???????? - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 ஏப்ரல் 5, இரவு 9 மணிக்கு விளக்கேற்றுங்கள்! மோடி வேண்டுகோள்! 0 இந்தியாவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் 2-வது இடம்! 0 அமெரிக்காவில் அதிவேகமாக பரவும் கொரோனா! 0 ஏப்ரல் 5-ம் தேதி இரவு 9 மணிக்கு மாடியில் விளக்கு ஏற்றுங்கள்: பிரதமர் 0 100 நாள் பணியாளர்களுக்கு 21 நாள் ஊதியத்தை வழங்குக: சோனியா காந்தி 0 நாக்பூரிலிருந்து நடந்து வந்த தமிழக தொழிலாளி உயிரிழப்பு! 0 கொரோனா பயத்தால் சாத்தூரில் ஒருவர் உயிரிழப்பு 0 12-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி மீண்டும் ஒத்திவைப்பு 0 கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரிப்பு: உலக சுகாதார அமைப்பு 0 கொரோனா வைரசுக்கு பலி எண்ணிக்கை 47 ஆயிரத்தை தாண்டியது 0 சிபிஎஸ்இ பள்ளிகளில் 1 முதல் 8 வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி 0 மானியம் இல்லா சிலிண்டரின் விலை குறைப்பு 0 விப்ரோ குழுமம் ரூ.1,125 கோடி நிதியுதவி 0 வீடுதேடி வரும் ரேஷன் கடையில் ₹ 1000 உதவித்தொகை டோக்கன் 0 மத வழிபாட்டு தலங்களில் கூடிக் குழப்பத்தை ஏற்படுத்த இது நேரமல்ல: ஏ.ஆர்.ரஹ்மான்
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி
Andhimazhai Magazine Subscription
 

ரூ. 2 ஆயிரம் நோட்டுக்கு தடையா?: ரிசர்வ் வங்கி அதிகாரிகள் விளக்கம்

Posted : வெள்ளிக்கிழமை,   பிப்ரவரி   21 , 2020  21:23:17 IST

இந்தியன் வங்கி ஏ.டி.எம்.களில் மார்ச் 1-ந்தேதி முதல் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வைப்பதில்லை என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்கு மாறாக 500, 200 மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் மட்டும் நிரப்பப்படும். 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் உள்ள ‘டிரே’ நிரப்பப்படாது என்று தகவல்கள் பரவி வருகிறது.

ஏ.டி.எம்.மில் ரூ.8 ஆயிரம், ரூ.10 ஆயிரம் என எடுத்தால் அனைத்தும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளாகவே வருகிறது. இதனை சில்லரையாக மாற்ற மக்கள் வங்கிக்கு வருகிறார்கள். இதனால் ஏ.டி.எம். கொண்டுவந்ததன் நோக்கமே சிதைகிறது. இதனால்தான் ஏ.டி.எம்.மில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வைப்பதில்லை என முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை அதிகாரிகள் உறுதி செய்யாததால் பொதுமக்கள் குழப்பத்தில் உள்ளனர்.

இதுகுறித்து ரிசர்வ் வங்கி அதிகாரிகள் கூறியதாவது:-

2 ஆயிரம் ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவிப்பு வெளியாகலாம் என்று சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் பரவி வருகிறது. ஆனால் அதுபோன்ற எண்ணம் மத்திய அரசிடம் தற்போது வரை இல்லை. இதுதொடர்பான அதிகாரபூர்வமான தகவல்களும் ரிசர்வ் வங்கிக்கு தெரிவிக்கப்படவில்லை. ஏ.டி.எம். மையங்களிலும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வழக்கம்போல் நிரப்பப்பட்டு வருகிறது.

பொதுமக்களும் இதனை எடுத்து பயன்படுத்தி வருகின்றனர். பொதுமக்களிடம் இருந்து இதுபோன்ற எந்த புகாரும் வரவில்லை. எனவே சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தவறான செய்தியை பொதுமக்கள் நம்ப வேண்டாம். வழக்கம்போல் 2 ஆயிரம் ரூபாய் நோட்டை வாங்கி பயன்படுத்தலாம். இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

 



click here
 

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...