அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 கருணாநிதி சிலையை திறக்க மிகவும் பொருத்தமானவர் வெங்கய்ய நாயுடு – முதல்வர் மு.க.ஸ்டாலின் 0 தமிழகத்தை தலை நிமிரச்செய்தவர் கருணாநிதி – அமைச்சர் துரைமுருகன் புகழாரம்! 0 செய்தியாளரை அவமதிப்பது அழகல்ல! - மக்கள் நீதி மய்யம்! 0 தமிழகத்தில் அடுத்த 5 நாள்களுக்கு மிதமான மழை! 0 தமிழ்நாடு முழுவதும் திராவிட பாசறைக் கூட்டங்கள் – திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்! 0 வாய்தா: திரைப்பட விமர்சனம்! 0 பாமக தலைவராக அன்புமணி தேர்வு! 0 "வழக்குகளை எஸ்.ஜே.சூர்யா எதிர்கொள்ள வேண்டும்" – எச்சரித்த நீதிமன்றம்! 0 தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவு! 0 அண்ணாமலையின் பேச்சுக்கு பத்திரிகையாளர் அமைப்புகள் கண்டனம் 0 சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கருணாநிதி சிலை இன்று திறப்பு 0 தலைகுனிவை ஏற்படுத்தும் செயல்களை காவல்துறையினர் செய்துவிடக்கூடாது: முதலமைச்சர் 0 நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானை விடுவித்தது போதை பொருள் தடுப்பு பிரிவு! 0 குழந்தைகள் தொடர்பான வழக்கு: உயர்நீதிமன்றம் முக்கிய அறிவுறுத்தல்! 0 360 டிகிரி எப்படி இருக்கும் தெரியுமா? அண்ணாமலைக்கு பாடம் எடுத்த பிடிஆர்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

வேளாண் சட்டம் வாபஸ்: யார் என்ன சொன்னார்கள்?

Posted : வெள்ளிக்கிழமை,   நவம்பர்   19 , 2021  13:58:35 IST


Andhimazhai Image

 

மு.க.ஸ்டாலின், முதல் அமைச்சர், தமிழ்நாடு

மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறப் போவதாக மாண்புமிகு பிரதமர் அவர்கள் அறிவித்துள்ளதை வரவேற்கிறேன். இது முழுக்க முழுக்க உழவர்களின் அறப்போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும்! மக்களாட்சியில் மக்களின் எண்ணங்கள்தான் மதிக்கப்பட வேண்டும்; இதுவே வரலாறு சொல்லும் பாடம்!

உழவர் பக்கம் நின்று போராடியதும் - வேளாண் விரோதச் சட்டங்களுக்கு எதிராக கழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதும் நாம் பெருமைகொள்ளத்தக்கதாகும்! அறவழிப் போராட்டத்தின் வழியே உரிமைகளை வென்றெடுத்து இந்தியா காந்தியின் மண் என்று உழவர்கள் உலகிற்கு எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்!

 

ராகுல் காந்தி, காங்கிரஸ்

நாட்டின்  ‘அன்னதாதா’க்களாகிய விவசாயிகள் சத்யாகிரக போராட்டம் மூலம் சர்வாதிகாரத்தை தலைவணங்க வைத்துள்ளனர். விவசாயிகளுக்கு வாழ்த்துகள்

 

அமித் ஷா, உள்துறை அமைச்சர்

மக்களின் நலன் தவிர வேறு எதையும் பிரதமர் யோசிப்பதில்லை என்பதை தான் 3 வேளாண் சட்டங்கள் திரும்ப பெற்றது காட்டுகிறது. அதுவும் குருநானக் ஜெயந்தி தினத்தில் இதை அறிவிக்க தேர்ந்தெடுத்ததில் இருந்தே பிரதமர் எவ்வளவு வித்தியாசமானவர் என்பதை புரிந்துகொள்ள முடியும்!

 

ஓ.பன்னீர்செல்வம், ஒருங்கிணைப்பாளர், அதிமுக

இதன்மூலம் பிரதமருக்கு உள்ள பெருந்தன்மையும், விவசாயிகளின்பால் அவருக்கு உள்ள அக்கறையும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. விவசாயிகளின் நண்பன் என்பது வெளிச்சம் போட்டுக் காட்டப்பட்டுள்ளது. பிரதமரின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.

 

 

ராகேஷ் திகாயத், பாரதிய கிசான் யூனியன்

நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடரில், புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் வரை நாங்கள் காத்திருப்போம். அதுவரை எங்களின் போராட்டம் தொடரும்.

 

தொல்.திருமாவளவன், தலைவர், விசிக


போராட்டங்களின் போது உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

அவர்கள் குடும்பத்தினர் தலா ஒருவருக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்

 

 

ப.சிதம்பரம், முன்னாள் நிதியமைச்சர், காங்கிரஸ்

 

வேளாண் சட்டங்களை அரசு விலக்கிக் கொள்ளும் என்ற அறிவிப்பு எதைக் குறிக்கிறது? விவசாயிகளின் தொடர் போராட்டத்திற்குச் செவி மடுக்காத அரசு எதிர்வரும் மாநிலத் தேர்தல்களில் தோல்வி ஏற்படும் என்று அஞ்சி இந்த முடிவை எடுத்திருக்கிறது.

இந்த முடிவின் பொருள் பா ஜ க அரசு தன்னுடைய தவறை உணர்ந்து கொண்டது என்பதல்ல, பிரதமருக்கு உண்மையான மனமாற்றம் ஏற்பட்டது என்பதல்ல. தேர்தல் தோல்வியை எப்படித் தவிர்ப்பது என்பது ஒன்றே அவர்கள் குறிக்கோள்.

இடைத் தேர்தல்களில் தோல்வியைச் சந்தித்த பிறகு பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்தார்களே, அது போலத்தான் இந்த முடிவு மக்கள் குரலை விட தேர்தல் தோல்வி அச்சமே பா ஜ க அரசின் போக்கை மாற்றும் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

 

ஜிகே வாசன், த.மா.கா

பாரதப்பிரதமர் அவர்கள் 3 வேளாண்_சட்டங்களும் திரும்பப் பெறப்படும் என்று அறிவித்திருப்பது விவசாயிகளுக்கு நல்ல செய்தி. மத்தியஅரசு விவசாயிகளுக்கு என்றும் துணை நிற்கும், விவசாயம் சார்ந்த அரசு என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறது.

 

டிடிவி தினகரன், அமமுக

மத்திய அரசு புதிதாக கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டத்திருத்தங்களை திரும்பப்பெறுவதாக பிரதமர் அறிவித்திருப்பது நிம்மதி அளிக்கிறது. குளிர்,வெயில்,மழை என எதையும் பொருட்படுத்தாமல் உயிர்த்தியாகங்கள் செய்து விவசாயிகள் நடத்திய அறவழிப் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி இது!

 

இதற்காக ஓராண்டு காலமாக போராடிய விவசாயிகள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளையும் ரத்து செய்யவேண்டும். இதனை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு எதிர்காலத்தில் வேளாண்மை சார்ந்த முடிவுகளை எடுக்கும்போது விவசாயிகளை முழுமையாக கலந்தாலோசித்து அவர்களின் தேவைக்கேற்ப ஆட்சியாளர்கள் செயல்பட வேண்டும்.

 

மேலும், தமிழக விவசாயிகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ள மீத்தேன், ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ போன்ற விவசாயத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் திட்டங்களை தமிழ்நாட்டில் செயல்படுத்தப் போவதில்லை என்ற உறுதியான முடிவையும் மத்திய அரசு எடுக்க வேண்டும்  எனக் கேட்டுக்கொள்கிறேன்.


  

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...