அந்திமழை - Andhimazhai.com - Andhimazhai - Web Portal for tamils
 
 
 
Andhimazhai - headlines, Tamil Latest News 0 பெட்ரோல், டீசல் விலை குறைப்பு! – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 0 ஆறு பேர் விடுதலை – முதலமைச்சர் ஆலோசனை! 0 தமிழகத்தில் அடுத்த ஐந்து நாட்களுக்கு மிதமான மழை – வானிலை ஆய்வு மையம்! 0 சர்ச்சைப் பேச்சு: விளக்கம் அளித்துள்ள லியோனி! 0 ஐபிஎல் இறுதி போட்டியில் வெளியிடப்படும் அமீர் கானின் லால் சிங் சத்தா திரைப்படத்தின் ட்ரெய்லர்! 0 விவாதங்களை நடத்த அனுமதிக்கும் நிறுவனங்கள் மீது தாக்குதலை நடத்தும் பாஜக அரசு – ராகுல் காந்தி 0 நெஞ்சுக்கு நீதி: திரைவிமர்சனம்! 0 கொடுங்கையூர் குப்பை கிடங்கில் தீ விபத்து: புகை சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதி! 0 தமிழ்நாட்டில் ஒமைக்ரான் பிஏ-4 வகை கொரோனா தொற்று பாதிப்பு உறுதி! 0 'பிரதமர் மோடி நாட்டை பாதுகாக்க வேண்டும்': ராகுல் காந்தி வலியுறுத்தல் 0 இன்று குரூப்-2, 2ஏ முதல்நிலைத் தேர்வு! 0 கைது நடவடிக்கையை தடுக்க முன் ஜாமின் கோரும் கார்த்தி சிதம்பரம்! 0 குஜராத், இமாச்சல் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடையும்: பிரசாந்த் கிஷோர்! 0 பேரறிவாளனுக்கு ஏற்ற பெண் கிடைத்தால் உடனே திருமணம் செய்ய தயார்: அற்புதம்மாள் 0 மதுரை தம்பதிக்கு நடிகர் தனுஷ் சார்பில் வக்கீல் நோட்டீஸ்!
Feed Facebook Twitter
 
முகப்பு | செய்திகள் | கேலரி | சினிமா | சிறப்புப் பகுதி | இதழ் | பத்தி

Andhimazhai Magazine Subscription 
 

சொமோட்டோ விவகாரம்; பூதாகரமாக வெடித்த மொழி பிரச்சனை!

Posted : செவ்வாய்க்கிழமை,   அக்டோபர்   19 , 2021  12:40:15 IST


Andhimazhai Image

மதுரையை சேர்ந்த விகாஸ் என்பவர் நேற்று (அக்டோபர் -18) சொமோட்டோவில் உணவு ஆர்டர் கொடுத்திருந்தார். அவர் கொடுத்த ஆர்டரில் ஒரு பொருள் டெலிவரி ஆகாததால் இது குறித்து சொமோட்டோ வாடிக்கையாளர் சேவையை சாட் வழியாக தொடர்பு கொண்டிருக்கிறார் அவர்.


அப்போது தனக்கு ஒரு உணவு டெலிவரி கிடைக்கவில்லை, அதற்குரிய பணத்தை திருப்பித்தர வேண்டும் என கேட்டிருக்கிறார். அவரிடம் சாட் செய்த வாடிக்கையாளர் சேவை பிரிவு அதிகாரி, உங்கள் வட்டார மொழி தடையாக இருக்கிறது. இந்தி தேசிய மொழி, எனவே ஓரளவு புரிந்து கொள்ளுகின்ற அளவிற்காவது அனைவரும் இந்தி கற்றுக்கொள்ள வேண்டும் என அவர் அறிவுரை செய்தார்.


இதனைக் கண்டு திகைத்த மதுரையைச் சேர்ந்த விகாஸ், இந்த உரையாடல் தொடர்பான ஸ்கிரீன் ஷாட்டுகளை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அவர் வெளியிட்டிருந்த ட்வீட் விரைவாகவே வைரல் ஆனது. மேலும் பல்வேறு தரப்பினரும் சொமோட்டோவின் பொறுப்பற்ற பதிலைக் கண்டித்து ட்வீட்களை வெளியிட்டு வருகின்றனர்.


இது குறித்து மக்களவை உறுப்பினர் கனிமொழி தனது டிவிட்டர் பதிவில், “குறிப்பிட்ட மொழிகளில் மட்டுமே சில நிறுவனங்களின் வாடிக்கையாளர் சேவை செயல்பட்டு வருகிறது. நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுடன் மாநில மொழியில் பேசுவதைக் கட்டாயமாக்க வேண்டும். வாடிக்கையாளர்களுக்கு இந்தி அல்லது ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. தமிழர்களுக்கு யாரும் யார் இந்தியர்கள் என்று பாடம் நடத்த வேண்டிய அவசியமில்லை.” என பதிவிட்டுள்ளார்.


இதற்கிடையே #RejectZomato என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.


இதனைத் தொடர்ந்து இச்சம்பவம் குறித்து சொமோட்டோ நிறுவனம் மன்னிப்பு கோரியிருக்கிறது. அந்நிறுவனம் தமிழில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் “வேற்றுமையில் ஒற்றுமை என்ற நம்தேசத்தின் மாறுபட்ட கலாச்சாரத்தின் மீதான எதிர்கருத்தை வாடிக்கையாளரிடம் காட்டிய ஊழியரை பணிநீக்கம் செய்துள்ளோம். மேலும் மக்களின் உணர்வுகளுக்கு எதிரான கருத்தை பகிரக்கூடாது என தொடர்ந்து எங்கள் முகவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறோம்.

கோவையில் விரைவில் ஒரு உள்ளூட் கால்செண்டர் அல்லது சர்வீஸ் செண்டரை உருவாக்கும் பணியில் உள்ளோம்.” என விளக்கம் அளித்திருந்தது.

 

இதனைத் தொடர்ந்து ஊழியர் பணிநீக்கம் செய்யப்பட்டது குறித்தும் பல்வேறு தரப்பினர் சமூகவலைதளத்தில் கேள்வி எழுப்பி நிலையில், சொமாட்டோவின் நிறுவனர் தீபிந்தர் கோயல் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அளித்துள்ள விளக்கத்தில், “ஒரு உணவு விநியோக நிறுவனத்தின் வாடிக்கையாளர் மையத்திலிருந்து யாரோ ஒருவர் செய்த தவறு தேசிய பிரச்சினையாக மாறிவிட்டது. நம் நாட்டில் சகிப்புத்தன்மை இப்போது இருப்பதை விட அதிகமாக இருக்க வேண்டும். இங்கு யாரைக் குறை சொல்வது எனத் தெரியவில்லை. நாங்கள் அந்த ஊழியரை மீண்டும் பணியமர்த்துகிறோம். வேலையை விட்டு நீக்குவது மட்டுமே எந்த பயனையும் அளிக்காது. அவர் மேலும் கற்றுக்கொண்டு முன்னேறிச்செல்ல வேண்டும். ஆனால் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும், எங்களது வாடிக்கையாளர் சேவை மையத்தில் வேலைபார்ப்பவர்கள் பெரும்பாலும் இளைஞர்கள். அவர்கள் இப்போதுதான் தங்களது தொழிலைக் கற்றுக்கொண்டு இருக்கிறார்கள்.


அவர்கள் பிராந்திய மக்களின் உணர்வுகளையும் மொழியின் முக்கியத்துவத்தையும் புரிந்து கொள்ளும் அளவிற்கு யாரும் நிபுணர்கள் அல்ல. நானும் தான். சொல்ல வேண்டியது என்னவென்றால், மற்றவருடைய குறைகளை நாம் பொறுத்துக்கொள்ள வேண்டும். சகித்துச் செல்ல வேண்டும். மற்றவர்களுடைய மொழி மற்றும் பிராந்திய உணர்வுகளை மதிக்க வேண்டும். தமிழ்நாடே, நாங்கள் உங்களை நேசிக்கிறோம். நாட்டை நேசிப்பதைப்போல உங்களையும் நேசிக்கிறோம். கூடுதலாகவோ, குறைவாகவோ அல்ல, நாம் வேற்றுமையில் ஒற்றுமையாக இருக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.

 

இதற்கிடையே, விகாஸ் தனது ட்விட்டர் பதிவில், "இந்த விவகாரம் குறித்து விளக்கமளித்ததுபோக, மீண்டும் அந்த ஊழியரை பணியில் சேர்க்க வேண்டுமெனக் கோருகிறேன். அவர்களுக்கு சிறப்பான பயிற்சி அளிக்க வேண்டும். தமிழர்களின் மரபு சுயமரியாதையே தவிர பழி வாங்குதல் அல்ல" என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.
  

 

Print

 

கேலரி
புகைப்படத்தொகுப்பு -
மேலும்...