அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 தமிழகத்துக்கு அதிக அளவில் தடுப்பூசிகளை வழங்க வேண்டும்: பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் 0 தடுப்பூசி குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை: சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை 0 தமிழகத்தில் வரும் 20-ந்தேதி முதல் இரவு நேர ஊரடங்கு: அரசு அறிவிப்பு 0 அதிகரிக்கும் கொரோனா: முதலமைச்சர் இன்று முக்கிய ஆலோசனை 0 கடந்த ஆண்டைபோல ஒன்றுபட்டு கொரோனாவை ஒழிப்போம்: பிரதமர் மோடி 0 ஒரேநாளில் 2,61,500 பேருக்கு கொரோனா பாதிப்பு: மேலும் 1,501 பேர் உயிரிழப்பு! 0 ரெம்டெசிவிர் மருந்தின் விலை 2800 ரூபாயிலிருந்து 899 ரூபாயாக குறைப்பு 0 வேளச்சேரி வாக்குச்சாவடியில் நடைபெற்ற மறுவாக்குப்பதிவில் 186 வாக்குகள் மட்டுமே பதிவு 0 தடுப்பூசிக்கான வயது வரம்பை 25ஆக குறைக்க வேண்டும் - பிரதமருக்கு சோனியா கடிதம் 0 கால்நடைத் தீவன ஊழல்: 4வது வழக்கிலும் லாலு பிரசாத் யாதவுக்கு ஜாமீன்! 0 கிரிஜா வைத்தியநாதன் நியமனத்துக்கு விதித்த தடை நீக்கம்: உயர்நீதிமன்றம் 0 நண்பன் விவேக் மறைவால், துக்கம் தொண்டையை அடைக்கிறது: நடிகர் வடிவேலு கண்ணீர் 0 மாஸ்க் அணியவில்லை என்றால் ரூ.500 அபராதம்! 0 தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 9344 பேருக்கு கொரோனா! 0 நடிகர் விவேக் உடல் தகனம்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

23 கேரட் தங்கத்துடன் பரிமாறப்படும் உலகின் மிக ஆடம்பர பிரியாணி!

Posted : வியாழக்கிழமை,   பிப்ரவரி   25 , 2021  11:45:07 IST


Andhimazhai Image



பிரியாணி ப்ரியர்களுக்காக பல வித்தியாசமான பிரியாணி வகைகள் பரிமாறப்படுகின்றன. ஆனால், 23 கேரட் தங்கத்தோடு தயார் செய்து பரிமாறப்படும் பிரியாணி பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஆம், துபாயில் உள்ள ஒரு உணவகத்தில் இப்படி ஒரு பிரியாணி கிடைக்கிறது.

துபாயில் உள்ள பாம்பே பாரோ என்ற உணவகத்தில் ‘தி ராயல் கோல்ட் பிரியாணி’ என்ற விலை உயர்ந்த பிரியாணி கிடைக்கிறது. இதன் சிறப்பம்சம், பிரியாணியில் மேல்புறத்தில் உட்கொள்ளக்கூடிய தங்கம் வைத்து அலங்கரிக்கப்பட்டிருக்கிறது.

பிரியாணி பிரியர்கள் அந்த இழையோடு சேர்த்து, உலகின் மிக ஆடம்பர பிரியாணியை ருசித்து சாப்பிடலாம். இதன் விலை 1000 திராம்கள் (19,688 ரூ). பிரியாணியையும் அகலமான தங்கத்தட்டில் தான் பரிமாறுகிறார்கள்.

துபாய் சர்வதேச நிதி நிலையத்தில் அமைந்திருக்கும் பாம்பே பாரோ உணவகத்தில் சமீபத்தில் தான் இந்த கோல்டன் பிரியாணி அறிமுகப்படுத்தப்பட்டது. தங்கத்தோடு பரிமாறப்படுவதோடு மட்டுமின்றி இதன் சுவையும் அபாரமாக இருக்கும் வகையில் தயார் செய்யப்படுகிறது.

சுவையான முகல் வகை பிரியாணி, மசாலா மணம்மிக்க சாதம், மிருதுவான ஆட்டுக்கறி, சிக்கன் கபாப், செம்மறி ஆட்டுக்கறி சாப்ஸ், கோப்தா, மலாய் சிக்கன் ஆகியவற்றை சாப்பிடக்கூடிய தங்க இழையால் அலங்கரித்து, குங்குமப்பூவைத் தூவி கமகமக்க தருகிறார்கள். இந்த தங்க பிரியாணிக்கு துபாயில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது.  

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...