![]() |
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரோகித் புதிய கேப்டன்?Posted : திங்கட்கிழமை, செப்டம்பர் 13 , 2021 12:32:33 IST
![]() கூடிய சீக்கிரம் விராத் கோலி இந்திய ஒருநாள், டி20 கிரிக்கெட் அணிகளின் தலைவர் பதவியில் இருந்து விலகிவிடுவார் எனவும் அந்த இடத்துக்கு ரோகித் சர்மா வருவார் எனவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
கோலி தன் ஆட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்த உள்ளதாகவும் அதே சமயம் டெஸ்ட் அணியின் தலைவராக மட்டும் தொடர்வார் எனவும் கூறப்படுகிறது.
சமீபத்திய இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்திய அணி முன்னிலை வகித்தாலும் கூட கோலியின் மட்டையாட்டம் சிறப்பாக இல்லை. அவர் டெஸ்டில் சதமடித்து வெகுகாலம் ஆகிவிட்டது என்பதை அனைவரும் விமர்சிக்கின்றனர்.
விராட் கோலி 65 டெஸ்ட்களில் தலைவராக வழி நடத்தில் 38 ஆட்டங்களை வென்றுள்ளார். அதேபோல் 95 ஒரு நாள் போட்டிகளில் 65ஐயும் 45 டி20 ஆட்டங்களில் 29ஐயும் வென்றுள்ளார்.
ரோகித் சர்மாவும் கோலி இல்லாத சமயங்களில் 10 ஒரு நாள் போட்டிகளில் தலைமையேற்று 8ஐயும் 19 டி20 ஆட்டங்களில் 15 ஐயும் வென்றுள்ளார்.
ரோகித் மற்றும் கோலி இடையே சமீப காலமாக சிறந்த நட்புறவு இருப்பதாகவும் இப்படி பதவி விலகி ரோகித்தை அணித் தலைவர் ஆக்குவது கோலியின் யோசனை என்று சொல்லப்படுகிறது.
பல நாடுகளில் ஒருநாள், டி20 அணிகளுக்கு தனி தலைவரும் டெஸ்ட் அணிகளுக்குத் தனி தலைவரும் இருப்பது இப்போது வழக்கமாகி விட்டது. இந்நிலையில் இந்த அணித்தலைமை மாற்றம் கோலிக்கு தன் ஆட்டத்திறனில் முழுக்கவனம் செலுத்த உதவும் என்று நம்பப்படுகிறது.
|
|