???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஜெயலலிதாவுக்கு அதிக ‘ஸ்டீராய்டு மருந்து’ கொடுக்கப்பட்டதால்தான் உடல்நலம் பாதித்தது: அக்குபஞ்சர் டாக்டர் பேட்டி 0 சாதிய கொலைகளுக்கு எதிராக தனிச்சட்டமே தீர்வு : கௌசல்யா 0 ஓகி புயலால் உயிரிழந்த மீனவர்களுக்கான நிவாரணம் ரூ.20 லட்சமாக உயர்வு : முதல்வர் அறிவிப்பு 0 சவுதி அரேபியாவில் சினிமா திரையிட அனுமதி 0 பேரறிவாளனை விடுவிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு 0 ஜல்லிக்கட்டிற்கு இடைக்கால தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம் 0 சங்கர் ஆணவ கொலை வழக்கில் மூவர் விடுதலையை எதிர்த்து மேல் முறையீடு:அரசு வழக்கறிஞர் 0 உடுமலை சங்கர் ஆணவ கொலை வழக்கு : கௌசல்யா தந்தை உட்பட ஆறு பேருக்கு தூக்கு! 0 விராட் கோலி - அனுஷ்கா: ஒரு காதல் திருமணத்தின் கதை! 0 புலன் மயக்கம் - 66 - அடுத்த வீட்டுக் கவிஞன் - ஆத்மார்த்தி எழுதும் தொடர்! 0 குமரிக்கு செல்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 0 குஜராத் தேர்தலில் பாக். தலையீடு: பிரதமர் மோடிக்கு பிரகாஷ்ராஜ் காட்டமான கேள்வி 0 ரஜினியின் 68 வது பிறந்த நாள்; அரசியல் அறிவிப்புக்கு ரசிகர்கள் எதிர்பார்ப்பு! 0 விராட் கோலி - அனுஷ்கா சர்மா இத்தாலியில் திருமணம்! 0 பொன்வண்ணன் ராஜினாமா கடிதத்தை ஏற்கமாட்டோம்: நடிகர் சங்கத்தலைவர் நாசர்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

'தம்பி இது ரத்தபூமி…' ஆர்.கே. நகர் அட்டகாசங்கள்!

Posted : புதன்கிழமை,   டிசம்பர்   06 , 2017  02:32:58 IST


Andhimazhai Image
நிமிடத்துக்கு நிமிடம் திருப்பங்கள் உள்ள சினிமா போலாகிவிட்டது, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் விஷால் வேட்பு மனு விவகாரம். தேர்தலில் போட்டி என்றதும் வழக்கம் போல எல்லோருடைய புருவங்களும் உயர்ந்தன. சேரன் நேரடியாகவே சாடினார். தயாரிப்பாளர் சங்கத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தை தொடங்கினார். சரத்குமார், ராதிகா, ராதா ரவி போன்ற விஷாலின் 'முன்னாள் நண்பர்கள்’ வழக்கம் போலவே காட்டமாக அறிக்கைவிட்டார்கள். ஆனால் கடைசியில் விஷாலின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுவிட்டது.
 
 
விஷாலின் வேட்பு மனு நிறுத்தி வைக்கப்பட்டது என்ற அறிவிப்பு வந்தவுடன் மீடியா பரபரக்கத்தொடங்கிவிட்டது. தேர்தல் விதிகளின்படி ஒரு தொகுதியில் வேட்பாளராக போட்டியிடும் நபரை அந்த தொகுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள பத்து பேர் முன்மொழிய வேண்டும். ஆனால், விஷால் தாக்கல் செய்த வேட்பு மனுவை முன்மொழிந்ததாக கூறப்படும் பத்து பெயர்களில் விஷாலை முன்மொழியாத இரு பெயர்கள் இணைக்கப்பட்டுள்ளதால் அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார். வேட்பு மனு நிராகரிப்பு என்றதும் தண்டையார்பேடை விரைந்தார் விஷால். ஆதரவாளர்கள் புடை சூழ தண்டையார்பேட்டை ரோட்டில் தர்ணாவுக்கு உட்கார்ந்து விட்டார்.  போலீஸார் சமாதானப்படுத்தி உள்ளே அழைத்துப் போனார்கள். விஷால் தன்னுடைய மனுவை முன்மொழிந்தவர்கள் மிரட்டப்பட்டார்கள் என்றார். அதற்கான ஆடியோ ஆதாரங்கள் தேர்தல் அலுவலரிடம் சமர்ப்பிக்கப்பட, வேட்புமனுவில் சில திருத்தங்கள் செய்து ஏற்றுக்கொள்ளப்பட்டதாக நேற்று மாலை தேர்தல் அதிகாரி அறிவித்தார்.
 
 
இதற்குப் பின்னர் நடந்ததுதான் உச்சகட்ட டிவிஸ்ட். விஷால் தாக்கல் செய்த வேட்பு மனுவை முன்மொழிந்ததாக கூறப்படும் பத்து பெயர்களில் சுமதி, தீபன் ஆகிய இரண்டு பேர் அவரை முன்மொழியவில்லை எனவும், வேட்புமனுவில் இருப்பது தங்கள் கையெழுத்து இல்லை எனவும் தேர்தல் அதிகாரி முன் ஆஜராகி விளக்கம் அளித்தனர். இதையடுத்து வேட்பு மனுவுக்கு தேவையான முன்மொழிபவர்களின் எண்ணிக்கை இல்லாத காரணத்தால் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி வேலுச்சாமி அதிகாரப்பூர்வ அறிவிப்பை இரவு வெளியிட்டார். டெல்லியில் உள்ள  தேர்தல் ஆணைய உயர் அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனைக்கு பின்னரே விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். விஷால் அளித்த ஆடியோ ஆதாரத்தின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த  முடியவில்லை எனவும் தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார். மனு நிராகரிப்பு தொடர்பாக புகார் அளிக்கப்படும் என்று நடிகர் விஷால் கூறி இருந்தாலும், அது இடைத்தேர்தலை பாதிக்க வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது. வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது தொடர்பாக தேர்தல் ஆணைய மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில்; ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் அதிகாரி வெளியிட்ட உத்தரவு என்பது சட்டப்பூர்வமான உத்தரவாகும். அதை மாற்ற முடியாது. தேர்தல் அதிகாரியின் முடிவை எதிர்த்து ஒரு வேட்பாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம். ஆனால் அவர், தேர்தல் ஆணையத்தை அணுக முடியாது. மாவட்ட தேர்தல் அதிகாரியிடமும் மேல் முறையீடு செய்ய முடியாது. அவ்வளவுதான். நீதிமன்றமும்கூட தேர்தல் அறிவிக்கை வெளியான பின்னர் அந்த தேர்தலை நிறுத்த முடியாது.
 
 
நிலவரம் இவ்வாறிருக்க ஒரு சுயேட்சை வேட்பாளரை ஆதரித்து தேர்தலில் வெற்றி பெற வைப்பேன் என்கிறார் விஷால். மக்களுக்கு நல்லது செய்ய வந்தால் இது தான் கதியா? ஜனநாயக நாட்டில் சுயேச்சை வேட்பாளர் போட்டியிடக் கூடாதா? என்றெல்லாம் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். சரிதான். ஆனாலும் நினைத்தவுடன் போட்டியிட்டுவிட இதென்ன சினிமா சங்கத் தேர்தலா என்ன? என்று கேட்பவர்களும் இருக்கிறார்கள். வடிவேலு 'வின்னர்' படத்தில் சொல்வதுபோல் ''தம்பி இது ரத்தபூமி…'' என்று விஷாலுக்கு அரசியல்வாதிகள் புரியவைத்து இருக்கிறார்கள்.


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...