???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 வேளாண் சட்டத்திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு: நாட்டின் பல்வேறு பகுதிகளில் விவசாய அமைப்புகள் போராட்டம் 0 தன்னை விவசாயி எனக்கூறிக்கொள்ளும் முதலமைச்சரை வரலாறு மன்னிக்காது: மு.க.ஸ்டாலின் காட்டம் 0 மே -ஆகஸ்ட் வரையில் மாத ஊதியம் பெறும் 66 லட்சம் பேர் வேலையிழப்பு 0 மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே வேளாண் மசோதாக்கள் நிறைவேறின 0 விவசாய சட்டங்களால் தமிழக விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாது: எடப்பாடி பழனிசாமி அறிக்கை 0 மருத்துவ பரிசோதனை முடித்து துணைமுதல்வர் வீடு திரும்பினார் 0 அச்சு ஊடகங்கள், வானொலிகளுக்கு வரிக்குறைப்பா? வைகோவின் கேள்விக்கு அமைச்சர் விளக்கம் 0 வேளாண் மசோதாக்களை நிறைவேற்ற மாநிலங்களவை இன்று கூடுகிறது! 0 தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் 0 வரும் 21ம் தேதி திமுக தோழமை கட்சிகள் கூட்டம் 0 வங்கி திவால் சட்டத் திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது 0 பள்ளிகள் திறப்புக்கு பின் சுழற்சி முறையிலான வகுப்புகள் கிடையாது: அமைச்சர் செங்கோட்டையன் 0 மொபைல்போன் வாங்க சாக்கடை அகற்றிய மாணவன்: லேப்டாப் வழங்கியது திமுக 0 பிரதமர் மோடியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பலூன்கள் தீப்பிடித்து விபத்து 0 கூகுள் ப்ளேஸ்டோரில் மீண்டும் Paytm ஆப்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ரொம்ப பணக்காரராக இருப்பது எப்படி?

Posted : திங்கட்கிழமை,   பிப்ரவரி   10 , 2020  06:23:50 IST


Andhimazhai Image
உலகெங்கும் "டாப் 1%" என்கிற சொல் மேல்தட்டில் செல்வாக்கு மிகுந்த பணக்காரர்களை குறிக்க பயன்படுத்தப்படுகிறது. வால் ஸ்ட்ரீட் போராட்டத்துக்கு பிறகு இந்த சொல் புழக்கத்தில் இருக்கிறது. இந்த டாப் 1% பணக்காரர்களாக அடையாளப்படுத்தும் அதேவேளையில், பொருளாதார சமத்துவமின்மை வெகுவாக அதிகரித்திருக்கிறது. டாப் 1% வளையத்தில் இருப்பவர்கள்தான் இன்னும் பணக்காரர்களாகவும், செல்வாக்கு மிக்கவர்களாகவும் வளர்ந்து வருகிறார்கள்.
 
டாப் 1% வளையத்தில் இருப்பவர்கள் உலகின் பல்வேறு நாடுகளைவிடவும் பொருளாதாரத்தில் வலிமையுடைவர்கள். இந்த மதிப்பீடு அவர்கள் எங்கு வசிக்கிறார்கள் என்பதில் மாறுபடுகிறது.
 
ஐக்கிய அரபு அமீரகத்தில் டாப் 1% குழுவில் இணைய $900,000 மதிப்பிலான பொருளாதாரம் வைத்திருக்க வேண்டும். இதர வளர்ந்த நாடுகளில் $200,000 - $300,000 மதிப்பிலான சொத்து வைத்திருந்தால் டாப் 1% குழுவில் சேர்ந்துவிடலாம்.
 
அமெரிக்காவில் நடுத்தர வர்க்கத்தினர், உழைக்கும் வர்க்கத்தினரிடமிருந்து பணக்காரர்கள் விலகிச் செல்கிறார்கள். கடந்த சில பத்தாண்டுகளில் அவர்களது பொருளாதாரம் வளர்ச்சி பாதையில் சென்றுக்கொண்டிருக்கிறது.
 
சில நாடுகள் உலகளாவிய டாப் 1% குழுவை ஈர்க்க பிரத்யேக முயற்சிகளை மேற்கொள்கின்றன. உதாரணத்துக்கு சிங்கப்பூர், மொனாக்கோ போன்ற நாடுகள் வரிச்சலுகைகளால் டாப் 1% குழுவினரை வசீகரிக்கின்றன. எண்ணெய் மற்றும் எரிவாயு வளம் கொண்ட நாடுகளும் இந்த முறையை பின்பற்றுகின்றன.
 
பல்வேறு நாடுகளில் அரசியல்வாதிகள், அதிக வரி விதித்து பணக்காரர்கள் – இதர தரப்பினர்களுக்கு இடையில் இருக்கும் இடைவெளியை நிரப்ப முயற்சிக்கிறார்கள். பணக்காரரகளுக்கு மட்டும் பிரத்யேக அதிக வரி விதிக்கும் முற்போக்கான முறையை பின்பற்றும் நாடுகளும் உள்ளன.
 
1% நிலையில் இருக்கும் பணக்காரர்களின் பொருளாதாரம் பெரும்பாலும் சராசரியான ஆடம்பர செலவினங்களில் தான் விரயமாகிறது. குறிப்பாக சீனாவில். மெக் கின்சி&கோ எனும் நிறுவனம் நடத்திய ஆய்வில் அவர்கள் கடந்த 2012 வரை ஆடம்பர பொருட்கள், நகைகள், கை கடிகாரங்கள் போன்றவற்றுக்காக மட்டும் தமது 47% பொருளாதாரத்தை செலவு செய்திருக்கிறார்கள். இதேபோல் மற்ற பணக்காரர்களும் ஆடம்பர ஹாண்ட் பேக்குகள், பிற ஆடம்பர சாதனங்கள், சொகுசு வீடு, குழந்தைகளுக்கான செலவீனங்களில் தங்களது பொருளாதாரத்தை பயன்படுத்துகிறார்கள்.
 
பொருளாதார உலகில் இருக்கும் போட்டியை எதிர்கொள்ளும் வகையில் உயர்தர கல்வி, சரளமான மொழி, பண்பாட்டு ரீதியான விழிப்புணர்வு அகியவற்றை பெறும்படியான நிலையில் குழந்தைகளை வளர்த்தெடுக்கிறார்கள்.
 
முக்கிய உலக நாடுகளில் நிலங்களின் விலை கடுமையாக உயர்ந்திருக்கிறது, அதேசமயம் பொருளாதார வளர்ச்சி குறைந்திருக்கிறது. செலவீனங்களை உயர்த்தியதால் ஏற்பட்ட விளைவுதான் இது என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள். இதுவே இப்போது டாப் 1% பணக்காரர்கள் உலக பொருளாதாரத்தில் ஏற்படுத்தியிருக்கிற நிலை. 


click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...