அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 5ஆக உயர்வு! 0 கண்ணியம் குறையாமல் செயலாற்ற வேண்டும்: திமுகவினருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் 0 இந்தியாவிலேயே ஊழல் மிகுந்த அரசு கர்நாடக அரசுதான்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு 0 ஆன்லைன் ரம்மியை தடை செய்தால் அதில் நடிக்க மாட்டேன்: நடிகர் சரத்குமார் பேச்சு! 0 'பொன்னியின் செல்வன்' 3 நாட்களில் ரூ.200 கோடி வசூல்! 0 அக்டோபர் 20ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு 0 மகாத்மா காந்தியின் 154-வது பிறந்தநாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை 0 அக்டோபர் 11-ல் விசிக நடத்தும் சமூக நல்லிணக்க மனித சங்கிலி: திருமாவளவன் அறிவிப்பு 0 புதிய காங்கிரஸ் தலைவர் 'ரப்பர் ஸ்டாம்பாக' இருக்க மாட்டார்: சசி தரூர் 0 இந்தியாவை நாம் அனைவரும் ஒன்றுபட்டு காக்க வேண்டும்: கேரளா சிபிஎம் மாநாட்டில் முதலமைச்சர் 0 முன்னாள் சிபிஎம் மாநில செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன் காலமானார் 0 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் பங்கேற்க கேரள சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்! 0 பாகிஸ்தான் அரசின் ட்விட்டர் பக்கம் இந்தியாவில் முடக்கம்! 0 தேசிய விருது பெற்ற தமிழ் நடிகர்கள்: மனைவி ஜோதிகா குறித்து சூர்யா நெகிழ்ச்சி! 0 காங்கிரஸ் கட்சி தலைவர் பதவி: மல்லிக்கார்ஜுன கார்கே வேட்புமனு!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

உயிரிழந்த ராணுவ வீரர் லட்சுமணன் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி!

Posted : வியாழக்கிழமை,   ஆகஸ்ட்   11 , 2022  23:09:00 IST

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி பகுதியில் உள்ள ராணுவ முகாமில் தீவிரவாதிகள் தடீர் தாக்குதல் நடத்தினர். பார்கல் பகுதியில் உள்ள ராணுவ முகாமின் தடுப்பு வேலியை தாண்டி செல்ல தீவிரவாதீகள் முயற்சித்துள்ளனர். அதை கண்டுகொண்ட ராணுவ வீரர்கள் அவர்கள் மீது தாக்குதல் நடத்த தொடங்கினர். இரு தரப்பும் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ராணுவ வீரர்கள் மூவர் வீரமரணம் அடைந்தனர். பதில் தாக்குதலில் இரு தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.
 
ராணுவம் தரப்பில் தமிழகத்தைச் சேர்ந்த லட்சுமணன் மற்றும் பேதார் ராஜேந்திர பிரசாத், ரைபில் மேன் மனோஜ் குமார் ஆகியோர் உயிரிழந்தனர். இதில், லட்சுமணன் மதுரை மாவட்டம், புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆவர். அவரது இறப்பு குடும்பத்தினர் மற்றும் ஊர் மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழக அரசு சார்பில் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், காஷ்மீரில் தீவிரவாதிகள்  நடத்திய தாக்குதலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் உட்பட மூன்று இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர் என்ற செய்தியினைக் கேட்டு மிகுந்த துயரமும் வேதனையும் அடைந்தேன்.
 
தாய் நாட்டைக் காக்கும் அரிய பணியில் தன் இன்னுயிரைத் தியாகம் செய்து வீரமரணமெய்திய ராணுவ வீரர்களுக்கு என் அஞ்சலியையும் வீர வணக்கத்தையும் சமர்ப்பிக்கின்றேன். வீரமணமெய்திய தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர் லட்சுமணன் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெர்வித்துக்கொள்வதோடு அவர்களுக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளேன்’ என தெரிவித்துள்ளார்.
 


 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...