???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 அஸாம் மாநிலத்தின் விளையாட்டுத் தூதுவராக தடகள வீராங்கனை ஹிமா தாஸ் நியமனம் 0 பாராளுமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம்: சபாநாயகர் அனுமதி 0 சேலத்தில் சீமான் திடீர் கைது! 0 ஆர்.கே.நகர் தொகுதியில் டி.டி.வி.தினகரனுக்கு எதிர்ப்பு 0 இமாசலப்பிரதேசத்தில் இந்திய போர் விமானம் விழுந்து நொறுங்கியது 0 ​சின்னத்திரை நடிகை பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை 0 சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவர்கள் மீது வழக்கறிஞர்கள் தாக்குதல்! 0 102 அடியை கடந்தது மேட்டூர் அணை நீர்மட்டம்! 0 சேலம் 8 வழிச்சாலை திட்டத்திற்கு ஆதரவு: ரஜினிகாந்துக்கு அ.தி.மு.க. நாளேடு பாராட்டு 0 ஐடி ரெய்டு குறித்து முதல்வர் மெளனமாக இருப்பது ஏன்?: ஸ்டாலின் கேள்வி 0 நீட் தேர்வு எழுதாமல் மருத்துவ படிப்பில் சேர்ந்த மாணவர்களின் சேர்க்கை ரத்து: உயர்நீதிமன்றம் 0 "போலியான காரணங்களை சொல்லி பணம் சேர்த்தேன்": ஒப்பந்ததாரர் வாக்குமூலம் 0 ஒப்பந்ததாரர் வீட்டில் கத்தை, கத்தையாக பணம்! 0 ஓபிஎஸ் மீதான சொத்துக்குவிப்பு புகாரை ஏன் சிபிஐ விசாரிக்கக் கூடாது?: உயர்நீதிமன்றம் 0 தமிழகம் முழுவதும் நீட் தேர்வுக்கான பயிற்சி அடுத்த மாதம் தொடங்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

இரட்டை சதம்: ரோகித் சர்மாவின் திருமணப்பரிசு!

Posted : வியாழக்கிழமை,   டிசம்பர்   14 , 2017  02:12:28 IST


Andhimazhai Image

இலங்கைக்கு எதிராக ரோஹித் சர்மா தன் மூன்றாவது இரட்டை சதத்தை அடித்தபோது பார்வையாளர் வரிசையில் அமர்ந்திருந்த ஒரு பெண்ணை அடிக்கடி குளோசப்பில் காண்பித்துக் கொண்டிருந்தார்கள். அது அவரது மனைவி ரித்திகா. ரோஹித்தின் ஒவ்வொரு ரன்னுக்கும் ரித்திகாவின் ரியாக்‌ஷன்கள் மிக பரபரப்பாக இருந்தன. அது ரோகித்- ரித்திகாவின் இரண்டாவது திருமண நாளும் கூட.

சர்மா தன் திருமண நாளன்று விளாசிய இரட்டைச் சதத்தை மனைவிக்கு அர்ப்பணித்தார்.

பொதுவாக திருமண நாளன்று கணவன் மனைவிக்கோ அல்லது மனைவி கணவனுக்கோ பரிசு கொடுத்துக்கொள்வது வழக்கம். பரிசுப்பொருட்கள் பெரும்பாலும் கேக், நகைகள், பட்டுப்புடவை, வெளிநாடு பயணம், புது வீடு என அவரவர் சக்திக்கேற்ப இருக்கும். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா தனது இரண்டாவது திருமண நாள் பரிசாக சாதனையை பரிசாகத் தந்திருக்கிறார். 

முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கையிடம் மோசமாக தோற்றபின், இரண்டாவது போட்டியில் இந்தியா இலங்கையை கிட்டத்தட்ட சூரசம்ஹாரம் செய்திருக்கிறது எனலாம். மொத்தம் 393 ரன்கள். அதில் ரோகித் சர்மா குவித்தது 205 ரன்கள் ஆட்டமிழக்காமல். அதில் 12 சிக்ஸர்கள், 13 பௌண்டரிகள். மனைவி திருமண நாளன்று கேலரியில் நகம் கடித்தபடி டென்ஷனாக அமர்ந்திருக்க மைதானத்தில் இலங்கை வீரர்களின் பந்துவீச்சை பதம் பார்த்துக்கொண்டிருந்தார் ரோஹித். ரோஹித் இரட்டை சதம் விளாசியவுடன், அவர் மனைவி ரித்திகா சஜ்தே    அழுதே விட்டார். இரட்டை சதம் அடித்த ரோகித்,ரித்திகாவை நோக்கி ஒரு முத்தத்தை பறக்கவிட்டார்.

போட்டி முடிந்த பின்னர் ரோஹித் சர்மா கூறுகையில் ‘‘இந்த இரட்டை சதத்தை என்னுடைய திருமண நாளில் அடித்தது சந்தோசம். இதை எனது மனைவிக்கு அர்ப்பணிக்கிறேன். என்னுடைய சிறந்த திருமண பரிசாக இதை அவர் நினைப்பார். அவர் எனக்காக எப்போதும் இருப்பவர். அவர்தான் எனது பலம். மிகுந்த அழுத்தங்கள் உருவாக்கும் இந்த விளையாட்டை விளையாட ரித்திகாவின் பங்களிப்பில்லாமல் எனக்கு சாத்தியமில்லை’’  என்றார் ரோஹித்.

அத்துடன்  ‘‘இன்று எங்கள் இரண்டாவது திருமணநாள். ஆனாலும் அதைவிட முக்கியமானது இந்தியா இந்தப்போட்டியில் வென்றது’’ என்றார் ரோஹித் சர்மா. click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...