க வேண்டும்: விஜயகாந்த் 0 உயர்நீதிமன்றத் தீர்ப்புகள் தமிழிலும் வெளியிடவேண்டும்: குடியரசுத் தலைவர் 0 அஞ்சல்துறைத் தேர்வு முடிவுகளை வெளியிடத் தடை! 0 இந்தித் திணிப்பில் தமிழ்நாட்டின் நிலைப்பாடு மாறாது: கமல்ஹாசன் உறுதி 0 ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்யக்கூடாது: உச்சநீதிமன்றம் உத்தரவு 0 ஸ்விக்கி தலைமை பொறுப்பாளராக தமிழகத்தை சேர்ந்த திருநங்கை நியமனம் 0 தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் 0 சென்னை மண்ணடியில் உள்ள வஹாபி இஸ்லாம் அலுவலகத்தில் என்.ஐ.ஏ. சோதனை 0 எதிர்ப்பை மீறி நியூட்ரினோ ஆய்வு மையத்திற்கு மத்திய அரசு அனுமதி: மு.க. ஸ்டாலின் கண்டனம் 0 நடமாடும் டாஸ்மாக் வேண்டும்: எம்.எல்.ஏ. தனியரசு கோரிக்கை!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

மக்களவை தேர்தல்: நாடு முழுவதும் ரூ.3408 கோடி மதிப்பிலான பணம், தங்கம் பறிமுதல்

Posted : புதன்கிழமை,   மே   15 , 2019  00:49:19 IST

லோக்சபா தேர்தல் நடத்தை விதிகள் அமலானது முதல் தற்போது வரை 3,408 கோடி ரூபாய் மதிப்பிலான பணம், தங்கம், மதுபானம் உள்ளிட்டவை பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சுனி அரோரா தெரிவித்துள்ளதார். தமிழகத்தில் மட்டும் 950 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு, பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

லோக்சபா தேர்தலை ஏழு கட்டங்களாக நடத்த முடிவு செய்யப்பட்டு, நடைபெற்று வருகின்றது. மார்ச் 10ல் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட உடன் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. தேர்தல் பறக்கும் படையினரால் இதுவரை நாடு முழுவதும் கணக்கில் வராத 3408 கோடி ரூபாய் மதிப்பிலான பணம், தங்கம், வெள்ளி, மதுபானம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சுனி அரோரா தெரிவித்துள்ளதார்.

ரொக்கமாக இதுவரை 826 கோடியே 10 லட்ச ரூபாய் ரொக்கமும், 282,90,00,000 லட்ச ரூபாய் மதிப்பிலான மதுபானமும், 1,258,11,00,000 லட்ச ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதேபோல, 984 கோடியே 83 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்கமும்,  56 கோடியே 81 லட்ச ரூபாய் மதிப்பிலான இதர பொருட்கள் உட்பட மொத்தம் 3,408,75,00,000 லட்ச ரூபாய் மதிப்பிலான கணக்கில் வராதவற்றை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

தமிழகத்தில் மட்டும் 949 கோடியே 60 லட்ச ரூபாய் மதிப்பிலான ரொக்கம், தங்கம், மதுபானம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. ரொக்கமாக 227 கோடியே 64 லட்ச ரூபாயும், 709,54,00,000 லட்ச ரூபாய் மதிப்பிலான 3073 கிலோ தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களும், 3 கோடியே 66 லட்ச ரூபாய் மதிப்பிலான மதுபானமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...