???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 சுகாதாரத்தில் பின்னுக்குச் சென்ற தமிழகம்! 0 மாணவர் சேர்க்கை இல்லை: மூட விண்ணப்பிக்கும் பொறியியல் கல்லூரிகள் 0 டெல்டா மாவட்டங்களில் மேலும் 104 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் 0 தாய்லாந்தில் சிக்கியுள்ள திருப்பூர் இளைஞரை மீட்க வெளியுறவுத்துறை அமைச்சர் நடவடிக்கை 0 தங்க தமிழ்ச் செல்வன் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்: தினகரன் 0 பா.ரஞ்சித்துக்கு முன் ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவு 0 மேகதாது விவகாரத்தில்கர்நாடக திட்ட அறிக்கையை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும்: முதலமைச்சர் கடிதம் 0 காவிரி நீர் மேலாண்மை ஆணையம் இன்று கூடுகிறது 0 ஊதியம் வழங்க மத்திய அரசின் உதவியை கேட்கிறது பி.எஸ்.என்.எல். 0 இதுதான் புதிய இந்தியாவா?: குலாம் நபி ஆசாத் கேள்வி 0 பொறியியல் சேர்க்கை கலந்தாய்வு இன்று தொடங்குகிறது! 0 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் அறிவிப்பு 0 குடிகாரர்களால் மனைவி உயிரிழப்பு: 6 மணி நேரம் போராடிய மருத்துவர் 0 தேர்தலை சந்திக்காமலேயே விரைவில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும்: ஸ்டாலின் 0 திருமணம் ஆகாத பெண்கள் தந்தையிடம் ஜீவனாம்சம் பெற உரிமை உள்ளது: நீதிமன்றம்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

₹2,000 சிறப்பு நிதி திட்டம் நிறுத்திவைப்பு: தமிழக அரசு தகவல்

Posted : வியாழக்கிழமை,   மார்ச்   21 , 2019  08:14:14 IST

வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களை அடையாளம் காணும் வரை 2000 ரூபாய் நிதியுதவி திட்டத்துக்கு தடை விதிக்க கோரி விழுப்புரத்தை சேர்ந்த கருணாநிதி என்பவர் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார்.
 
அந்த மனுவில், ஏழை மக்களுக்கு 2,000 ரூபாய் நிதியுதவி வழங்குவதை எதிர்க்கவில்லை எனவும், இதற்காக அரசு மேற்கொள்ளும் நடை முறையை மட்டுமே எதிர்ப்பதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.
 
முதலில் வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிப்பவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும் எனக் கூறிய அரசு, தேர்தல் ஆதாயத்திற்காக தற்போது, குடும்ப அட்டைதாரர்கள் அனைவரின் விவரங்களையும் சேகரிக்கும் வகையில் தற்போது படிவங்களை விநியோகித்து வருவதாகவும் மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
 
வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிப்பவர்களை அடையாளம் காண பல்வேறு விதிகளை வகுத்து 2007-ல் தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. அந்த அரசாணையை பின்பற்றி சிறப்பு உதவித்தொகை திட்டத்தை அமல்படுத்த வேண்டும் எனவும் கோரப்பட்டது.
 
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு, பயனாளிகளை கண்டறிய சரியான நடைமுறை பின்பற்றப்பட்டுள்ளதாக கூறி மனுவை தள்ளுபடி செய்தது.
 
மக்களவை தேர்தல் காரணமாக, 2 ஆயிரம் ரூபாய் சிறப்பு நிதியுதவி வழங்குவதும், அதற்கான கணக்கெடுக்கும் பணியும் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை தேர்தலுக்கு பின்னர் தள்ளிவைத்தனர்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...