![]() |
வாழ்வில் மிகப்பெரிய தருணம்: ரிஷப் பண்ட் நெகிழ்ச்சிPosted : புதன்கிழமை, ஜனவரி 20 , 2021 11:35:53 IST
பிரிஸ்பேனில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான வரலாற்று வெற்றி தன் வாழ்வில் மிகப்பெரிய தருணம் என ரிஷப் பண்ட் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
பிரிஸ்பேன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பதிவு செய்தது. இந்தப் போட்டியில் 2-வது இன்னிங்சில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஷப் பண்ட் ஆட்ட நாயகன் விருதை பெற்றார். விருதை பெற்ற பிறகு அதுகுறித்து பேசிய ரிஷப் பண்ட், தன் வாழ்க்கையில் மிகப்பெரிய தருணமாக இந்த வெற்றி இருக்கும் எனவும், இந்த டெஸ்ட் தொடர் தனக்குக் கனவுத் தொடராக இருந்தது எனவும் குறிப்பிட்டார்.
தான் டெஸ்ட் போட்டிக்குள் இடம் பெற்றதும், அணியில் முக்கியமானவர் எனக்கூறி, மேட்ச் வின்னராக இருக்க வேண்டும் என இந்திய அணி நிர்வாகம் ஊக்கப்படுத்தியதாகவும் அவர் கூறினார். இந்திய அணியை வெல்ல வைக்க வேண்டும் என ஒவ்வொரு நாளும் சிந்தித்து வந்ததாகவும் அது இன்று நிகழ்ந்துவிட்டதாகவும் நெகிழ்ச்சியுடன் ரிசஷ்ப் பண்ட் தெரிவித்தார்.
|
|